Published:Updated:

'பிகில்' படத்துக்காக விஜய்யின் வெறித்தனமான முதல் பாடல்!

'தெறி' 'மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'பிகில்' படம் அப்டேட்!

'பிகில்'
'பிகில்'

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'பிகில்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வழக்கம் போல் இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மேலும், இந்த அறிவிப்பு ‘டீசர், ட்ரெய்லர், சிங்கிள், ஆடியோ ரிலீஸ் தேதி, படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் கிடையாது. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். என்னவென்று யோசியுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜய்
விஜய்

இந்நிலையில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ``ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன் முதலாக விஜய் பாடுகிறார் என்றும். இதுதான் முதல் பாடல், தலைப்பு வெறித்தனம் என்றும் தெரிவித்துள்ளார். கடைசியாக விஜய் பைரவா படத்தில் குத்து பாடல் ஒன்றை சந்தோஷ் நாராயணன் இசையில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.