Published:Updated:

" 'ஆடை' மாதிரி படத்துல நடிக்க நானும் ரெடி!" - பிந்து மாதவி

தமிழ் ஹீரோயின்கள் கொடுத்து வெச்சவங்க. பெண்களை மையப்படுத்தி இப்போ வர்ற பல படங்களைப் பார்த்து நான் ரொம்ப வியந்திருக்கேன். கடந்த வாரம் ரிலீஸான 'ஆடை' படத்துக்குப் பிறகு, அமலாபால் மேல தனி மரியாதையே வந்திடுச்சு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"தெலுங்குப் பொண்ணா இருந்தாலும், சென்னைதான் எனக்கு முதல் வீடு" - கோலிவுட்டின் மீது ஒரு உரிமையோடே பேசுகிறார், நடிகை பிந்துமாதவி. நானி, சிவகார்த்திகேயன் எனப் பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள பிந்து மாதவி, தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.

Bindu Madhavi
Bindu Madhavi

தமிழ் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடமாச்சு. கோலிவுட் உங்களை எப்படிப் பார்த்துக்குது?

"ரொம்ப நல்லா பார்த்துக்குது. ஹைதராபாத்ல இருக்கிறதைவிட இங்கேதான் அதிகமா இருக்கேன். அப்பா வேலையில இருந்து ரிட்டையர்டு ஆனதுக்குப் பிறகு, அவரும் அம்மாவும் ஹைதராபாத்ல இருந்து எங்க கிராமத்துக்குப் போய் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்காங்க. நான் இங்கே வந்துட்டேன். சென்னைதான் இப்போ எல்லாமே!"

நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டீங்க போல, நீங்களே டப்பிங் பேசலாமே?

Bindu Madhavi
Bindu Madhavi

"பேசலாம்தான். ஆனா, யாரு கேட்பாங்க. என் தமிழ் அரைகுறையாதான் இருக்கும். கடைசியா நடிச்ச 'கழுகு 2' படம் வரை எனக்கு வேற டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான் வாய்ஸ் கொடுப்பாங்க. அடுத்த படத்துல நானே டப்பிங் பேச முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

."நீங்க நடிக்கிற படங்கள்ல சிவகார்த்திகேயன், நானி, சூரி, அருள்நிதி, விமல், கிருஷ்ணானு யூத்ஃபுல் டீமாதான் இருக்கு. உங்க கோ-ஸ்டார்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க?

Bindu Madhavi
Bindu Madhavi

"ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில ஸ்பெஷல். அவங்களைப் பத்திச் சொல்லணும்னா, நாள் முழுக்கப் பேசினாலும் பத்தாது. சுருக்கமா சொல்லணும்னா, சூரிதான் தமிழ் சினிமாவுல எனக்குக் கிடைச்ச முதல் ஃப்ரெண்டு. சிவகார்த்திகேயன்கூட நான் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வுல நடிக்கும்போது, அவர் வளர்ந்து வர்ற ஒரு ஹீரோ. ஆனா, இப்போ ஒரு சூப்பர் ஸ்டார்... ஸோ, வியந்துதான் பார்க்கிறேன். நானி, சினிமாவுக்குக் கிடைச்ச பெஸ்ட் நடிகர்களில் ஒருவர். விமல் ரொம்ப வெகுளி.. அதிகமா பேசக்கூட மாட்டார். அருள்நிதி என்கூட நடிச்ச சமயத்திலேயும் சரி, அதுக்குப் பிறகும் சரி அவர் தேர்ந்தெடுக்கிற கதைகளுக்காகவே ஸ்பெஷல்தான்."

உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச அல்லது ரொம்ப கம்ஃபர்டபிளான நடிகர் யார்?

Bindu Madhavi
Bindu Madhavi

"கிருஷ்ணாதான். 'கழுகு', 'கழுகு 2'னு ரெண்டு படத்துல அவர்கூட சேர்ந்து நடிச்சுட்டேன். அவர்கூட நடிக்கும்போது அவ்வளோ ஈஸியா இருக்கும். படமும் நல்லா வரும்."

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் இப்போ அதிகமா வருது. உங்களுக்கும் அப்படியான படங்களில் நடிக்கிற ஆசை இருக்கா?

Bindu Madhavi
Bindu Madhavi

"கண்டிப்பா இருக்கு. அந்த ஆசை இல்லாம இருக்குமா! தமிழ் ஹீரோயின்கள் கொடுத்து வெச்சவங்க. பெண்களை மையப்படுத்திய பல படங்களைப் பார்த்து, நான் ரொம்ப வியந்திருக்கேன். கடந்த வாரம் ரிலீஸான 'ஆடை' படத்துக்குப் பிறகு அமலாபால் மேல ஒரு தனி மரியாதையே வந்திடுச்சு. அவங்க எடுத்துக்கிட்ட கதாபாத்திரமா இருக்கட்டும், அந்தப் படத்துக்கு வெளிய இருந்து வந்த சிக்கல்களை எதிர்கொண்டு படத்தை ரிலீஸ் பண்றதுக்காக அவங்க போராடுன விதமா இருக்கட்டும்... எல்லாமே என்னை அவங்க ரசிகை ஆக்கிடுச்சு!"

'ஆடை' மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்னு சொன்னா, உங்க பதில் என்ன?

"நான் இப்போவே ரெடிதான்!"

இயக்குநர் பாலா படத்துல நடிக்கப்போறதா கேள்விப்பட்டோம்?

Bindu Madhavi
Bindu Madhavi

"நானும் கேள்விப்பட்டேன். நான் பாலா சாரை சந்திச்சது உண்மைதான். அவர் இயக்கத்துல நடிக்கணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா, இப்போ அவர் சூர்யா சார்கூட ஒரு படம் பண்றார். அதுக்குப் பிறகு நடக்குதானு பார்ப்போம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு