Published:Updated:

180 கோடி பட்ஜெட், `ட்ரிபிளிங்' விஜய், கண்ணீர் கன்ஃபார்ம்! - `பிகில்' ஹைலைட்ஸ் சொல்லும் அர்ச்சனா கல்பாத்தி

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிரும் 'பிகில்' சீக்ரெட்ஸ்!

விஜய் - அர்ச்சனா கல்பாத்தி
விஜய் - அர்ச்சனா கல்பாத்தி

'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து, 'பிகில்' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்து ஹாட்ரிக் வெற்றிக்காகக் காத்திருக்கிறது விஜய் - அட்லி கூட்டணி. இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தியிடம் படம் குறித்துப் பேசினோம்.

பிகில் திகில்!

விஜய் படத்தைத் தயாரிக்கணும்ங்கிற உங்க ஆசை நிறைவேறிடுச்சு. 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் அந்தக் கூட்டத்தைப் பார்த்துப் பேசும்போது எப்படி இருந்தது?

"ரொம்ப எமோஷனலா இருந்தது. நான் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கு. என் கரியர்ல இது ஒரு மிகப்பெரிய மைல்கல்.விஜய் சார் படங்களின் பல நிகழ்ச்சிக்குப் போயிருக்கேன். 20 வரிசை தாண்டி உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்திருக்கேன். அப்புறம், தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சீட்ல கொஞ்சம் முன்னாடி உட்கார்ந்தேன். அப்புறம், விநியோகஸ்தர்களுக்கான இடம். 'சர்கார்' நிகழ்ச்சியில முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்தேன். இப்போ ஒரு தயாரிப்பாளரா மேடையில பேசிட்டேன். ரொம்ப சந்தோசமா இருக்கு!"

விஜய்யை முதல்முறை சந்திச்சது எப்போ, விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம்?

அர்ச்சனா கல்பாத்தி
அர்ச்சனா கல்பாத்தி

"அப்பாவுக்கு விஜய் சாரைப் பல வருடமா தெரியும். ஆறேழு வருடங்களா அவரை வெச்சுப் படம் பண்றதுக்கான முயற்சிகள் நடந்துக்கிட்டிருந்தது. என் கல்யாணத்துக்கு விஜய் சார் வந்திருந்தார். பலமுறை அவரை சந்திச்சிருக்கேன். அதனால முதல்முறை எப்போ, எங்கேன்னு ஞாபகம் இல்லை. இப்போதான் மொபைல், செல்ஃபி எல்லாம். அப்போ அதெல்லாம் இல்லாததனால போட்டோ எடுக்கிறதுக்கான வாய்ப்பில்லை. அப்பா இருந்ததனால, ஆட்டோகிராஃபும் வாங்கமுடியல. இந்தப் பயணம் ரொம்ப சூப்பரா இருந்தது. தூரத்துல இருந்து ஒருத்தரை ரசிக்கும்போது அவங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. பக்கத்துல சேர்ந்து வேலை செய்யும்போதுதான் முழுமையா தெரியும். விஜய் சாருடைய நடிப்பைத் தாண்டி அவர் சின்னச் சின்ன விஷயங்கள்னு நினைச்சுப் பண்ற பெரிய விஷயங்கள்தான் அவரைக் கொண்டாட வைக்குது. நான் தளபதி ரசிகன்னு சொல்ற மொத்தக் கூட்டமும் இதைத்தான் காரணமா சொல்லுது. வெளியே பெரிய பிம்பம் இருந்தாலும், அவரைப் பற்றி பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருந்தாலும், கூட இருந்து பார்க்கும்போது வேறமாதிரி ஒரு அனுபவத்தை கொடுக்குது!"

ஆறேழு வருடங்களா முயற்சி பண்ணி இப்போ இந்தப் படம் சாத்தியமாக எது முக்கியமான காரணம்?

"அப்பாவும், விஜய் சாரும்தான் முடிவு பண்ணாங்க. வழக்கமா இல்லாம வித்தியாசமா இருக்கணும்னு பல கதைகள் கேட்டோம். 'கில்லி', 'போக்கிரி' மாதிரி ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஹியூமர், எமோஷன்னு மாஸ் கமர்ஷியலா படமா இருக்கணும்னு முடிவு பண்ணோம். விஜய் சாரை இதுவரை ஃபுட்பால் பிளேயரா பார்த்ததில்லை. இதெல்லாம்தான் 'பிகில்' உருவாக முக்கியக் காரணம். தவிர, இதுல பெண்களுக்கான மெசேஜும் இருக்கு. அது விஜய் சார்கிட்ட இருந்து வரும்போது, அதுக்கான ரீச் அதிகமா இருக்கும்ல!"

விஜய் அரசியல் பன்ச், 'நோ' பேனர், குட்டிக் கதை...'பிகில்' இசை வெளியீட்டில் நடந்தது என்ன?

அட்லி எப்படி படத்துக்குள்ளே வந்தார்?

அட்லி - ஜி.கே.விஷ்ணு - அர்ச்சனா கல்பாத்தி
அட்லி - ஜி.கே.விஷ்ணு - அர்ச்சனா கல்பாத்தி

"நாங்க விஜய் சாரை வெச்சுப் படம் பண்ணலாம்னு நினைச்சப்போ, அட்லி விஜய் சார்கிட்ட கதை சொல்லியிருக்கார்னு தெரிஞ்சது. அப்புறம் எங்களுக்குக் கதை சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்குள்ளே 'பிகில்' படமா ஓடிக்கிட்டிருந்தது. ஃபுட்பால் பற்றிய கதைங்கிறதால, நிறைய ஆராய்ச்சி பண்ணித்தான் திரைக்கதை எழுதியிருந்தார். தவிர, அப்பாகிட்ட சொல்லி என்னை வொர்க் பண்ண வெச்சார். அவர் சொல்லாம இருந்திருந்தா, நான் படத்துக்குள்ளே வந்திருப்பேனான்னு தெரியல."

'மெசேஜ் சொல்ற படங்களை நான் பார்க்கமாட்டேன்'னு பல பேட்டிகளில் சொல்லியிருக்கீங்க. ஆனா, இந்தப் படத்துல மெசேஜ் இருக்கும்னு சொல்றீங்களே!

"வெறும் மெசேஜ் மட்டும் சொன்னா போர் அடிச்சுடும். ஏன்னா, வீட்ல அம்மா, அப்பா நமக்கு எப்போவும் ஏதாவது அட்வைஸ் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. நானே என் பையன்கிட்ட நாலு முறை அட்வைஸ் பண்ணா, அடுத்தமுறை 'தேங்க் யூ'னு சொல்லிட்டுப் போயிடுவான். படம் பார்க்கிறவங்களை என்டர்டெயின் பண்ணிட்டு, அதுல ஒரு மெசேஜ் சொன்னா சுவாரஸ்யமா இருக்கும். எல்லாப் பிரச்னையையும் விட்டுட்டு கொஞ்சநேரம் சந்தோஷமா இருக்கத்தான் தியேட்டருக்கு வர்றாங்க. அவங்களுக்கு வெறும் மெசேஜ் மட்டும் சொல்றது எனக்குப் பிடிக்காது."

ரஜினி ரசிகர்கள் எல்லாம் சேர்ந்துதான் 'பேட்ட' பண்ணோம்னு சொன்னாங்க. அதுமாதிரி விஜய் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து பண்ற படமா 'பிகில்' இருக்குமா?

விஜய்
விஜய்

"அதையெல்லாம் தாண்டி இருக்கும். எல்லோரும் அவ்வளவு உழைப்பைப் போட்டிருக்காங்க. நாங்க ஒரு விஷயத்தை நினைச்சுப் படம் பண்ணியிருக்கோம். நீங்க படம் பார்த்தா அது புரியும்!"

ஆடியோ லான்ச்ல விஜய் இப்படி ஜாலியா பேசுவார்னு எதிர்பார்த்தீங்களா?

"மேடையில எப்படி இருந்தாரோ, அப்படித்தான் படம் முழுக்க ஜாலியா இருப்பார், விஜய். 'சர்கார்' ஆடியோ லான்ச்ல அவர் பேசுனதை முதல் வரிசையில உட்கார்ந்து பார்த்தேன். எங்க படத்தின் நிகழ்ச்சியில அவருடைய குட்டிக் கதையைத்தான் ரொம்ப எதிர்பார்த்தேன். தவிர, நம்ம தலைமையில இந்த நிகழ்ச்சி நடக்குது. எல்லாம் சரியா இருக்கான்னு அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுக்கிட்டே இருந்ததனால, முழுமையா அவர் பேசுறதை உட்கார்ந்து கேட்க முடியல!"


``விஜய்ணா சொன்ன அட்வைஸ்... லோகேஷ் கேட்ட கேள்வி!''- விஜய் `64'அனுபவம் சொல்லும் சாந்தனு!

டிவிட்டர்ல எல்லோரும் உங்ககிட்ட அப்டேட் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. உங்களை வெச்சு வந்த மீம்ஸ் பார்த்தீங்களா?

அர்ச்சனா கல்பாத்தி
அர்ச்சனா கல்பாத்தி

"பார்த்தேன். ஒரு அப்டேட்டை வெளியிடத் தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் உரிமையில்லை. அது முழுக்க முழுக்க டைரக்‌ஷன் டீம் கொடுக்கிறதுதான். அவங்க 'இது ரெடியாகிடுச்சு. இப்போ அப்டேட் தரலாம்'னு சொன்ன பிறகுதான் நாங்க அதை வெளியிட முடியும். எல்லோரும் படத்தைப் பற்றித் தெரிஞ்சுக்க அவ்ளோ ஆர்வமா இருக்காங்கனு புரியுது. அதுக்காக டைரக்‌ஷன் டீமுக்குப் பிரஷர் கொடுக்கிறது தவறு."

விஜய் ஸ்பாட்ல எப்படி இருந்தார்?

"ரொம்ப டெடிகேஷன். ராத்திரி ரெண்டு மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சாலும், மறுநாள் காலையில ஏழு மணிக்கு வந்து ஃபுட்பால் பயிற்சி எடுத்துக்கிட்டிருந்தார். புதுசா ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு அவருக்கு ஆசை. கொஞ்சநேரம் டைம் கிடைச்சாலும் ஃபுட்பாலை வெச்சு 'ட்ரிபிளிங்' பண்ணிக்கிட்டு இருப்பார். அவருக்கு ஒரு ஷாட்ல திருப்தி இருந்தா மட்டும்தான் ஓகே சொல்வார். டைரக்டர் ஓகே சொன்னாலும் இவருக்குத் திருப்தி இல்லைன்னா, 'ரீடேக் போலாம்'னு நடிப்பார். அதனாலதான் இந்தளவு உயரத்துல இருக்கார். எமோஷனல் சீன்ல விஜய் சூப்பரா நடிச்சிருக்கார். படம் பார்த்துட்டு வரும்போது, நிச்சயமா எல்லோரது கண்களிலும் கண்ணீர் இருக்கும்!"

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch

படத்துக்கான பிசினஸ் எப்படி இருக்கு, பட்ஜெட் எவ்வளவு?

"வழக்கமா பிசினஸ் பண்ணும்போது இந்த ஏரியாவை எவ்வளவுக்கு விற்கணும், அந்த ஏரியாவை எவ்வளவுக்கு விற்கலாம்னு பெரிய டென்ஷன் இருக்கும். ஆனா, 'பிகில்'ல அந்த டென்ஷன் இல்லை. பலபேர் போட்டி போட்டுக்கிட்டு வந்து, 'நாங்க வாங்கிக்கிறோம்'னு முன்வந்தாங்க. இதுவே எங்களுக்குப் பெரிய பெருமை. படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடி!"