Published:Updated:

செப்டம்பரில் ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா!

உ. சுதர்சன் காந்தி.

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்திற்காக, அதர்வாவும் அனுபமா பரமேஷ்வரனும் ரஷ்யா செல்லவிருக்கின்றனர்.

அதர்வா - அனுபமா
அதர்வா - அனுபமா

'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன். மசாலா பிக்ஸ் நிறுவனத்தின்மூலம் தானே தயாரித்தும் வருகிறார். இதில், அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். தவிர, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை செம்மொழிப் பூங்காவில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்றுவந்தது. '96' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'நின்னுக்கோரி' படத்தின் ரீமேக் என்ற தகவல்கள் வந்தாலும், அதை படக்குழு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

செப்டம்பரில் ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா!

இந்நிலையில், இந்த மாதத்திற்குள் சென்னையில் எடுக்க வேண்டிய போர்ஷன்களை முடித்துவிட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அடுத்த மாதம் ரஷ்யா புறப்பட உள்ளது படக்குழு. படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்த கையோடு, செப்டம்பர் இறுதியில் சந்தானத்தை இயக்கவிருக்கிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.