சினிமா
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

 பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
News
பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

`முகமூடி’ படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே இப்போது இந்திய அளவில் மோஸ்ட் வான்ட்டட். தெலுங்கில் வரிசையாக ஹிட் தந்த பூஜாவின் அடுத்த ஹீரோ சல்மான். ``அவர்கூட நடிக்கணும்னா நம்ம லெவல்ல பல கட்டம் அதிகமாக்கணும். ஆக்குவோம்’’ எனப் பேட்டி யளித்த பூஜா இப்போது வாழ்வதே இன்ஸ்டா கிராமில் தான். க்வாரன்டீன் நாள்களில் அவர் செய்யும் அத்தனையையும் அங்கே கல்வெட்டுபோலப் பதிவு செய்கிறார் இந்தக் கன்னட பியூட்டி.

 பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
 பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
ராஷி கண்ணா
ராஷி கண்ணா

தெலுங்கு ரசிகர்களின் செல்லக்குட்டியான ராஷி கண்ணாவுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் சறுக்கல்தான். விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படம் தோல்வியடைய, எந்தத் தெலுங்குப் படத்தையும் புதிதாக ஒப்புக்கொள்ளவில்லை ராஷி. தமிழில், சூர்யா - ஹரி இணையும் சிங்கம்-4 படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை-3 படத்திலும் ராஷியை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என நம்பி சென்னைப் பக்கம் ஒதுங்குகிறார் ராஷி. நாங்க இருக்கோம்!

ராஷி கண்ணா
ராஷி கண்ணா
ஷ்ரேயா
ஷ்ரேயா

னைத்து இந்திய மொழிகளிலும் ஹிட் தந்த ஷ்ரேயா, திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார். இப்போது, எஸ்.எஸ். ராஜமெளலியின் அடுத்த பிரமாண்ட திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’-ல் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் என ஆல் இந்திய நடிகர்கள் பலர் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது. ஆனால் இப்போது ஷ்ரேயா வெளிநாட்டில் இருப்பதால் எப்படிப் பறந்து வருவதெனக் காத்திருக்கிறார்.

ஷ்ரேயா
ஷ்ரேயா