Published:Updated:

`உனக்காக வாழ நினைக்கிறேன்'- `பிகில்' படத்தின் அடுத்த சிங்கிள்

`பிகில்' படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம், 'பிகில்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வழக்கம் போல் இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது மற்றொரு சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. `உனக்காக' என்று தொடங்கும் அந்தப் பாடல், விஜய் - நயன்தாராவின் காதல் பாடலாக வெளியாகித் தற்போது வைரலாகிவருகிறது.

`விஜய் லைவ்வில் பாடுகிறார்!' 
- `பிகில்' விழாவுக்கு மாஸ்டர் ப்ளான்