Published:Updated:

மூன்று மாற்று முடிவுகள்! | உலக சினிமா #MyVikatan

world cinema

அவள் ரூமேனிய சமூகத்தால் விரக்தியடைந்து இருப்பதோடு, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளால் விதிக்கப்பட்ட கூடுதல் சமூக அழுத்தங்களோடு இருக்கிறாள்.

மூன்று மாற்று முடிவுகள்! | உலக சினிமா #MyVikatan

அவள் ரூமேனிய சமூகத்தால் விரக்தியடைந்து இருப்பதோடு, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளால் விதிக்கப்பட்ட கூடுதல் சமூக அழுத்தங்களோடு இருக்கிறாள்.

Published:Updated:
world cinema
World Cinema | Bad Luck Banging or Loony Porn | 2021 | 106 min |

Bad Luck Banging or Loony Porn - இது ஒரு ரோமானிய நகைச்சுவை திரைப்படம். ராடு ஜூட் எழுதி இயக்கிய இந்தப் படம் 71வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்பட்டது. கோல்டன் பியர் விருதை வென்றது. 94வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ரோமானிய நுழைவாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

எமி சிலிபியு, ஒரு ரோமானிய மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர். அவர் தன் கணவர் யூஜெனுடன் ஒரு செக்ஸ் டேப்பைப் படம்பிடித்தார். அதில் அவர்கள் சில பாலியல் செயல்களில் ஈடுபடுகிறார்கள். யூஜென் வீடியோவை ஒரு தனிப்பட்ட ஃபெட்டிஷ் தளத்தில் பதிவேற்றுகிறார். அதிலிருந்து அது அனுமதியின்றி பதிவிறக்கம் செய்யப்பட்டு பொது ஆபாச தளங்களில் மீண்டும் மீண்டும் வெளியிடப்படுகிறது. எமியின் பள்ளி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அவளது நடத்தைபற்றி அவதூறாகப் பேசுகின்றனர், வீடியோ பரவலாகப் பரப்பப்பட்ட ஒரு நாள் மாலையில், பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்துக்கு அவர்கள் அவளை அழைக்கிறார்கள். அப்போது அவள் ருமேனிய சமூகத்தால் விரக்தியடைந்து இருப்பதோடு, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளால் விதிக்கப்பட்ட கூடுதல் சமூக அழுத்தங்களோடு இருக்கிறாள்,

world cinema
world cinema

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எமி பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்துக்கு வருகிறாள். அங்கு அவளுடைய 'தார்மீக மீறல்' காரணமாக, பள்ளி அவளைத் தொடர்ந்து வேலைக்கு வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதற்காகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாக்களிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையானவர்கள் அவளுக்கு எதிராக வாக்களித்ததால், அவள் பதவி விலகுவாள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களில் ஓய்வுபெற்ற ருமேனிய ராணுவ லெப்டினன்ட், பாசிச அரசியல் சாய்வு கொண்ட ஜெட் விமானி, சமூக ரீதியாகப் பழமைவாத பாதிரியார் உட்பட பலரும் எமியின் செயல்களைப் பொதுவாக விமர்சிக்கிறார்கள். எமியின் நடத்தை மற்றும் கற்பித்தல் பாணியைக் கண்டிப்பதில், பெற்றோர்கள் தவறான பாலியல் மனப்பான்மை, ரோமாபோபியா, யூத எதிர்ப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறார்கள்.

மூன்று மாற்று முடிவுகளை வரிசையாக வழங்குவதன் மூலம் படம் முடிவடைகிறது. முதலாவதாக, எமி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் 'நிரபராதி' என்று விடுவிக்கப்படுகிறார். இது அவளுக்கும் மற்றொரு பெற்றோருக்கும் இடையே ஒரு மோதலுக்கு வழிவகுக்கிறது. இரண்டாவதாக, அவளுக்கு 'தண்டனை' அளிக்கப்படுகிறது. அதனால் ராஜினாமா செய்கிறாள். மூன்றாவதாக, அவளுக்கு மீண்டும் 'தண்டனை' வழங்கப்படுகிறது. ஆனால், அவள் வொண்டர் வுமனைப் போன்ற ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறாள். பெற்றோரையும் ஆசிரியர்களையும் வலைக்குள் சிக்கவைக்கிறாள்!

இந்த ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2021 டிசம்பர் 30 அன்று தொடங்கி 2022 ஜனவரி 6 வரை நடைபெறுகிறது. 8 நாள்கள் நீடிக்கும் இந்தத் திரைத் திருவிழாவின் படங்களை சத்யம் வளாகம் மற்றும் அண்ணா திரையரங்கில் கண்டு களிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: https://chennaifilmfest.com
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism