Published:Updated:

சினிமா விமர்சனம் - பிஸ்கோத்

பிஸ்கோத்
பிரீமியம் ஸ்டோரி
பிஸ்கோத்

படத்தின் ஒரே ப்ளஸ் சந்தானம் மட்டுமே.

சினிமா விமர்சனம் - பிஸ்கோத்

படத்தின் ஒரே ப்ளஸ் சந்தானம் மட்டுமே.

Published:Updated:
பிஸ்கோத்
பிரீமியம் ஸ்டோரி
பிஸ்கோத்
பாட்டி சொல்லும் கதை கள் நிஜமானால், ஓவர்நைட்டில் ஒபாமா ஆகலாம் என்னும் ஒன்லைனுடன் களமிறங்கியிருக்கிறது சந்தானத்தின் பிஸ்கோத்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் அப்பாவின் பிஸ்கோத் பேக்டரிக்கு ஓனராக வேண்டிய சந்தானம் காலம் செய்த சூழ்ச்சியால் சூப்பர்வைஸராக வேலை செய்கிறார். ஆம், அதேதான். அப்பாவின் நண்பரான ஆனந்தராஜ் வழக்கம்போல் முதலாளியாகி சந்தானத்துக்கு ‘மாமா பிஸ்கோத்து’ கொடுத்துவிடுகிறார். சந்தானம் செல்லும் முதியோர் இல்லத்தில் இருக்கும் சௌகார் ஜானகி சொல்லும் கதையெல்லாம் அப்படியே பலிக்க, சந்தானத்துக்கு எல்லாமே ஹிட் அடிக்கிறது. ஆனால், இறுதியில் கதைப்படி நடக்கிறாரா இல்லையா என்னும் ஊருக்கே தெரிந்த ரகசியத்துடன் முடிகிறது பிஸ்கோத்.

படத்தின் ஒரே ப்ளஸ் சந்தானம் மட்டுமே. அவரது ‘லொள்ளு சபா’ டீமில் புதிய மெம்பராக இணைந்திருக்கும் மொட்டை ராஜேந்திரனையும் சேர்த்து படம் முழுக்க ஒன்லைன் கவுன்டர்கள் தான். ‘நீ எப்படியும் லேட்டாத்தான் சொல்லுவ’ என மனோகரைத் தள்ளிவிட்டு ராஜேந்திரனிடம் கதை கேட்பதில் ஆரம்பித்து, சந்தானம் பேசும் ஒவ்வொரு வரியிலும் தியேட்டரே குலுங்கிச் சிரித்திருக்கவேண்டியது. ஆனால், ஐம்பது பேர் மட்டுமே திரையரங்கங்களுக்குப் படை யெடுப்பதால், உரக்கச் சிரிக்க வேண்டியதிருந்தது. படத்துக்குள் வரும் பாகுபலி, பில்லா, 300 ஸ்பூப் கதைகளில்கூட சந்தானம்தான் ஒரே ஆறுதல். அடல்ட் காமெடி வசனங்களைக் குறைத்துக்கொள்ளலாமே சந்தானம்!

ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக வந்திருக்க வேண்டிய பிஸ்கோத், வில்லன் சைடு ஆட்களாகக்கூட லொள்ளு சபா நடிகர்களையே போட்டிருப்பதால் நம்மைப் பல இடங்களில் சோதிக்கிறது. தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா என இரண்டு நாயகிகள், இருவருக்கும் ஆளுக்கொரு பாடல், அவ்வளவே!

 சினிமா விமர்சனம் - பிஸ்கோத்

Bedtime Stories என்னும் ஆங்கிலப்படத்தை சீன் பை சீன் அபேஸ் செய்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ஹோட்டல் ~ பிஸ்கோத் பேக்டரி, குழந்தைகள் ~ சௌகார் ஜானகி, பள்ளி ~ முதியோர் இல்லம், சாக்லேட் மழை ~ பணமழை என ‘என்னப்பா அப்படியே எடுத்திருக்க’ டைப்பில் எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார் கண்ணன். கொரோனாவுக்குப் பின்னர் திரையரங்கத்தில் வெளியாகியிருக்கும் முதல் திரைப்படம் பிஸ்கோத். இன்னுமே சற்று சிரத்தையுடன் சுவாரஸ்யமாகத் திரைக்கதை எழுதியிருந்தால், படம் இன்னும் பலரை தியேட்டர் பக்கம் இழுத்திருக்கும்.