Published:Updated:

`பிறந்தவுடனே தூக்கிட்டுப் போனாங்க; 4 நாள் கழிச்சே குழந்தையைப் பார்த்தோம்!’ - `பிக்பாஸ்’ டேனி

`பிக் பாஸ்’ டேனி
`பிக் பாஸ்’ டேனி

டேனி - டெனிஷா திருமணத்திற்கு டெனிஷா வீட்டுத் தரப்பில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததால் மிகவும் சிம்ப்பிளாகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

``ஃபிரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிடாப்ல'’ வசனம் மூலம் பிரபலமானவர் டேனியல். பிக் பாஸ் 2-வது சீசனில் ஒரு போட்டியாளராகக் களமிறங்கியவர், அந்த ஷோவிலிருந்து வெளியேறிய அடுத்த சில தினங்களில் டெனிஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

டேனி திருமணம்
டேனி திருமணம்

டேனி- டெனிஷா திருமணத்துக்கு டெனிஷா வீட்டுத் தரப்பில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததால் மிகவும் சிம்ப்பிளாகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

டேனியிடம் பேசினேன். ``எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே, `யார் அதிகமா பயத்துல இருந்தாங்க’ன்னு போட்டியே வெச்சிடலாம். அந்தளவுக்கு திக் திக்னு இருந்திச்சு. டெனிக்குப் பயம் வர்றது சகஜம். ஆனா டேனிக்கு பயம் வந்ததுக்குக் காரணம் இந்த கொரோனாதான். கர்ப்பமடைஞ்சதுல இருந்து முறையா செக்-அப் போயிட்டிருந்த போதும், பயம் மட்டும் போகவே இல்லை. ஏன்னா, அக்கம் பக்கத்துல இருக்கிற சிலர் சும்மா இருக்க மாட்டேங்கிறாங்களே.

`டெலிவரி ரூமுக்குள்ள போற வரைக்கும் நெகட்டிவ் ரிசல்ட் காட்டுச்சு. டெலிவரிக்குப் பிறகு எடுத்தா பாசிட்டிவ்’னெல்லாம் கூட ஒருத்தங்க பீதி கிளப்பிவிட்டாங்க.

``கையில தங்கம் இருந்தா வெயிட் பண்ணலாம்; ஆனா என்கிட்ட?!''- `காக்டெய்ல்', `டேனி' ஓ.டி.டி ரிலீஸ் ஏன்?!

எப்படியோ குழந்தை பிறந்தது. `பையன்’னு மட்டும் சொல்லிட்டு அடுத்த செகண்ட் குழந்தையைத் தூக்கிட்டுப் போனவங்கதான், அதோட முகத்தைக்கூட நாங்க பார்க்கலை. நாலாவது நாள்தான் எங்க கண்ணுல காட்டினாங்க.

பிறந்த 48 மணி நேரத்துல அந்தப் புது உயிருக்கும் கோவிட் டெஸ்ட் எடுத்தாங்க. அந்த நேரமெல்லாம் விவரிக்க முடியாத படபடப்புல இருந்தேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சு இப்ப அம்மாவையும் மகனையும் வீட்டுக்குக் கூட்டி வந்துட்டேன்’’ என்கிறார் நிம்மதிப் பெருமூச்சுடன்.

அடுத்த கட்டுரைக்கு