Published:Updated:

"10 நாள் ஷூட் முடிஞ்சதும் அந்த சஸ்பென்ஸ் கலைச்சார் தனுஷ்!’’ - செம ஷாக் அபிராமி

Ammu Abhirami

`அசுரன்' படத்தில் இள வயது தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் `அம்மு' அபிராமியின் பேட்டி!

"10 நாள் ஷூட் முடிஞ்சதும் அந்த சஸ்பென்ஸ் கலைச்சார் தனுஷ்!’’ - செம ஷாக் அபிராமி

`அசுரன்' படத்தில் இள வயது தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் `அம்மு' அபிராமியின் பேட்டி!

Published:Updated:
Ammu Abhirami

`ராட்சசன்’ படத்தில் பள்ளிச் சிறுமி `அம்மு'வாக நடித்து கவனம் ஈர்த்தவர் அபிராமி. `ராட்சசன்’ படத்தின் ஸ்கூல் கேர்ள் இப்போது `அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். `அசுரன்’ படத்தின் அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.

`அசுரன்’ வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

Ammu Abhirami
Ammu Abhirami

``தாணு சார் மூலமாத்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. அவரோட தயாரிப்பில் ஏற்கெனவே `துப்பாக்கி முனை’ படத்தில் நான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு, `நீ நல்லா நடிக்கிற; உனக்கு சினிமாவுல நல்ல இடம் கிடைக்கும்’னு சொன்னார். பல பேர் பாராட்டிட்டு அப்படியே மறந்திடுவாங்க. ஆனால், தாணு சார் `அசுரன்’ படத்தில் ஒரு கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு வெற்றிமாறன் சார்கிட்ட சொல்லியிருக்கார். அப்பறம் நான் வெற்றிமாறன் சாரைப் பார்த்தேன். லுக் டெஸ்ட் எடுத்துட்டு, உடம்பை குறைக்கச் சொன்னாங்க. நானும் 5 கிலோ எடையை குறைச்சிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்பறம் 6 மாசம் வரைக்கும் எந்தத் தகவலும் இல்லை. சரி வேற ஆளை கமிட் பண்ணியிருப்பாங்கனு நினைச்சேன். ஆனா, திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி, `இன்னைக்கு சாயங்காலம் ஷூட்டிங்’னு சொன்னாங்க. இப்படித்தான் `அசுர’னில் கமிட்டானேன்.’’

`அசுரன்’ படத்தோட இசை வெளியீட்டு விழாவில், `இந்தப் பொண்ணு பயமே இல்லாமல் நடிச்சாங்க’னு தனுஷ் சொன்னப்ப எப்படி இருந்துச்சு?

``தனுஷ் மாதிரி ஒரு பெரிய நடிகர் பக்கத்துல இருக்கும்போது பயமில்லாமல் இருக்குமா? உள்ளுக்குள்ள பயம் இருந்தது. ஆனால், அதை வெளிய காட்டக்கூடாதுல. அந்த இடத்துல நான் ஒரு நடிகை. என்னோட வேலை என்னவோ அதை சரியாப் பண்ணிடணும்னு நினைப்பேன். எங்களுக்கெல்லாம் பெரிய ரிகர்சல் ப்ராஸஸே போயிட்டு இருக்கும். தனுஷ் சார் டக்குனு வந்து, ஷாட்டை ஓகே பண்ணிடுவார். எங்களுக்கு அதிகமா டேக் போனதில்லை. ஷாட்ல என் பக்கத்துல இருக்கிறது தனுஷ் இல்லை; படத்தோட கேரக்டர்னு நினைச்சுப்பேன். அதுனால அந்த கேரக்டரைப் பார்த்தா எனக்கு பயம் இருக்காது. இப்படித்தான் பயமில்லாமல் நடிச்சேன். என் நடிப்பை தனுஷ் சார் பாராட்டினப்ப ரொம்ப பெருமையா இருந்துச்சு.’’

`அசுரன்’ படத்துக்குப் பிறகு உங்க கரியர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

Asuran movie still
Asuran movie still

``எந்தப் படம் பண்ணுனாலும் அதிலிருந்து என்ன கிடைக்கும்னு நினைச்சு பண்றது இல்லை. அந்த வேலையை அந்த நேரத்தில் சரியா செய்யணும்னு நினைப்பேன். `அசுரன்’ என் கரியரில் மிக முக்கியமான, பெரிய படம். `தனுஷ், வெற்றிமாறன், ஜீவி’ கூட்டணியில் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் உருவாகுது, அதுல நான் இருக்கேன்னு நினைக்கும்போதே எனக்கு பெருமையா இருக்கு. கண்டிப்பா என்னுடைய கேரக்டர் பேசப்படும். இதுக்கப்பறம் நிறைய பட வாய்ப்புகள் வரும்னு நம்புறேன்.’’

`அசுரன்’ படத்தோட `கத்தரிப் பூவழகி’ பாட்டு செம ஹிட்; அதில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

Ammu Abhirami with choreographer sathish
Ammu Abhirami with choreographer sathish

``இந்தப் படத்தில் எனக்கு பாட்டு இருக்கு; தனுஷ் சாருக்கு ஜோடியா நடிக்கப்போறேன்னு எனக்குத் தெரியாது. எதையுமே எனக்கு சொல்லலை. நான் ஷூட்டிங் போனதும், எனக்கு சொல்ற சீனை மட்டும் பண்ணிட்டு இருந்தேன். 10 நாள் ஷூட் போனதுக்குப் பிறகுதான், நான் தனுஷ் சாருக்கு ஜோடியா நடிக்கிறேன்னு தெரிஞ்சது. அப்படி ஒரு நாள் ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, `இன்னைக்கு சாங் ஷூட்’னு சொன்னாங்க. நான் டான்ஸுல ரொம்ப வீக். இப்போதான் க்ளாஸ் போயிட்டு இருக்கேன். என்னால அதிக டேக் போயிடுமோனு பயந்துட்டே இருந்தேன். ஆனால், இந்தப் பாட்டோட கோரியோகிராபர் சதீஷ் மாஸ்டர்தான், எனக்கு பொறுமையா சொல்லிக் கொடுத்தார். அந்தப் பாட்டுல நான் நல்லா டான்ஸ் பண்ணியிருக்கேன்னு யாராவது சொன்னால், அதுக்கு முழு காரணமும் அவர்தான்.’’

அடுத்தடுத்த படங்கள் என்ன?

Ammu Abhirami
Ammu Abhirami

``ஜீத்து ஜோசப் சார் இயக்கத்துல கார்த்திக் சார், ஜோ மேடம் நடிக்கிற படத்துல ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கேன். ஆனால், ஜோ மேடம்கூட சேர்ந்து நடிக்கிற சான்ஸ் கிடைக்கலை. டப்பிங் அப்போ அவங்க நடிச்ச சில சீன்ஸ் பார்த்தேன். வேற லெவல்ல பண்ணியிருக்காங்க. அடுத்து ஷாரிக் ஹீரோவா நடிக்கிற படத்துலேயும் நடிச்சிருக்கேன். யங்ஸ்டர்ஸுக்குப் பிடிக்கிற படமா இது இருக்கும். இன்னும் சில படங்கள் பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரம் அதுக்கான அறிவிப்புகள் வரும்.’’