Published:Updated:

``இது `விஸ்வாசம்' தீம் மியூசிக்ல!?" - கொதித்த ரசிகர்கள், இமான் பெயரைச் சேர்த்த படக்குழு

`டி-சீரீஸ்' ஆடியோ லேபிளின் யூடியூப் தளத்தில் வெளியான இந்த முன்னோட்டம், சில மணிநேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

Marjaavaan
Marjaavaan

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம், `விஸ்வாசம்'. இப்படத்தின் பின்னணி இசைக் கோர்வையை அப்படியே எடுத்து `மர்ஜாவான்' படத்தில் பயன்படுத்தியதற்காக அஜித் ரசிகர்கள் அந்தப் படக்குழுவை ஒரு வழி ஆக்கிவிட்டார்கள். சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேய்ஷ் தேஷ்முக், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கும் `மர்ஜாவான்' படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியானது.

Marjaavaan
Marjaavaan

`டி-சீரீஸ்' ஆடியோ லேபிளின் யூடியூப் தளத்தில் வெளியான இந்த முன்னோட்டம், சில மணிநேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்தது. வட இந்தியாவில் நடக்கும் கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை, மிலாப் மிலன் ஜவேரி எழுதி இயக்கியுள்ளார். சஞ்ஜாய் செளத்ரி பின்னணி இசை அமைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 3.15 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தின் ஒன்றரை நிமிடங்களுக்கும் மேலாக விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி, முன்னோட்டத்தில் `விஸ்வாச'த்தின் இசையமைப்பாளர் இமானுக்கு கிரெடிட் தரப்படவில்லை. டிரெய்லர் முடிந்து கடைசியாக வரும் டைட்டில் கார்டில் `பின்னணி இசை - சஞ்சாய் செளத்ரி' என்றே போடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இந்தப் படக்குழுவை சாடினர். `விஸ்வாசம்' படத்தின் இசையைக் காப்பியடித்திருப்பதாகக் கூறி அந்த வீடியோவிலும் கமென்ட் செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்தக் கமென்டுகள் படக்குழுவால் நீக்கப்பட்டன. மேலும், முன்னோட்டத்தின் டிஸ்க்ரிப்ஷனில் பின்னணி இசை டி. இமான் என்று வீடியோ வெளியாகி ஐந்து மணிநேர'த்துக்குப் பிறகு அவர் பெயரும் சேர்க்கப்பட்டது.

Marjaavaan Trailer Title Card
Marjaavaan Trailer Title Card