கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

நடுராத்திரி மட்டன் கிரேவி சாப்பிட்ட விஜய்சேதுபதி!

பகவதி பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
News
பகவதி பெருமாள்

சினிமால உதவி இயக்குநராகத்தான் என் கரியர் ஆரம்பிச்சது. இப்ப நடிகரானதுக்கு நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

சினிமாவில் உதவி இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கி நடிகரானவர் பகவதி பெருமாள். அறிமுகமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்திலிருந்து அதன் கேரக்டரான பக்ஸ்தான் இப்போது அவரது அடையாளம். விஜய்சேதுபதியின் குட்புக்கில் இவருக்கும் ஒரு தனியிடமுண்டு. ‘துக்ளக் தர்பாரி’ல் கவுன்சிலராகக் களைகட்டிய சந்தோஷத்தில் பூரித்த பக்ஸிடம் பேசினேன்.

‘‘ ‘சூப்பர் டீலக்ஸ்’ல நெகட்டிவ் ரோல் பண்ணியிருப்பேன். அந்த டைம்ல எங்கே போனாலும் என்னைப் பார்க்கற பெண்கள் பலரும் முகத்தை வேற பக்கம் திருப்பிக்குவாங்க. அப்படி ஒரு வெறுப்பை அந்த கேரக்டர் உண்டாகியிருக்கும். ஆனாலும் உள்ளுக்குள் எனக்கு விருது கிடைச்ச சந்தோஷம். கரியர் திருப்தியா போயிட்டிருக்கு...” பரவசமாகிறார் பக்ஸ்.

நடுராத்திரி மட்டன் கிரேவி சாப்பிட்ட விஜய்சேதுபதி!

``இயக்குநர் ஆகணும்னு வந்தீங்க. இப்ப நடிகராகிட்டீங்க..?’’

‘‘ஆமாங்க. சினிமால உதவி இயக்குநராகத்தான் என் கரியர் ஆரம்பிச்சது. இப்ப நடிகரானதுக்கு நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, எங்க செட்ல இருந்த பலரும் இயக்குநர்கள் ஆகிட்டாங்க. ‘சூப்பர் டீலக்ஸ்’ தியாகராஜன் குமாரராஜா, ‘ந.கொ.ப.கா’ பாலாஜி தரணீதரன், ‘96’, பிரேம், ‘லாபம்’ பி.ஆறுமுகக்குமார், ‘துக்ளக் தர்பார்’ டெல்லிபிரசாத், ‘அசுரவதம்’ மருதுபாண்டியன்னு லிஸ்ட் கொஞ்சம் நீளம். மாசத்துக்கு நாலஞ்சு கதைகள் கேட்டிடுவேன். அல்லது ஸ்கிரிப்ட்ஸ் வாங்கிப் படிச்சிடுவேன். குறும்படமானாலும் சரி, முழுநீளப்படமானலும் சரி, அது படமா வரும்போது என்னோட கேரக்டர் இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தா போதும். படம் முழுவதும் வரணும்னு விரும்பினதில்ல. அடுத்து நடிக்கற ‘யாக்கை திரி’, ‘பார்டர்’, ‘பேச்சிலர்’, ‘விசித்திரன்’ எல்லாமே வெரைட்டி கேரக்டர்கள்தான்.”

நடுராத்திரி மட்டன் கிரேவி சாப்பிட்ட விஜய்சேதுபதி!

``தொடர்ந்து விஜய்சேதுபதியோடு நடிக்கற அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘சேதுவை இப்ப எல்லார்க்கும் தெரியும். அவர் இந்த உயரத்தைத் தொடுறதுக்கு முன்னாடி பெரிய போராட்டத்தையே சந்திச்சவர். ‘வர்ணம்’னு ஒரு படத்துல நடிக்கும்போதுதான் சேது நண்பரானார். எங்க ரெண்டுபேருக்குள்ளுமே ஒரு பயங்கரமான பிணைப்பும் புரிதலும் எப்போதும் இழையோடும். ஒரு பெரிய லவ் உண்டு. வீட்டுச் சாப்பாட்டை சேது நல்லா ருசிச்சுச் சாப்பிடுவார். ஒருநாள் நடுராத்திரி ரெண்டு மணிக்கு மட்டன் கிரேவியைப் போட்டு கை நிறைய சாப்பாட்டை அள்ளி அள்ளி சாப்பிட்டுட்டு இருந்தார். ராத்திரி ரெண்டு மணிக்கு சாப்பிடுறார்னா, அவ்ளோ பசியா இருக்குதான்னு அவர்கிட்ட கேட்டேன். உடனே அவர் ‘நீ கொஞ்சம் கிட்டவாயேன்’னு கூப்பிட்டு எனக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டார். சான்ஸே இல்ல. மட்டன் கிரேவியோட டேஸ்ட் வேற லெவல். இன்னொரு வாய் கொடுன்னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். அப்ப அவர் சொன்னார்... ‘நடுராத்திரி ஆனாலும் ஏன் சாப்பிடுறேன்னு இப்ப புரிஞ்சுதா?’ன்னார். ஆனாலும் அவரால ஈஸியா உடம்புல வெயிட் கூட்டவும் முடியும். கேரக்டருக்கு ஏத்த மாதிரி குறைக்கவும் முடியும்.’’

நடுராத்திரி மட்டன் கிரேவி சாப்பிட்ட விஜய்சேதுபதி!

``நீங்க உங்க நண்பர்களின் படங்களில் மட்டும்தான் நடிப்பீங்கன்னு ஊருக்குள்ள நாலு பேர் உங்களைப் பத்திப் பேசிக்கறாங்களே?’’

‘‘மேலோட்டமா பார்த்தால் நான் நண்பர்கள் படத்துல மட்டும் நடிக்கற மாதிரி தெரியும். ஆனா, அப்படி இல்ல. நல்ல கதை, கேரக்டர்னா அது யாரோடதா இருந்தாலும் பண்ணுவேன். சின்னப் படம், பெரிய படம் வித்தியாசமும் பார்த்ததில்ல. நடிக்கத்தானே வந்தோம். ஸோ, பாரபட்சமில்லாமல் நடிக்கறேன். யார்கிட்டேயும் வாய்ப்பு கேட்டுப் போனதில்ல. ஆனா, யார் கூப்பிட்டாலும் அவங்கள சந்திச்சுப் பேசிடுறேன். அப்படித்தான் ‘ஜில்ஜங்ஜக்‘, ‘பிச்சைக்காரன்‘ ‘ராஜாமகன்’ படங்கள் அமைஞ்சது.’’

நடுராத்திரி மட்டன் கிரேவி சாப்பிட்ட விஜய்சேதுபதி!
நடுராத்திரி மட்டன் கிரேவி சாப்பிட்ட விஜய்சேதுபதி!

``இயக்குநர் கனவு இன்னும் இருக்கா?’’

‘`நான் இப்ப நடிப்பில் கவனம் செலுத்துறதால, டென்ஷனை ஏத்திக்காமல் சொகுசா பயணமாகுறேன். நான் டைரக்‌ஷன் பக்கம் திரும்ப இன்னும் டைம் எடுக்கும். ஆனா, எங்க செட்ல இயக்குநர் ஆகாத திறமைசாலிகள் நிறைய பேர் இன்னும் இருக்காங்க. அதுல மதுரகீதன் ஒருத்தர். லிங்குசாமி சார், ஹரி சார்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கார். அவர் இன்னும் படம் பண்ணல. பண்ணினா நிச்சயம் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைப்பார். இன்னொருத்தர் ஆர்த்தி, சந்தோஷ் சிவன் சார்கிட்ட ஒர்க் பண்ணினவர். அவரும் அவுட்ஸ்டாண்ட்டிங் இயக்குநரா மிளிர்வார். அடுத்து யோகேஷ், இப்ப எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா ஒர்க் பண்ணிட்டிருக்கார். எங்க செட்டே அவங்களுக்காக இப்ப வெயிட்டிங்.’’