Published:Updated:

ஸ்காரைத் தொடர்ந்து சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி!

உ. சுதர்சன் காந்தி.

`சைரா நரசிம்மா ரெட்டி' படத்திற்காக சிரஞ்சீவிக்கு டப்பிங் கொடுக்கிறார், அரவிந்த்சாமி.

அரவிந்த்சாமி
அரவிந்த்சாமி

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான், `சைரா நரசிம்மா ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மிகப்பெரிய பொருள் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

`சைரா நரசிம்ம ரெட்டி'
`சைரா நரசிம்ம ரெட்டி'

பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபெக்ட்ஸ் எனப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது, `சைரா நரசிம்மா ரெட்டி'. இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில், சிரஞ்சீவி நடித்த கேரக்டருக்கு அரவிந்த்சாமி குரல் கொடுக்கிறார். சமீபத்தில் 'தி லயன் கிங்' படத்தில் 'ஸ்கார்' என்ற கதாபாத்திரத்திற்கு இவர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது, 'சைரா நரசிம்மா ரெட்டி'.