Published:Updated:

இது திரைப்பட தயாரிப்பாளர்களை நசுக்கும் செயல் - பாரதிராஜா காட்டம் !

அலாவுதின் ஹுசைன்

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த பாரதிராஜா கருத்து

பாரதிராஜா
பாரதிராஜா

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், எந்தெந்த கதாநாயகர்களின் படத்துக்கு எவ்வளவு விகிதாச்சாரத்தில் விநியோகஸதர்களுடன் வணிகம் பேச வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கடிதத்தை நேற்று அனுப்பியது. இதன்படி முதல் வாரத்தில் 'A' சென்டர் தியேட்டர்களில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு ஒரு டிக்கெட்டில் 60 சதவிகிதமும் சூர்யா, 'ஜெயம்' ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு 55 சதவிகிதம் விநியோகஸ்தர்களுக்கும் மீதமுள்ள சதவிகிதம் திரையரங்குக்கும் பிரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

பாரதிராஜா
பாரதிராஜா
ரஜினி, அஜித், விஜய் - 60%... சூர்யா, தனுஷ், சிம்பு -55%  இது புது கணக்கு

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நசுக்குவது போன்ற அச்சம் எழுகிறது. இந்த விகிதாசார முறை நடைமுறைக்கு வந்தால் ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவார்கள். தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் தலைவரும் உறுப்பினர் இல்லாத நிலையில் அரசு நியமித்தக் குழு சங்கத்தை நிர்வகித்து வருகின்றது. அவர்களிடம் கலந்து ஆலோசித்து வெளியில் தெரியப்படுத்த விரும்புவதாகவும் இதை மீறி திரையரங்க உரிமையாளர்கள் செயல்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா