Published:Updated:

‘கோச்.... கோச்சுக்காதீங்க கோச்ச்ச்ச்ச்ச்...!’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

'பிகில்' விஜய்

டான் ராயப்பன்... கெத்து மைக்கேல்... பிகிலின் ப்ளஸ் மைனஸ் இவைதான்!

‘கோச்.... கோச்சுக்காதீங்க கோச்ச்ச்ச்ச்ச்...!’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

டான் ராயப்பன்... கெத்து மைக்கேல்... பிகிலின் ப்ளஸ் மைனஸ் இவைதான்!

Published:Updated:
'பிகில்' விஜய்

1. மீண்டும் அட்லி ஸ்டைல் கன்ட்ரோல் ­C + கன்ட்ரோல் V படம்தான். எப்போதும் ஒரே படத்தின் கதையை எடுத்து புதுமையாகத் திரைக்கதை சமைக்கிறவர், இந்த முறை 30 படங்களின் காட்சிகளைக் கோத்து பிகில் அடித்திருக்கிறார்! (அந்த முப்பதில் 25 தமிழ்ப் படங்கள்.)

Bigil
Bigil

2. 'தேவர் மகன்', 'தளபதி', 'வேட்டையாடு விளையாடு',' பாட்ஷா' தொடங்கி 'சக்தே இந்தியா', 'இறுதிச்சுற்று', 'தலைவா', 'காட் ஃபாதர்', 'ராஜாராணி' (ஆமாம், அவர் படமேதான்) வரை நிறைய ரெஃபரன்ஸ் காட்சிகளும் வசனங்களுமாக படம் ஓடுகிறது... ஓடுகிறது... விக்கெட் எடுத்தவுடன் ஓடும் இம்ரான் தாஹிரைப்போல ஓடிக்கொண்டேயிருக்கிறது... படம் முடிந்த பின்னும் ஓடுகிறது. (மக்களெல்லாம் நாங்க வீட்டுக்குப் போறதா வேண்டாமா என 'அட்லிண்ணா கதவு திறந்துவிடுங்கோ' எனக் காத்திருக்கிறார்கள்!)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3. அங்குமிங்குமாகக் கடன்வாங்கிய காட்சிகளை வைத்து படமெடுத்திருப்பதால் திரைக்கதையிலும் கதையிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். படம் மைக்கேல் என்கிற இன்னாள் ரவுடி, முன்னாள் கால்பந்தாட்ட வீரனின் கதையா அல்லது அக்ரகாரம் தொடங்கி அடித்தட்டு வரை பாதிக்கப்பட்ட பெண்களின் கதையா என்பதில் அநியாயக் குழப்பம். இதுபோக காட்ஃபாதர் ராயப்பன் என்கிற வடசென்னை கர்லியோனின் மகன் மைக்கேலின் (காட்ஃபாதர் ரெஃபரன்ஸ் வந்துடுச்சா!) எழுச்சியா... ஏழைப்பெண்களைக் காப்பாற்ற கனவு காணும் கதிரின் கதையா... இப்படியாக யாருடைய கதை என்றே தெரியாமல் படம் ஓடுகிறது. டைட்டிலில் கதை அட்லியுடையது எனப் போடுகிறார்கள்!

விஜய்
விஜய்

4. படத்தில் நாம் கண்டுபிடித்த கதையை ஒருவகையில் பாட்ஷாவின் உல்டா என்றும் சொல்லலாம். ஃபுட்பால் ப்ளேயர் என்பதை மறைத்துவிட்டு ரவுடியாக வாழும் ஒருவன் மீண்டும் ஃபுட்பால் ப்ளேயராக மாறுவது... என்கிற கேரக்டர் ஆர்க்கில் படம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது முதல் ஹாஃப். இரண்டாம் பகுதிக்கு கேங்ஸ்டர் கோச்சின் Chak De. ஐடியாவாக ஓகே. ஸ்போர்ட் ஜானரையும் கேங்ஸ்டர் ஜானரையும் இணைப்பதில் திரைக்கதைதான் 'முக்குதே'!

5. தமிழ்சினிமா டபுள் ஆக்‌ஷன் காட்சிகளில் எவ்வளவோ முன்னேறி எங்கேயோ வந்துவிட்டது. 'மெர்சல்' படத்தில்கூட டபுள் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாகவே இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் டபுள் ஆக்ஷன் காட்சிகளெல்லாம் அந்தக் காலத்து ஜெய்சங்கர் படங்களைவிட சுமாராக எடுக்கப்பட்டிருக்கிறது! வேறு யாருக்கோ விக் வைத்து ஓவர் தி ஷோல்டர் ஷாட்டெல்லாம் வைத்திருப்பது நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்து செல்கிறது. இதுபோக பிகில், கேங்ஸ்டர் மைக்கேலாக மாறும் விஷயத்தை ஒரு பிளாட்ஃபார்மிலேயே முடித்துவிட்டார்கள்!

விஜய் - நயன்தாரா
விஜய் - நயன்தாரா

6. நயன்தாரா ஆங்காங்கே முக்கியமான காட்சிகளில் வந்து இரண்டு வசனம் பேசுகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். நன்றாக நடித்திருந்தாலும் ஜாக்கி ஷெராஃப்பின் வில்லத்தனம் பயமுறுத்தவில்லை... அவர் போடுகிற திட்டங்களும் சப்பையாக இருக்கின்றன. இன்னும்கூட வெறித்தனம் ஏத்தியிருக்கணும் பாஸ்!

7. படத்தில் உண்மையான கால்பந்தாட்ட வீரரான ஐ.எம்.விஜயனை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு உண்மையான கால்பந்தாட்ட வீரரை ஏனோ ஒரு கேங்ஸ்டராகக் கையில் கத்தியோடு திரிய விட்டிருப்பது தவறாகத் தோன்றியது. கால்பந்தாட்டம் பற்றி தெரிந்தவர்களுக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் அவருடைய சாதனைகளும் வேதனைகளும் தெரிந்திருக்கும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கால்பந்தாட்டத்தின் மூலம் முன்னேறிய ஒரு மனிதர் அவர். அப்படிப்பட்ட ஒருவரை இதுமாதிரி படத்தில் இப்படி நடிக்க வைத்திருக்க வேண்டாமே அட்லி!

பிகில்
பிகில்

8. ஓவர் டோஸ் கேங்ஸ்டர்களால் முதல் பாதி ஏனோதானோ என்று எங்கெங்கோ சுற்றி சுற்றி வருகிறது. முதல் பாதி காட்சிகளை மொத்தமாக வெட்டி தூக்கிவிட்டால்கூட இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் ஒரு ஷாட்கூட குழப்பாமல் புரியும். படத்தை காப்பாற்றுவது இடைவேளைக்குப் பிறகான அந்த ஓகே காட்சிகள்தான். முதல்பாதிதான் நம்மை சோதிக்கிறது. இரண்டாம் பாதியை பரபரப்பான கால்பந்தாட்டக் காட்சிகளும் சண்டைக்காட்சிகளுமாக ஜாலியாகக் கடக்கமுடிகிறது.

9. அட்லி படங்களின் கதைகளும் காட்சிகளும் புதுமையாக இல்லாவிட்டாலும் ஃப்ரெஷ்ஷான ட்ரீட்மென்ட், ரிச்சான காட்சியமைப்பு, க்யூட்டான வசனங்கள் எனப் புதுமை காட்டும். அதுவே, ஆடியன்ஸை அந்தக் காட்சியோடு கட்டிப்போட்டுவிடும். 'மெர்சல்' வரைக்குமே அது அவருக்குக் கைகொடுத்திருந்தது. ஆனால், இந்த முறை அதிலும் பெருமளவு அட்லிக்கு சறுக்கலே. பல காட்சிகளில் ரிச்னஸ், க்யூட்னஸ் எல்லாம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது.

பிகில்
பிகில்

10. இத்தனை குழப்பங்கள் சலிப்புகள் இருந்தாலும் படத்தை ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய ஸ்டைல் நடிப்பால் காப்பாற்றுவது விஜய். என்னதான் வயதான கெட்அப் போட்டு கொரகொரப்பாகப் பேசினாலும் மனிதர் டீன்ஏஜ் பையனாகத்தான் தெரிகிறார். அது ராயப்பனுக்கு மைனஸ், மைக்கேலுக்கு ப்ளஸ்.

11. படத்தின் ஒளிப்பதிவும் லைட்டிங்கும் அட்டகாசமாக இருந்தாலும், மணிப்பூர் டீமோடு தமிழ்நாடு தோற்றுப்போகும் ஒரு கால்பந்தாட்ட காட்சி தவிர மற்ற மேட்ச்கள் எல்லாமே வீடியோகேம்போல இருக்கிறது. அதை இன்னும்கூட எதார்த்தமாக எடுத்திருந்தால் ஒரு விளையாட்டுப்போட்டியின் உணர்வுகள் நமக்கும் கடத்தப்பட்டிருக்கும். ரஹ்மானின் இசையில் பாடல்கள் எல்லாமே தீபாவளி பட்டாசு என்றால் பின்னணி இசையிலும் கமர்ஷியல் முகம் காட்டியிருக்கிறார்.

bigil movie
bigil movie

12. அவ்வளவு அறம் பேசிவிட்டு டீம் ப்ளேயர்ஸை உருவகேலி பண்ணி ஊக்கப்படுத்துகிற டெக்னிக் அவசியமேயில்லாத ஆணி. படம் நெடுக பக்கம் பக்கமாக பர்சனாலிட்டி டெவலப்மென்ட் கிளாஸுக்குள் தெரியாமல் நுழைந்துவிட்டது போல வசனம் என்ற ஸ்டேட்டஸ் கோட்ஸ் போடுகிறார் விஜய். படத்தில் ஆங்காங்கே தொடர்பே இல்லாமல் நீட் அனிதா, ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிசூடு ரெஃபரன்ஸ்கள் எல்லாம் எதற்கென்றே தெரியாமல் வந்து போகின்றன.

13. படமாக்கும் விளையாட்டு குறித்த தெளிவான தேடலோ அறிவோ இல்லாமல், அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட தமிழின் இன்னுமொரு ஸ்போர்ட்ஸ் (கேங்ஸ்டர்) படம். முதல் பாதியைக் கண்ணை மூடிக்கொண்டு ஜம்ப் பண்ணித் தாண்டிவிட்டால் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் ஜாலியாகக் கடக்கலாம்!