Published:Updated:

பிட்ஸ் பிரேக்

Samantha
பிரீமியம் ஸ்டோரி
Samantha

டோலிவுட்டில் அடுத்தடுத்து `மஜிலி’, ‘ஓ பேபி’ என இரண்டு சூப்பர்ஹிட்டுகள் கொடுத்துவிட்டு அடுத்து ‘96’ ரீமேக்கில் நடித்து ஹாட்ரிக் போடக் காத்திருக்கிறார் சமந்தா.

பிட்ஸ் பிரேக்

டோலிவுட்டில் அடுத்தடுத்து `மஜிலி’, ‘ஓ பேபி’ என இரண்டு சூப்பர்ஹிட்டுகள் கொடுத்துவிட்டு அடுத்து ‘96’ ரீமேக்கில் நடித்து ஹாட்ரிக் போடக் காத்திருக்கிறார் சமந்தா.

Published:Updated:
Samantha
பிரீமியம் ஸ்டோரி
Samantha

டோலிவுட்டில் அடுத்தடுத்து `மஜிலி’, ‘ஓ பேபி’ என இரண்டு சூப்பர்ஹிட்டுகள் கொடுத்துவிட்டு அடுத்து ‘96’ ரீமேக்கில் நடித்து ஹாட்ரிக் போடக் காத்திருக்கிறார் சமந்தா. இதுபோக டிஜிட்டல் மீடியாவுக்கும் வருகிறார் சம்மு. அமேசான் ப்ரைம் தமிழ்,தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாரிக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிகில் படக்குழுவினருக்கு சென்றவாரம் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் விஜய். படத்தில் பங்குபெற்ற 400க்கும் மேற்பட்டவர்களுக்கு BIGIL என்று பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை வழங்கியதில் படக்குழு செம ஹேப்பி.

vijay,  BIGIL
vijay, BIGIL

இதுமட்டுமன்றி, படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடிப்பவர்களுக்கு, விஜய் தனது கையெழுத்திட்ட கால்பந்து ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.

ரெஜினா நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்குப்படமான `எவரு' ஹிட் அடித்திருக்கிறது, கூடவே அவர் நடித்த `ஆவ்' தெலுங்குப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததில் உற்சாகமாக இருக்கிறார்.

Regina
Regina

சிறந்த மேக் அப் விருது பெற்ற இந்தப்படத்திற்காக ரெஜினா மொட்டை அடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 7, எவரு, ஆவ் என மூன்று படங்களிலும் நெகட்டிவ் ரோலில்தான் நடித்திருந்தார். அதைப்பற்றி விசாரித்தால், ``அடுத்து ஒரு தமிழ்ப்படத்திலும் வில்லி ரோல்தான்...'' என்று புன்னகைக்கிறார்!