Published:Updated:

`` `ஏஞ்சல் நயன்தாரா... ஃபேவரிட் ராயப்பன்... 2 சர்ப்ரைஸ் பாடல்கள்!'' - `பிகில்' அட்லி அப்டேட்! #Bigil

ட்விட்டரில் அட்லியிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கான பதில்களின் தொகுப்பு இதோ...

ஸ்பெஷல் காட்சிகளோடு ’பிகில்’ படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில், நேற்று #AskAtlee என ட்விட்டரில் அட்லி ரசிகர்களோடு பேசினார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கான பதில்களின் தொகுப்பு இது!

ரஜினியோடு சேர்ந்து எப்போ படம் பண்ணப் போறீங்க?

’’நான் ரெடிதான். மாஸ் பண்றோம். எப்போதுமே ஐ லவ் தலைவர்.’’

’பிகில்’ ஆல்பம் சூப்பரா இருக்கு; ஏ.ஆர்.ரஹ்மானோடு வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..?

’’உண்மையாகவே வேற லெவல் அனுபவம்தான். நீங்க கேட்ட பாடல்களைத் தவிர படத்துல இன்னும் 2 பாட்டு இருக்கு. அந்தப் பாடல்கள் வர இடமும் வெறித்தனமா இருக்கும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘பிகில்’ல நீங்க ரொம்ப ரசிச்சு எடுத்த சீன் என்ன?

‘’இடைவேளைக்கு முன்னாடி வர ரயில்வே ஸ்டேஷன் சீன்.’’

’தெறி’, ’மெர்சல்’, ’பிகில்’ படங்களைத் தவிர விஜய்யோட எந்தப் படம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்..?

’’ ‘கில்லி’.‘’

பிகில்
பிகில்

மும்பையில படம் பார்த்தேன்னு சில பேர் சொல்றாங்களே; அவங்க சொல்ற விமர்சனங்களை ஏத்துக்கலாமா..?

’’இன்னைக்கு காலையிலதான் படத்தோட காப்பியைக் கொடுத்திருக்கோம். நாளைக்குக் காலையிலதான் கேடிஎம் ரிலீஸாகும். அதுக்கு முன்னாடி வேற யாரும் படம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.’’

’கே.ஜி.எஃப்’ படம் பார்த்தீங்களா..?

’’அந்தப் படத்தோட எல்லா ஆக்‌ஷன் காட்சிகளுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நடிகர் யஷ்ஷையும் ரொம்ப பிடிச்சிருந்தது.’’

ஷாருக் கானோடு படம் பண்றீங்களா..?

’’ஷாருக் சார், என்னையும் என் வேலையையும் ரொம்ப மதிக்கிறார். சீக்கிரமாகவே நாங்க சேர்ந்து வேலை பார்ப்போம்.’’

’பிகில்’ ராயப்பன் கேரக்டரைப் பற்றி எதாவது ஒரு சர்ப்ரைஸ் விஷயம் சொல்லுங்க..?

’’இதுவரைக்கும் நான் பார்த்ததுல ’மெர்சல்’ வெற்றிமாறன் கேரக்டர்தான் என் ஃபேவரைட். ’பிகில்’க்குப் பிறகு ராயப்பன் கேரக்டர்தான். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.’’

பிகில்
பிகில்

தனுஷோடு படம் பண்ணுவீங்களா..?

’’நான் அவரோட பெரிய ஃபேன். நிச்சயம் பண்ணுவோம்.’’

’பிகில்’ல ரெண்டு விஜய்யா... மூணு விஜய்யா..?

’’எனக்கு கணக்கு வராது ப்ரோ.’’

நயன்தாரா கேரக்டர் பற்றிச் சொல்லுங்க..?

’’ஃபுல் ஃபன் அண்ட் எமோஷன். அவங்கதான் படத்தோட ஏஞ்சல்.’’

’என்னைப் பற்றி என்ன சொல்ல ஆசைப்படுறீங்க’ என ’பிகில்’ படத்தில் நடித்திருக்கும் நடிகர் கதிர் கேட்க, ‘’நீ என் செல்லக்குட்டி’’ என பதிலளித்தார் அட்லி.

அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க..?

’’அவர் மேல் எனக்கு அதிக மரியாதை இருக்கு. 'விஸ்வாசம்' படமும், 'நேர்கொண்ட பார்வை'யும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.’’

பிகில்
பிகில்

’பிகில்’ல பிடிச்ச வசனம்..?

’’எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.’’

’விஜய்64’ படத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க..?

‘’லோகேஷ் கனகராஜோட வேலைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ’கைதி’க்கும் ’விஜய் 64’ படத்துக்கும் என்னுடைய வாழ்த்துகள் நண்பா.’’

''படத்துல இருக்கிற எக்ஸ்ட்ரா பாடல்களின் வரிகளை நம்ம புள்ளிங்களுக்குக் கொடுக்கலாமா’' என ’பிகில்’ படத்தின் பாடலாசிரியர் விவேக் கேட்க, ‘’நல்ல நேரமா பார்த்து இன்னைக்கு நீங்களே அதை போட்ருங்க அண்ணா’’ என பதிலளித்தார்.

ஜூனியர் என்.டி.ஆரைப் பற்றிச் சொல்லுங்க..?

’’அவர் மேல எனக்கு அதிக மரியாதையும் அன்பும் இருக்கு. என்னோட ஒவ்வொரு படத்தைப் பார்த்துட்டும் எனக்கு போன் பண்ணி பாராட்டுவார். ‘பிகில்’ பார்த்துட்டு என்ன சொல்றார்னு பார்ப்போம்.’’

''படத்தை முடிச்சதும் என்னோட இருப்பனு நினைச்சா, நீ என்ன பேட்டி கொடுத்திட்டு இருக்க'’ என அட்லியின் மனைவி பிரியா ட்விட்டரில் கேட்க, ‘’5 நிமிஷத்துல வந்துடுவேன் பாப்பா’’ என பதிலளித்தார் அட்லி. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு!

’பிகில்’ படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்க..?

’’நேத்து வரைக்கும் அது என் படம். இனிமேல் அது உங்க படம்.’’

ஜாக்கி ஷெராப்போடு வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..?

’’ஜாக்கி என்னோட ஃப்ரெண்ட். அவர் மேல எனக்கு அளவுகடந்த அன்பு இருக்கு. அவரோடு வேலை பார்த்தது செம ஃபன்னாக இருந்தது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு