Published:Updated:

`டெல்லி', `கோர்ட்' வார்த்தைகளுக்கு ம்யூட்!' -'பிகில்' மூலம் மீண்டும் தேசிய அரசியல் பேசுகிறாரா விஜய்?

'மெர்சல்', 'சர்கார்' என விஜய் படங்கள் கொஞ்சம் காட்டமாகவே அரசியல் பேசுகின்றன என்பது அவருடைய ரசிகர்களின் நம்பிக்கை.

Bigil
Bigil

விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பிகில்' திரைப்படம் இந்த மாதம் தீபாவளி வார இறுதிக்குத் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

பிகில்
பிகில்

'மெர்சல்', 'சர்கார்' என விஜய் படங்கள் கொஞ்சம் காட்டமாகவே அரசியல் பேசுகின்றன என்பது அவருடைய ரசிகர்களின் நம்பிக்கை. அதேவேளையில் போராட்டங்களில் பங்கேற்பது, ஆதரவு தெரிவிப்பது, நீட், பணமதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது விமர்சனம் வைப்பது என சினிமா கடந்தும் விஜய் அரசியல் பேசிவருகிறார். அதிலும் தற்போது 'பிகில்' இசை வெளியீட்டுவிழாவில், பேனர்கள் குறித்தும், தன் ரசிகர்கள் தாக்கப்படுவது குறித்தும், தகுதியானவர்களைத் தலைமைப் பொறுப்பில் வைப்பது குறித்தும் அவர் பேசியது, விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

மீண்டும் கதை திருட்டு சிக்கலில் `பிகில்' - ரிலீஸுக்குத் தடைகோரி வழக்கு!

இந்நிலையில், படத்தின் தணிக்கையில் நீக்கப்பட்ட வசனங்கள் மீண்டும் இதே கேள்வியை எழுப்பியுள்ளன. 'பிகிலு'க்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. இதில், சில வசனங்களில் 'டெல்லி', 'கோர்ட்' போன்ற வார்த்தைகளை மியூட் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, மேலும் சில வார்த்தைகளையும் மியூட் செய்யப்பட்டுள்ளன.

Bigil
Bigil

இன்று காலை முதல் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மியூட் செய்யும் அளவுக்கு டெல்லி மற்றும் கோர்ட் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், கண்டிப்பாக படத்தில் சர்ச்சைகுரிய விதத்தில் தேசிய அளவிலான அரசியல் பேசப்பட்டிருக்கும், என்று ரசிகர்கள் பதிவிட்டுவருகிறார்கள்.