Published:Updated:

விகடன் பைட்ஸ்: `சின்னதம்பி' காமெடி பின்னணி, ஸ்ருதி ஷேரிங், `முத்தழகு' வருத்தம்!

விகடன் பைட்ஸ்
News
விகடன் பைட்ஸ்

சின்னத்தம்பி முதல் சந்திரமுகி-2 வரை பல தகவல்களைப் பகிரும் இயக்குநர் பி.வாசு

" 'சின்னதம்பி' படத்துல கவுண்டமணி கேரக்டர் பிரமாதமா வொர்க் அவுட் ஆகியிருக்கும். அந்த கேரக்டருக்கான ஐடியா எப்படிப் பிடிச்சீங்க?"

பி.வாசு: "ஒரு படத்துல சிவாஜி சார் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவரா நடிச்சிருப்பார். இந்தப் படம் கொஞ்சம் சீரியஸ் சப்ஜெக்ட். இந்தப் படம் பற்றி நானும் காமெடி ஸ்கிரிப்ட் ரைட்டர் வீரப்பன் சாரும் பேசிட்டிருந்தப்போ, இதைக் கொஞ்சம் காமெடியா மாத்தி கவுண்டமணி சார் பண்ணுனா எப்படியிருக்கும்னு ஐடியா பிடிச்சோம்."

பி.வாசு
பி.வாசு

- சின்னத்தம்பி முதல் சந்திரமுகி-2 வரை பல தகவல்களைப் பகிரும் இயக்குநர் பி.வாசுவின் பேட்டியை முழுமையாக Vikatan App-ல் கட்டணமின்றி வாசிக்க > "குஷ்பு நடிக்கலைனா சின்னத்தம்பியே எடுத்திருக்க மாட்டேன்!" https://bit.ly/3f8iGJy

'தென்பாண்டி சீமையில...'

'சமீபத்தில் நீங்க பாடி வெளியிட்ட 'தென்பாண்டி சீமையில' பாட்டுக்கு வந்த கமென்ட்ஸ் பற்றி?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்: '' 'தென்பாண்டி சீமையில' பாட்டு எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப வருஷமா இந்தப் பாட்டை நண்பர்கள் இருக்குறப்போ வாசிப்பேன். அவங்க, 'இதை இன்ஸ்டால போஸ்ட் பண்ணு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, வெளியே இருக்குற நிறைய பேருக்கு, இப்படிப் பண்ணுனா பிடிக்காதுன்னு தெரியும். ஏன்னா, இந்தி அல்லது தமிழ்ப்பாட்டை இப்படிப் பாடுனா திட்டி நிறைய கமென்ட்ஸ் வரும். அதனால எந்த சோஷியல் மீடியாவுலயும் போஸ்ட் பண்ணாம இருந்தேன். ஆனா, இப்போ 'நமக்குப் பிடிச்ச விஷயத்தைப் பண்ணியிருக்கோம். அதை ஷேர் பண்ணுனா என்ன தப்பு'ன்னு தோணுச்சு. போஸ்ட் பண்ணிட்டேன்.''

- ஸ்ருதிஹாசன் பகிர்ந்த பர்சனல் பக்கங்களை முழுமையாக Vikatan App-ல் கட்டணமின்றி வாசிக்க > "அப்பா மாதிரி என்னால் பேச முடியாது!" https://bit.ly/2yUmEVG

முத்தழகு வருத்தம்!

''முத்தழகு அனுபவம் சொல்லுங்க?''

'' 'அது ஒரு கனாக்காலம்' முடிச்சதும் ஒரு நாள் அமீர் சார் ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. போனேன். கார்த்தி, நான்னு அந்தக் கதைக்கான போட்டோஷூட் ஒரு நாள் முழுக்க நடந்துச்சு. அவுட்புட் பார்த்துட்டு திருப்தியா இருந்ததும் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க. நான் கதை எதுவும் கேட்கவேயில்லை. அமீர் சார் மேல இருந்த நம்பிக்கையில நடிக்க ஒப்புக்கிட்டேன்.

ஷூட்டிங் போயிட்டிருந்தபோதே, படத்துக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள்கிட்ட நிறைய இருந்தது. அதுக்கேத்த மாதிரி படம் வெளியானதுக்குப் பிறகு படக்குழுல எல்லோருக்குமே அந்தப் படம் ஒரு அடையாளமா மாறிப்போச்சு. அதுவும் எனக்கு இத்தனை வருஷங்கள் கழிச்சும் முத்தழகு கதாபாத்திரம்தான் பெயர் சொல்லக்கூடியதா இருக்கு. இந்தப் படத்துல என்னுடைய நடிப்புக்காக தேசிய விருது கிடைச்சது வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒண்ணு.

முத்தழகு
முத்தழகு

அந்தப் படத்துக்குப் பிறகு முத்தழகு மாதிரியே நிறைய கதாபாத்திரங்கள் வந்துச்சு. ஆனா, எனக்கு அந்த வட்டத்துக்குள்ள சிக்க விருப்பமில்லை. கமர்ஷியல் ஹீரோயினாவும் படங்கள் பண்ண ஆசை இருந்தது. அதனால், முத்தழகை அந்தப் படத்தோட விட்டுட்டு அடுத்து சில கமர்ஷியல் படங்கள் தமிழ்ல பண்ணினேன். ஆனா, அந்தப் படங்கள் எதுவும் பெரிய அளவுல ஹிட் ஆகலை. நடிப்புக்கு தேசிய விருது வாங்கியும் எனக்கான இடம் தமிழ் சினிமால கிடைக்கலைங்கற வருத்தம் எனக்கு இப்பயுமே இருக்கு.''

- பிரியாமணி பகிர்ந்த திரை அனுபவங்களை முழுமையாக Vikatan App-ல் கட்டணமின்றி வாசிக்க > "கடைசியா எந்தப் படம் நடிச்சேன்னே மறந்துடுச்சு!" https://bit.ly/2yT6E6m

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV