Published:Updated:

'மாஃபியா'வின் 2-வது ஷெட்யூல் ; தந்தை தயாரிப்பில் புதிய படம்! - அருண் விஜய் அப்டேட்ஸ்

உ. சுதர்சன் காந்தி.

தன் தந்தை விஜயகுமார் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் அருண் விஜய்.

அருண் விஜய்
அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்யின் இரண்டாவது இன்னிங்ஸ் இவ்வளவு பிஸியாக இருப்பதற்கு, 'என்னை அறிந்தால்' படத்துக்கு மிகப் பெரிய பங்குண்டு. அதன்பிறகு, அவர் நடித்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அது அவருக்கான மார்க்கெட்டையும் உருவாக்கிக் கொடுத்தது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான 'தடம்' படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு, இந்தி ஆகிய 2 மொழிகளிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது.

அருண் விஜய் - தான்யா ஹோப்
அருண் விஜய் - தான்யா ஹோப்

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாஃபியா' படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. அதிவேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங்கை இன்னும் 10 நாள்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதைத் தொடர்ந்து, விவேக் இயக்கத்தில் பாக்ஸிங் தொடர்பான கதையிலும் நடித்து வருகிறார். தவிர, பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'சாஹோ', விஜய் ஆண்டனியுடன் 'அக்னி சிறகுகள்' போன்ற படங்களும் திரைக்கு வர காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தன் அப்பா விஜயகுமார் தொடங்கவிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்காக, ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக 'தடம்' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.