Published:Updated:

காதலெனும் `தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை! #ValentineDay

காதல் படங்கள் ( தமிழ் சினிமா )

`காதல் கோட்டை' வந்த பிறகுதான் `காலமெல்லாம் காதல் வாழ்க', `காதலே நிம்மதி' எனக் காதலைத் தலைப்பில் கொண்ட படங்கள் ஓட ஆரம்பித்தன.

காதலெனும் `தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை! #ValentineDay

`காதல் கோட்டை' வந்த பிறகுதான் `காலமெல்லாம் காதல் வாழ்க', `காதலே நிம்மதி' எனக் காதலைத் தலைப்பில் கொண்ட படங்கள் ஓட ஆரம்பித்தன.

Published:Updated:
காதல் படங்கள் ( தமிழ் சினிமா )

50-களில், 60-களில் எல்லாம் சமூகத்தில் `காதல்' என்ற வார்த்தையே மிகவும் தவறான வார்த்தை. அதனால் திரையின் கதாபாத்திரங்கள் காதல் பேசினாலும் படத்தின் தலைப்புகளில் காதல் எனும் வார்த்தை இடம்பெறாது.

`காதலிக்க நேரமில்லை' படம் தவிர, காதல் என்கிற தலைப்பில் வந்த படங்களெல்லாம்கூட பெரிதாக ஓடியதில்லை. காதலிக்க வாங்க, காதல், காதல், காதல் என நிறைய படங்களைச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் நடித்த `காதல் வாகனம்', பாரதிராஜாவின் `காதல் ஓவியம்', கமல் நடித்த `காதல் பரிசு' உட்பட பலப் படங்கள் சரியாகப் போகவில்லை. `காதல் கோட்டை' வந்த பிறகுதான் `காதல் கோட்டை', `காலமெல்லாம் காதல் வாழ்க', `காதலே நிம்மதி', `காதலுக்கு மரியாதை', 'காதல் மன்னன்', `காதலர் தினம்', `காதல் தேசம்', `காதல்', `காதல் கொண்டேன்' எனக் காதலைத் தலைப்பில் கொண்ட படங்கள் ஓட ஆரம்பித்தன.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவும் காதலும் தவிர்க்க முடியாத இரு புள்ளிகள். தங்களுடைய முதல் படம் வெற்றி பெற வேண்டுமென்றால் பெரும்பாலான இயக்குநர்கள் தேர்வு செய்யும் கதை, காதல் கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், 50-களில் இருந்த சினிமாவும் 60-களில் இருந்த சினிமாவும் ஒவ்வொரு காலகட்டத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற பெரிய ஆளுமைகளின் கீழ் இருந்ததால் வீரம், தீரம், காதல் எனக் கலவையான கதைகளும் வித்தியாசமான குடும்பக் கதைகளும் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தன.

இயக்குநர் ஶ்ரீதர்தான் `கல்யாண பரிசு' மூலம் நவீன காதல் படங்களின் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார். `தேன் நிலவு', `நெஞ்சம் மறப்பதில்லை', `காதலிக்க நேரம்மில்லை', `நெஞ்சில் ஓர் ஆலயம்' என முக்கோண காதல்கதைகள் பலவற்றைப் படமாக்கினார். ஜெமினி, முத்துராமன், ரவிச்சந்திரன், கல்யாணகுமார், என ஹீரோயிசம் இல்லாத சாதாரண மனிதர்களைப் போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் தங்களின் காதலை வளர்த்தனர். சமூகத்தில் குறிப்பாக, நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்வில் காதல் பயணிக்கத் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களும் கல்வியில் மேம்படத் தொடங்கி டீச்சர், நர்ஸ் என வீட்டிலிருந்து வெளி உலகம் பார்க்க பயணிக்கத் தொடங்கிய காலம். அப்போது அவர்கள் சந்திக்கும் நற்குணம் படைத்த ஆணிடம் மனத்தைப் பறிகொடுக்கும் விதமாகத் திரைக்கதைகள் பயணித்தன. அது சமூகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1976-ம் ஆண்டில் `அன்னக்கிளி', 1977 -ல் `16 வயதினிலே' ஆகிய இரண்டு படங்களும் சினிமாவில் மட்டுல்ல, சமூகத்திலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தன். அது நாள்வரை திரையில் கோலொச்சிக்கொண்டிருந்த எம்ஜிஆர், சிவாஜிக்கு மாற்றாக கமல், ரஜினி பிரவேசித்த நேரம்.

இந்த நேரத்தில்தான் எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் கொஞ்சம் ஓய்ந்து போயிருந்த நேரம். நாவல் திரைப்படமாக மாறிய காலகட்டம். `ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது', `மாலை சூடவா', `பட்டாம்பூச்சி', `இளமை ஊஞ்சலாடுகிறது', `சொல்லத்தான் நினைக்கிறேன்' இப்படிப் பலவிதமான காதல் கதைகளில் கமல்ஹாசன் நடிக்க ஆரம்பித்த நேரம்.

கமல் - ரஜினி - ஶ்ரீதேவி
கமல் - ரஜினி - ஶ்ரீதேவி

காதலின் காதலன் பாரதிராஜா காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இயக்கிட, அவரின் சீடர்கள் கே.பாக்யராஜ், மணிவண்ணன், கே.ரங்கராஜ் காதலுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகத் தந்தனர்.

பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா எனப் பல இயக்குநர்கள் பல வித்தியாசமான காதல்களைத் திரைப்படங்களில் பதிவு செய்தார்கள். 80-களில் இளையராஜா இசையமைத்த காதல் பாடல்கள்தான் இன்றுவரை காதலர்கள் விரும்பி கேட்கும் காதல் பாடல்களாக இருக்கின்றன. இனி வரப்போகும் காலங்களிலும் விரும்பிக் கேட்கும் காதல் பாடல்களாகவும் இருக்கும்.

குறிப்பாக, கமல்ஹாசன் ஆக்ஷன் படங்களுக்கு மாறிய நேரத்தில் காதல் கதைகளில் நடிப்பதற்கான ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அந்த வெற்றிடத்தை மிகச்சரியாக நடிகர் மோகன் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். இன்னமும் காதலர்களின் ஃபேவரைட் பாடல்கள் மோகனின் காதல் பாடல்கள். காதலிப்பவர்கள் மோகனின் பாடல்களைத் தனியாகப் பாடிப்பார்த்து மகிழ்வார்கள். காபி பார்களில் கேட்டு மகிழ்வார்கள். பாடல்கள் கேட்பதற்காகவே டீக்கடைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். தேநீர் அருதிக்கொண்டே நண்பர்களிடம் காதல் கதைகளைப் பேசுவார்கள்.

மோகன் பெரும்பாலான படங்களில் பாடகராகவே பயணிப்பார். ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்து, பாடல்களால் இசையால் புகழ்பெற்று ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிப்பார். அல்லது பணக்கார பெண்ணுடனான காதலாக அவருடைய படங்கள் அமையும். அதனால் அவருக்கு `மைக்' மோகன் என்றே பெயர் வந்தது. பல இளைஞர்கள் தங்களின் காதல் பாடல்களாக மோகன் படப் பாடல்களை, குறிப்பாக `நிலா' பாடல்கள் என்று ஒரு பெரிய தொகுப்பே வைத்திருப்பார்கள்.

நிலவைத் தூதாகவிட்டு பாடிய பாடல்கள் `நிலாவே வா'வில் இருந்து `நிலவு தூங்கும் நேரம்' என ஏராளமான பாடல்கள் உண்டு. நிலாவும் இசையும் காதலர்களுக்குரிய இயற்கை சக்திகள். `உதயகீதம்', `இதயக்கோயில்', `பயணங்கள் முடிவதில்லை', `பாடு நிலாவே' போன்ற படங்களில் இடம்பெற்ற காதல் பாடல்களுக்கு இணையான பாடல்கள் தமிழ் சினிமாவில் இன்றுவரை உருவாக்கப்படவில்லை. தமிழகத்தின் அத்தனை கிராமப்புற இளைஞர்களும் மரத்தடியில் மாடுகளை விட்டுவிட்டு மோகனின் மகுடி பாடல்களைத்தான் பாடிக்கொண்டிருப்பார்கள். `மலையோரம் வீசும் காற்றில்' மனதைப் பறிகொடுத்திருப்பார்கள்.

சங்கர்
சங்கர்

எவ்வளவோ படங்கள் வந்திருந்தாலும் டி.ராஜேந்தரின் `ஒருதலை ராகம்' ஒரு தனி ரெக்கார்ட். தன் காதலி தன்னை ஏற்றாரா மறுத்தாரா என்கிற அவஸ்தையில் காதலன் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போகிறான். இதைவிட சிறந்த காதல் சோகத்தை இனி எவராலும் உருவாக்க முடியாது என்கிற ரீதியில் படத்தின் இறுதிக்காட்சி அமைந்திருக்கும். ஒரு முறை டி.ராஜேந்தர் அவர்களைப் பேட்டி காணச் சென்ற நிருபர் கேட்டிருக்கிறார். ``இன்னொரு ஒருதலை ராகத்தை எப்போது நீங்கள் தருவீர்கள்?'' அதற்கு அவர் சொன்ன பதில். ``ஒரு பெண் ஒருமுறைதான் பூப்படைவாள்'' எத்தனை கவித்துவமான பதில்.

`நாயகன்' படத்துக்குப் பிறகு வந்த கமல்ஹாசனைவிட, `வறுமையின் நிறம் சிவப்பு', `நினைத்தாலே இனிக்கும்', `மரோசரித்ரா', `ஏக் துஜே கேலியே', `மூன்றாம் பிறை', `வாழ்வே மாயம்' கமல்ஹாசனைத்தான் நிறைய பேருக்குப் பிடிக்கும். அதுவும் கமல் - ஸ்ரீதேவி காம்பினேஷனில் வந்த படங்களுக்கு ஈடு இணையே கிடையாது. ஏன் ரஜினிகாந்த்தின் `தில்லுமுல்லு', `தனிக்காட்டுராஜா', `அடுத்த வாரிசு', `புதுக்கவிதை', `துடிக்கும் கரங்கள்', `நான் அடிமை இல்லை', `தம்பிக்கு எந்த ஊரு' போன்ற படங்களும் காதலின் தீபம் ஒன்றை நெஞ்சிலே ஏற்றின.

1985-க்குப் பிறகு ராமராஜனின் `எங்க ஊரு பாட்டுக்காரன்', `கரகாட்டக்காரன்', `எங்க ஊரு காவல்காரன்' எனப் பல படங்கள் கிராமப்புற இளைஞர்களிடம் நீக்கமற காதலைக்கொண்டுபோய் சேர்த்தன. 90-களில் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை `ரோஜா', `ஜென்டில்மேன்', `காதலன்', `புதியமுகம்' எனப் புதிய இசையில் காதலர்களைப் பயணிக்க வைத்தார்.

`காதல்கோட்டை', `ஆட்டோகிராஃப்', `அழகி', `சேது' ஆகிய படங்கள் காதல் ஜோதியை சுமந்து சென்றதென்றால், 2003-ல் வந்த `மின்னலே' ஒரே தாவலில் வேறு லெவலுக்கு இளஞர்களின் காதலைக் கொண்டு சேர்த்தது. `காதல் கொண்டேனும், `7-ஜி ரெயின்போ காலனி'யும் அடுத்தடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமாவையும் இளைஞர்களையும் யுவதிகளையும் பரஸ்பர புரிந்துகொள்ளலுக்கு வழிவகுத்தன என்றால், `விண்ணைத்தாண்டி வருவாயா' காதலர்களை விண்ணைத்தாண்டி வர வைத்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா

இன்று சர்வ சாதாரணமாக வீடுகளில், `யாரையாச்சும் மனசுல நெனைச்சுக்கிட்டிருந்தியானா சொல்லுப்பா' என மகனையும் மகளையும் கேட்கும் அளவு தமிழ்க்குடும்பங்களில் பெற்றோர் மாறி வருவதற்கு நம் தமிழ் சினிமாவும் காரணம். நிறைவேறாமல் போன அவர்களின் காதலும் ஒரு காரணம்.