Published:Updated:

``விஜய் சார் சொன்ன அந்த சீக்ரெட்'' - `பீஸ்ட்' பட நடிகர் டாம் சாக்கோ

Shine Tom Chacko

" `நானும் எல்லோரையும் போல சாதாரண மனிதன்தான். எனக்கும் சில சமயம் கோபம் வரும்' எனச் சொன்னார் நடிகர் விஜய்" - டாம் சாக்கோ

``விஜய் சார் சொன்ன அந்த சீக்ரெட்'' - `பீஸ்ட்' பட நடிகர் டாம் சாக்கோ

" `நானும் எல்லோரையும் போல சாதாரண மனிதன்தான். எனக்கும் சில சமயம் கோபம் வரும்' எனச் சொன்னார் நடிகர் விஜய்" - டாம் சாக்கோ

Published:Updated:
Shine Tom Chacko

`பீஸ்ட்' படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் டாம் சாக்கோ (Shine Tom Chacko), தன்னுடைய அம்மாவை அழைத்துச் சென்று நடிகர் விஜய்யிடம் உரையாடியதைப் பற்றி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், "நான் சீக்கிரத்தில் கோபப்படுவேன். என்னுடைய அம்மா அதற்காக கடிந்துகொள்வார். பீஸ்ட் பட ஷூட்டிங் சென்னையில் நடந்த போது என்னுடைய அம்மாவையும் உடன் அழைத்து சென்றேன். 'உங்களுக்கு நிச்சயம் விஜயைப் பிடிக்கும். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போதும் பொறுமையாகவும் கூலாகவும் இருப்பார்' என்று என்னுடைய அம்மாவிடம் சொன்னேன். விஜயைச் சென்று சந்திக்கும்போது அம்மா அதைப் பற்றி விஜயிடம் கேட்டார். "நீங்க யாரிடமும் கோபமே பட்டதில்லையா" என்பதற்கு விஜய், "நானும் எல்லோரையும் போல சாதாரண மனிதன் தான். எனக்கும் சில சமயம் கோபம் வரும், ஆனால் அதனைக் கட்டுபடுத்த எப்போதும் முயற்சிப்பேன்." எனப் பதிலளித்தார்."

டாம் சாக்கோ
டாம் சாக்கோ

மேலும், "பணம் அதிகாரம் இருக்கும்போது நாம் கோபப்படுவதற்கான அதனைக் காட்டுவதற்கான சூழலும் கிடைக்கும். ஆனால் அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் தொடர்ச்சியாகக் கோபப்படாமல் இருக்கவும் அதிகளவு மனவலிமை தேவை. விஜய் சாரிடம் அந்த சூப்பர் பவர் இருக்கிறது" என்கிறார். குரூப், பீஷ்ம பர்வம், குருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் Shine Tom Chacko என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ல் திரைக்கு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism