Published:Updated:

`` 'வணக்கங்கண்ணா... வணக்கங்கண்ணா... வணக்கங்கண்ணா...’னு விஜய் சொன்னார்..!’’ - `பிகில்’ பேபி கீர்த்தனா

மா.பாண்டியராஜன்

'பிகில்’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடலில் ஆடியிருக்கும் பேபி கீர்த்தனாவின் பேட்டி...

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும் படம் `பிகில்’. இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், `வெறித்தனம்’ பாடல் அவர்களின் வெறியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கு என்றே சொல்லலாம்.

`என் நெஞ்சில் குடியிருக்கும்...!' - விஜய் குரலில் 'பிகில்' சிங்கிள் டிராக்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் இந்த `வெறித்தனம்’ பாடலில், விஜய்யுடன் சேர்ந்து பல குழந்தைகள் நடனம் ஆடியிருக்கிறார்கள். அதில் விஜய் டிவியின் `கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்’ நிகழ்ச்சியில் சிறந்த என்டர்டெயினர் விருது பெற்ற கீர்த்தனாவும் ஒரு ஆள். இந்தப் பாடலில் விஜய்யுடன் நடனமாடிய அனுபவத்தை அவரிடம் கேட்டோம்.

``நான் விஜய் டிவியில ஷோ பண்ணும்போது ரஜினி சார், விஜய் சார், சூர்யா சார் மாதிரியெல்லாம் நடிச்சிருக்கேன். விஜய் சார் நடிச்ச `தெறி’, `சர்கார்’ படம் மாதிரிதான் நான் ஷோவுல நடிச்சேன். அதை விஜய் சார் பார்த்திருப்பார் போல. `பிகில்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைப் பார்த்ததும், என்னை தூக்கி வெச்சுக்கிட்டு, ``வணக்கங்கண்ணா... வணக்கங்கண்ணா... வணக்கங்கண்ணா...’னு நான் ஷோல பண்ணுன மாதிரியே என்கிட்ட பண்ணிக் காட்டினார்.

`வெறித்தனம்’ பாட்டுக்காக மொத்தம் 5 நாள்கள் பயிற்சி எடுத்துக்கிட்டோம்; ஷூட்டிங்கும் 5 நாள்கள் போச்சு. விஜய் சார் எப்படி டான்ஸ் பண்றார்னு நேர்ல பார்க்க ரொம்ப ஆசையா இருந்தேன். அவர் டான்ஸ் ஆடும்போது, கேமராவைப் பார்த்து, பார்த்து ஆடினார். அதைப் பார்த்துட்டு, நானும் அவரை மாதிரியே பண்ணினேன். என்னை மாதிரி நிறைய குட்டி பசங்க இந்தப் பாட்டுல ஆடியிருக்காங்க. எங்ககிட்ட விஜய் சார் ரொம்ப ஜாலியா பேசினார்’’ என்றார் கீர்த்தனா.