Published:Updated:

`விளையாட்டாலதான் நம்ம அடையாளமே மாறப்போகுது!'- `வெறித்தனமான பிகில்' டிரெய்லர்! #BigilTrailer

ட்விட்டரில் #BigilTrailerDay என்ற ஹேஷ்டேக்கும் டிரண்டாகி வருகிறது

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'பிகில்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில்
பிகில்

தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று மாலை படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், ட்விட்டரில் #BigilTrailerDay என்ற ஹேஷ்டேக்கும் டிரண்டாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.