Published:Updated:

`காடு இருந்தா எடுத்துக்குடுவானுங்க.. ரூபாய் இருந்தா புடிங்கிகுடுவானுங்க; ஆனா...!’ - அசுரன் டிரெய்லர்

கலிலுல்லா.ச

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் அசுரன். `வெக்கை’ நாவலை தழுவி உருவாகியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள படத்தில், மஞ்சுவாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், `அசுரன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலே ட்விட்டரில் டிரண்டாகிவிட்டது. ஏராளமானோர் கண்டுகளித்துள்ளனர்.