Published:Updated:

"சிம்புவுக்கு நண்பன், விஷாலுக்கு வில்லன், சல்மான் கானுக்கு ரசிகன்!"- மனம் திறக்கும் பரத்

"எல்லா படத்தையும் பாசிட்டிவாதான் எடுத்திருக்கேன். காலபோக்குலதான் என்னை பதப்படுத்திக்கிட்டேன். ஃபெயிலர் பார்க்குறப்போ கொஞ்சம் அப்செட் ஆகும். இருந்தும், நம்ம பயணம் நம்மல பதப்படுத்தும். இதை என்னோட மெச்சூரிட்டி லெவலா பார்க்குறேன்.''

"லாக்டெளனால அஞ்சு மாசமா ஃபேமிலியோட இருக்கேன். இத்தனை நாள் வரைக்கும் ஜிம் க்ளோஸ்ல இருந்துச்சு. இப்போ ஓப்பன் பண்ணிட்டாங்க. இருந்தாலும் தினமும் வீட்டுலயே மாடி படிக்கட்டை பத்து முறை ஏறி இறங்குனாலே போதும். இதெல்லாம் விட வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க. இவங்க பின்னாடி சுத்துனதுலயே லாக்டெளன் சீக்கிரம் போற மாதிரியிருக்கு. 'போர் அடிக்குது'னு நிறையப் ஃப்ரெண்ட்ஸ் பீல் பண்ணீட்டு இருந்தாங்க. ஆனா, எனக்கு இப்படி எதுவும் தெரியல. பைனலி, வேலையை ரொம்ப மிஸ் பண்ணேன். கேமரா முன்னாடி நின்னுட்டு 'ஷார்ட் கேமரா ஆக்‌ஷன்' கேட்குற வார்த்தையை ரொம்ப மிஸ் பண்ணுனேன். இடையில ரெண்டு மூணு போட்டோ ஷூட் மட்டும் பண்ணுனேன். ''

``நாவல் எப்போது சினிமாவாக மாறும், ஸ்கிரிப்ட் இல்லாமல் ஃபிலிம் மேக்கிங் எப்படி?!'' - வெற்றிமாறன்

'காளிதாஸ்' படத்தோட சக்ஸஸ் மீட்ல உடைஞ்சி அழுது ரொம்பவே எமோஷன் ஆகிட்டீங்களே?

காளிதாஸ்
காளிதாஸ்

'' 'உண்மையை பேசுனேன். ஏன்னா, இந்தப் படத்தோட ரிலீஸூக்குப் பிறகு படத்தோட வெற்றியை எல்லோரும் கொண்டாடிடுவாங்க. ஆனா, ரிலீஸூக்கு முன்னாடி இருந்த வேதனைகள் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நம்ம கையில நல்ல படமிருக்கு. இதை எப்படி ஆடியன்ஸ் முன்னாடி கொண்டு போய் சேர்க்கணும்னு கவலையிருந்தது. இந்த வேதனையைதான் வெற்றி விழால சொன்னேன். 'காளிதாஸ்' படத்தோட மிகப் பெரிய வெற்றிக்கு ஊடக நண்பர்களுக்கு முதல்ல நன்றி சொல்லணும். ஏன்னா, இவங்கதான் முன்னே வந்து, 'இது நல்ல படம், ஆடியன்ஸூக்கு சேரணும்னு' பெருசா சப்போர்ட் பண்ணாங்க. அதே மாதிரி என்னோட படங்கள்ல 'காதல்'க்கு பிறகு விகடன்ல அதிக மார்க் கொடுத்து விமர்சனம் பண்ணுன படம் 'காளிதாஸ்'. லாக்டெளன் தொடங்குறதுக்கு முன்னாடி படம் வந்து அம்பத்து அஞ்சு நாள் வரைக்கும் ஓடியிருந்தது. கொரோனா நேரத்துல படம் தியேட்டர்ல ரிலீஸாகியிருந்தா ரொம்ப கஷ்டமாயிருந்திருக்கும். தப்பிச்சிட்டேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'ராதே' படத்துல சல்மான்கான்கூட நடிச்ச அனுபவம் சொல்லுங்க?

பரத்
பரத்

''அறுபது சதவிகிதம் வரைக்கும் 'ராதே' படத்துல வேலை பார்க்குறவங்க தமிழர்கள். பிரபுதேவா மாஸ்டர் மற்றும் அவரோட உதவி இயக்குநர்கள் எல்லாருமே தமிழ். கேமராமேன் Ayananka Bose இந்திகாரர். ஆனால், தமிழ் நல்லா பேசுவார். அவரோட அசிஸ்டென்ட் பலருக்கும் தமிழ் தெரியும். அதனால, எனக்கு இந்தி படம் பண்ண ஃபீல் கிடைக்கல. இந்தில சல்மான் கான்கிட்ட சீன்ஸ் பற்றி பிரபு மாஸ்டர் சொல்லிட்டு, அப்புறம் தமிழ்ல பேச ஆரம்பிச்சிருவார். ஏற்கெனவே ரெண்டு பேருமே படம் பண்ணியிருந்தனால நல்ல புரிதல் இருக்கும். அதே மாதிரி எனக்கும் செலிபிரிட்டி கிரிக்கெட்ல இருந்தே சல்மான் கானை தெரியும். அவரோட ரசிகன் நான். மும்பை டீமோட ஓனர் அவர்தான். அதனால, கிரிக்கெட் மேட்ச்சுக்கு வர்றப்போ பார்த்து பார்த்து என்னோட முகம் பதிஞ்சிருச்சு. நல்ல பரிட்சியமாகிருந்தார். எங்களோட முதல் ஷாட்டின்போது மீசையெல்லாம் வெச்சிட்டு அவர் முன்னாடி நின்னப்போ, 'looking different man'னு சொன்னார். அதுவே பெரிய காம்ப்ளிமென்ட்தான். படத்துல மொத்த சீன்ஸூம் சல்மான் கான் சார்கூடதான். போலீஸ் ஆபிஸரா சார் நடிச்சிருக்கார். அவருக்கு கீழே நான், மேகா ஆகாஷ், ஜாக்கி ஷெராஃப் இருப்போம். எங்க டீமே நல்லாயிருக்கும்."

சல்மான் கான்கூட ஜிம் வொர்க் அவுட் பண்ணீங்களா?

பரத்
பரத்

"இந்தப் படத்தோட ஷூட்டிங் முடியுறதுக்குள்ள உங்க கூட சேர்ந்து வொர்க் அவுட் பண்ணணும்னு' சொன்னேன். 'கண்டிப்பா பண்ணலாம்னு'னார். இன்னும் பத்து நாள் ஷூட்டிங் பாக்கியிருக்கு. இந்த நாள்கள்ல என்னோட ஆசை நிறைவேறிட்டா நல்லாயிருக்கும்.''

உங்க கேரக்டருடைய கணம் தெரிஞ்சுதான் 'செல்லமே' படத்துல கமிட் ஆனீங்களா?

"சிம்புவுக்கு நண்பன், விஷாலுக்கு வில்லன், சல்மான் கானுக்கு ரசிகன்!"- மனம் திறக்கும் பரத்

'உண்மையை சொல்லணும்னா, அப்போ என்கிட்ட படமே இல்ல. 'பாய்ஸ்' முடிச்சப்போ பதினெட்டு வயசுதான். ஹீரோ மெட்டிரீயலுக்கான பையனா நானில்லை. அப்போ, காந்தி கிருஷ்ணா போன் பண்ணி, 'இப்படியொரு கேரக்டர் இருக்குடா. நீ பண்ணுறீயா..? படத்துல ஹீரோ விஷால். ஆனா, 'செல்லமே' நீதான்'னு சொன்னார். 'சார், என்னை வெச்சு படம் பண்றீங்களே... இதுவே போதும். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்'னேன். அப்போ இருந்த தேவைக்காக அவசரத்துல பண்ண படம்தான் 'செல்லமே'. இப்போ வரைக்கும் என்னை வித்தியாசமா காட்டுனா படம் 'செல்லமே'. வில்லன் ஷேட்ல நடிச்சேன். ஆனால், விஷாலுக்கு வில்லன் கிடையாது.''

'வானம்' படத்துல சிம்புகூட நடிச்ச அனுபவம் சொல்லுங்க?

பரத்
பரத்

"சிம்பு ஒரு ஓப்பன் புக். ஏதாவது ஒண்ணை மட்டும் சொல்லி அவரை வரையறுக்கவே முடியாது. எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லிருவார். படத்துல சொல்ற மாதிரியே, 'இங்கே என்ன தோணுதோ, அதை அப்படியே பேசிடுவார். எனக்கும், அவருக்கும் ஒரே வயசுதான். அதனால, ஸ்பாட்ல ஜாலியா இருப்போம். ஸ்கூல் டைம்ல இருந்தே சிம்புவைத் தெரியும்.''

நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்... ஜுவாலா கட்டா விஷ்ணு விஷால் கல்யாணம் எப்போ?!

ஹை ஸ்பீட்ல இருந்த பரத்தோட சினிமா கரியர் கொஞ்சம் கீழே இறங்குனப்போ எப்படி எதிர்கொண்டீங்க?

"காலப்போக்குல எல்லாமே மாறுற ஒண்ணுதானே. 2005 to 2007 வரைக்கும் பேக் டு பேக் நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தேன். வருஷத்துக்கு அஞ்சு படங்கள் வரைக்கும் பண்ணிட்டு இருந்தேன். இந்த நேரத்துல சில படங்கள் சரியா போகமா இருந்தது. ஆனா, இதுக்காக நான் வருத்தப்படல. ஏன்னா, ஒவ்வொரு படங்களுமே ரொம்ப நேர்த்தியாதான் பண்றோம். ஒரு படம் ஓடக்கூடாதுனு நினைச்சுட்டு யாருமே பண்றது இல்ல. சக்சஸை நோக்கித்தான் எல்லாருமே பயணிக்கிறோம். எல்லாப் படத்தையும் பாசிட்டிவாதான் எடுத்திருக்கேன். காலப்போக்குலதான் என்னை பக்குவப்படுத்திக்கிட்டேன். தோல்விகளைப் பார்க்குறப்போ கொஞ்சம் அப்செட் ஆகும். இருந்தும், நம்ம பயணம் நம்மை பக்குவப்படுத்தும். இதை என்னோட மெச்சூரிட்டி லெவலா பார்க்குறேன். இது இல்லைனா அடுத்துனு போராட்டத் தன்மையை எனக்குள்ள ஏற்படுத்திக்கிட்டேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு