Published:Updated:

`என் நெஞ்சில் குடியிருக்கும்...!' - விஜய் குரலில் 'பிகில்' சிங்கிள் டிராக்!

விஜய்பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத்தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

``அன்புள்ள விஜய்...உனக்கு ஒரு நீண்ட பிகில்!'' - விஜய்க்கு அவர் அம்மா எழுதிய கடிதம் #VikatanExclusive
bigil second single
bigil second single

படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான `சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய்பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இது தொடர்பாக நேற்று பாடல் மேக்கிங் ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலானது.