Published:Updated:

சிங்கப்பெண்களுக்குச் சிக்கல், நண்பேன்டா ராசி! `பிகில்' ஸ்கூப் #SneakPeek #MovieLine

பிகில் MovieLine
News
பிகில் MovieLine

இன்னும் மூன்று நாள்களில் திரைக்கு வர இருக்கிறது `பிகில்'. இதற்கிடையே சென்சார் முடித்திருக்கும் `பிகில்' படத்தின் சுவாரஸ்யங்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டார் ஒரு சினிமா பிரபலம். அந்த சுவாரஸ்யங்கள் இங்கே அப்படியே!

* தாதாவான அப்பா விஜய், தன் பகுதியில் வசிக்கும் இளம்பெண்களைக் கால்பந்து விளையாட ஊக்கப்படுத்துகிறார். அந்தப் பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்தும் அவர்களுக்கான அங்கீகாரம் ஏனோ மறுக்கப்படுகிறது. அவர்கள் திறமை இருந்தும் அவமானப்படுத்தப்படுவதை கண்டு கொந்தளிக்கிறார், அப்பா விஜய். அவர்களின் உரிமைக்காகப் போராடுகிறார்.

* ஒரு கட்டத்தில் அப்பா விஜய்யை அதிகாரிகள் கேலி செய்துவிட வெகுண்டெழும் அவர், அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டுத் திரும்புகிறார். இதனால் அவமானப்படும் வில்லன், அப்பா விஜய்க்கு நாள் குறிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

* அப்பா கனவை நிறைவேற்ற பெண்கள் அணிக்கான உரிமையைத் போராடி பெற்றுத் தருகிறார், மகன் விஜய். அவர்களின் கால்பந்து குழுவுக்குத் தன்னுடைய நண்பனை பயிற்சியாளராகவும் நியமிக்கிறார். முதலில் கால்பந்து போட்டியில் அவர்கள் அணியும் இடம்பெறும் என அறிவித்துவிட்டு, பின்னர் விளையாட்டு மைதானத்தில் அவர்களைப் போட்டியில் பங்கேற்கவிடாமல் செய்யும் வேலைகளும் நடக்கின்றன. இதற்கு நியாயம் கேட்கச் செல்லும் விஜய்யின் நண்பரையும் தீர்த்துக்கட்டுகிறது வில்லன் கும்பல்.

Bigil First Look
Bigil First Look

* ஆக்ரோஷமாகிறார் விஜய்! ஒரு பக்கம் அப்பாவைக் கொலை செய்தவர்களைப் பழிக்குப் பழி வாங்கும் வெறித்தனம், இன்னொரு பக்கம் உயிருக்கு உயிரான நண்பனின் தியாகம் என வில்லன்களை வேட்டையாடும் வெறியோடு அலைகிறது, விஜய் மனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* முதலில் அப்பாவின் கனவு நனவாக, பெண்கள் அணிக்குப் பயிற்சியாளராக, தானே தலைமையேற்கிறார். பிறகு போராடி, அவர்களுக்குப் பதக்கம் பெற்றுத் தருகிறாரா என்பதும், வில்லன் கும்பலை அழிக்கிறாரா என்பதும்தான் 'பிகில்' படத்தின் க்ளைமாக்ஸ்!

bigil movie
bigil movie

* இதற்கிடையே, 'பிகில்' படத்தின் கதை தன்னுடையது என செல்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், 'பிகில்' படத்தின் மீது காப்புரிமை வழக்கு தொடர செல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 'பிகில்' படத்துக்கான ரிலீஸில் இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. படம் திட்டமிட்டபடி வருகிற 25-ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.