சினிமா
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

ரெஜினா
பிரீமியம் ஸ்டோரி
News
ரெஜினா

ரெஜினா - இப்போது தென்னிந்திய திரையுலகின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் இவர்தான்!

ரிசையாய் போட்டோஷூட்கள், பாரம்பரிய - வெஸ்டர்ன் உடைகள் என இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் கலர்ஃபுல்லாய் பூத்துக் குலுங்குகிறது. ஆனால், சினிமாவில் 'நெஞ்சம் மறப்பதில்லை', 'பார்ட்டி' என அவரின் படங்கள் பல நாட்களாய் ஹோல்டில் இருக்கின்றன. அவை சீக்கிரமே ரிலீஸாகவேண்டும் என்பதுதான் அவரது மில்லியன் பாலோயர்களின் விருப்பமும்!

பிட்ஸ் பிரேக்

`ஆடை' என்ற தைரியமான கதைத்தேர்வின் மூலம் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த அமலா பால் இப்போது அடுத்த ரோலுக்குத் தயாராகிவிட்டார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேரக் குவித்த `லஸ்ட் ஸ்டோரீஸ்' சீரிஸின் தெலுங்கு ரீமேக்கில் இப்போது கமிட்டாகி இருக்கிறார். நான்கு குறுங்கதைகள் கொண்ட அந்த ஆன்தாலஜி சீரிஸில் ஒரு கதையில் அமலா பால்தான் கதாநாயகி. `ஓ பேபி' படம் எடுத்த நந்தினி ரெட்டிதான் இயக்குநர்.

பிட்ஸ் பிரேக்

படம்: கிரண் சா

மிழில் விஜய் ஆண்டனியின் `அக்னி சிறகுகள்', தெலுங்கில் ராஜ் தருணின் 'இடரி லோகம் ஒக்கடே', மும்மொழிகளில் தயாராகும் அனுஷ்காவின் `நிசப்தம்' என ஆல் ரவுண்டராகக் கலக்குகிறார் ஷாலினி பாண்டே. `இந்தியை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்' என இப்போது அங்கேயும் களமிறங்குகிறார். பாலிவுட்டின் ஹார்ட்த்ராப் ரன்வீர் சிங்கின் `ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படத்தில் ஷாலினிதான் ரன்வீருக்கு ஜோடி. `காம்போ கேட்கவே ஃப்ரெஷ்ஷா இருக்கே' என சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள்.

Shalini Pandey
Shalini Pandey

`சர்ரைனோடு', 'நேனே ராஜா நேனே மந்திரி' என வரிசையாக நல்ல படங்கள் அமைய, தெலுங்கு சினிமாவில் பரபரவென உயரத்திற்குச் சென்றார் கேத்தரின் தெரசா. அதன்பின் என்ன நடந்ததோ திடீரென ஒரு பிரேக். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கே படம் ரிலீஸானதோடு சரி. இப்போது மீண்டும் விஜய் தேவரகொண்டாவின் படத்தில் ரீ-என்ட்ரியாகிறார் கேத்தரின். அவரின் குட்டிக் குட்டி ரியாக்‌ஷன்களுக்கும் ஃபேஷன் சென்ஸுக்கும் அங்கே ரசிகர் பட்டாளம் இருப்பதால் மீண்டும் ஒரு ரவுண்டு வருவோம் என்ற நம்பிக்கை அவர் கண்களில் மின்னுகிறது.

கேத்தரின் தெரசா
கேத்தரின் தெரசா

சிரஞ்சீவி காருவின் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்கட தேசத்தில் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறது.

தமன்னா
தமன்னா

படத்தில் நடித்தவர்களை ரசிகர்கள் பாராட்டு மழையில் நனைக்க, படத் தயாரிப்பாளர்களோ பரிசுமழையில் நனைக்கிறார்கள். நரசிம்மா ரெட்டியின் காதலி லஷ்மியாக நடித்திருந்த தமன்னாவுக்கு ஒரு வைர மோதிரத்தை பரிசாகக் கொடுத்திருக்கிறார் படத்தைத் தயாரித்த ராம்சரணின் மனைவியும் சிரஞ்சீவியின் மருமகளுமான உபாசனா. அம்மாம்பெரிய வைரத்தின் மதிப்பு மட்டுமே கோடிகளில் இருக்கும் எனக் காதைக் கடிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.