Published:Updated:

மாப்பிள்ளை அதர்வா... கோவா காதலியுடன் விரைவில் கல்யாணம்?!

''அதர்வாவுக்கும் கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குமிடையில் சில வருடங்களாகவே காதல். வீட்டுல சம்மதம் வாங்கிய பிறகே கல்யாணம் செஞ்சிக்கணும்கிற முடிவுல அதர்வாவும் சரி, அந்தப் பெண்ணும் சரி... உறுதியா இருக்காங்க. ''

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

ஆகாஷ்- சிநேகா இருவரும் வெளிநாட்டில், ஒன்றாகப் படித்த போது காதலித்தவர்கள். 'கோவிட்' ஊரடங்குக் காரணமாக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையின் ரிசார்ட் ஒன்றில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததுமே, "கொரோனா சூழல் சரியானதும், திரைத்துறை நண்பர்களுக்காக வரவேற்பு நடத்தப்படும்" என விஜய், முரளி வீட்டார் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆகாஷ், சினேகா பிரிட்டோ
ஆகாஷ், சினேகா பிரிட்டோ

கொரோனா நிலைமை நூறு சதவிகிதம் சரியாகாத நிலையில், அந்த வரவேற்புக்கு இன்னும் தேதி குறித்தது போல் தெரியவில்லை.

ஆனால், "அந்த வரவேற்பு நடக்கும் போது, கூடவே இன்னொரு திருமணம் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அந்த இன்னொரு திருமணம் முரளியின் மூத்த மகன் நடிகர் அதர்வாவின் திருமணமாம்.

``ஆரோக்கியமான போட்டின்னா ஓகேதான்!'' - யுவன் பார்வையில் ரசிகர்களின் ராஜா Vs ரஹ்மான்!

அதர்வாவின் நட்பு எல்லைக்குள் இருக்கும் சிலர் பெயர் குறிப்பிட வேண்டாமென சொல்லிவிட்டுப் பேசினார்கள்.

"அதர்வாவுக்கும் கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குமிடையில் சில வருடங்களாகவே காதல். வீட்டுல சம்மதம் வாங்கிய பிறகே கல்யாணம் செஞ்சிக்கணும்கிற முடிவுல அதர்வாவும் சரி, அந்தப் பெண்ணும் சரி உறுதியா இருக்காங்க. ரெண்டு தரப்பு வீட்டுலயும் சம்மதம் கிடைக்கத் தாமதமாச்சு. இந்தத் தாமதத்தாலேயே தம்பி ஆகாஷ் கல்யாணம் முன்கூட்டியே நடந்தது. இப்ப 'தம்பிக்கே முடிஞ்சுடுச்சே'ங்கிற பேச்சு அதிகமா எழ, தன்னுடைய கல்யாணம் குறித்தும் யோசிக்கத் தொடங்கினார்.

அதர்வா
அதர்வா

வீட்டுல விரைந்து முடிவெடுக்க கேட்டிருக்கார். ஒருவழியா அவங்க அம்மா சம்மதமும் கிடைச்சிட்டது போலத்தான் தெரியுது. அதனால 2021 ஜனவரிக்கு மேல கல்யாணம் இருக்கலாம்.

ஒருவேளை அதுவரைக்குமே கொரோனா சூழல் சரியாகலைன்னா, இந்தக் கல்யாணத்தையும் ஆகாஷ்-சிநேகா வரவேற்பையும் சேர்த்தே கூட வைக்கலாம்" என்றார்கள்

வாழ்த்துகள் அதர்வா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு