`கலப்படமில்லாத உணவைக் கண்டுபிடிக்கிற அதிகாரி ஜெகன். அவருக்கு நுகரும் குறைபாடுள்ள ஜோதி என்ற பெண்மீது காதல். அந்தக் காதலால் வரும் பிரச்னைகள், இதற்கு நடுவில் ஒரு பேய் என எங்கெங்கோ சென்று முடிகிறது மிச்சக்கதை.

ஜெகனாக சித்தார்த் தன் வேலையைச் செவ்வனே செய்துகொடுத்திருக்கிறார். நிகழ்காலத்து அன்னை தெரசா கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா. ஓரளவுக்கு நடிப்பை வெளிபடுத்தி யிருக்கிறார். சக அதிகாரி யாக வரும் சதீஷ், சில இடங்களில் கவலை மறந்து சிரிக்க வைக்கிறார். இவர்களைத் தவிர படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே வில்லன் கதாபாத்திரங்கள்தான். ப்ச்ச்...

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் மொத்தக் கதையையும் யூகித்துவிட முடிகிறது. அவ்வளவு பலவீனமான திரைக்கதை.

பேய்ப் படங்களில் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்ற லாஜிக்கையும் மீறி அத்தனை லாஜிக் ஓட்டைகள். போதாக்குறைக்கு, பல இடங்களில் அரைகுறை அரசியலும் அபத்தமான வசனங்களும் வேறு.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. தமன் போட்டிருக்கும் தீம் மியூசிக் மாஸ். பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பிலும் குறை ஒன்றுமில்லை.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் செய்யப்படும் கலப்படங்களையும், அதன் விளைவுகளையும் பின்னா லுள்ள நுண்ணரசியலையும் ஓரளவு தெளிவாய் பேசியதில் மட்டும் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் சாய் சேகர்.