பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பல்லவி

மலையாளம், தமிழ், தெலுங்கு என இந்த ஆண்டு பலமொழிகளில் வெரைட்டி வித்தை காட்டுகிறார் சாய் பல்லவி.

‘அதிரன்', ‘என்.ஜி.கே’ ரீலிஸுக்குப் பிறகு தெலுங்கில் இப்போது ராணா, நாக சைதன்யா ஜோடியாக இரண்டு படங்கள்! போக, அதிரனை தெலுங்கிலும் இப்போது வெளியிடவிருக்கிறார்கள் படத்தயாரிப்பாளர்கள்.

Sai Pallavi
Sai Pallavi

ரித்திரப் படங்கள் என்றாலே கதை எழுதியவுடன் முதல் பெயராக சத்யராஜ் பெயரையும் நடிகர்கள் லிஸ்ட்டில் எழுதிவிடுகிறார்கள் இயக்குநர்கள். 'கட்டப்பா' உண்டாக்கிய தாக்கம் அப்படி! மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் சத்யராஜ் நடிப்பதாக இருந்த நிலையில் இப்போது அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேசமயம், இங்கே மகன் சிபிராஜோடு ஒரு படம், தெலுங்கில் சாய் தேஜோடு ஒருபடம் என இளைஞர்களோடு ரவுண்டு கட்டி ஆடுகிறார்.

Sathyaraj, Sai Dharam Tej
Sathyaraj, Sai Dharam Tej