Published:Updated:

"`பொன்னியின் செல்வன்' ரெண்டு பார்ட்டும் சேர்த்தே 130 நாள்ல முடிச்சிட்டோம்! எப்படின்னா..."- பிருந்தா

பொன்னியின் செல்வன் - பிருந்தா

"'பொன்னியின் செல்வன்' படிச்சவங்களுக்கு வேற ஒரு விஷுவல் இருந்தாலும், படம் பார்க்கறப்ப மணி சார் விஷுவலாதான் இது தெரியும். உண்மையிலேயே நமக்கு ஒரு கொண்டாட்டமான படமா இருக்கும்." - பிருந்தா

Published:Updated:

"`பொன்னியின் செல்வன்' ரெண்டு பார்ட்டும் சேர்த்தே 130 நாள்ல முடிச்சிட்டோம்! எப்படின்னா..."- பிருந்தா

"'பொன்னியின் செல்வன்' படிச்சவங்களுக்கு வேற ஒரு விஷுவல் இருந்தாலும், படம் பார்க்கறப்ப மணி சார் விஷுவலாதான் இது தெரியும். உண்மையிலேயே நமக்கு ஒரு கொண்டாட்டமான படமா இருக்கும்." - பிருந்தா

பொன்னியின் செல்வன் - பிருந்தா
`பொன்னியின் செல்வன்' படத்தில் நடன இயக்குநராக மட்டுமில்லாமல், ஒரு உதவி இயக்குநர் போல பணிசெய்திருக்கிறார் பிருந்தா மாஸ்டர். `ஹே சினாமிகா' மூலம் இயக்குநராகவும் களமிறங்கிய பிருந்தா, இங்கே `பொன்னியின் செல்வன்' அனுபவங்கள் குறித்து பேசுகிறார்.

எப்படி இருந்தது 'பொன்னியின் செல்வன்' அனுபவம்..?

'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில்...
'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில்...

"இந்தப் படத்துக்குள் வர்றதுக்கு முன்னாடி மணிரத்னம் சார் என்னிடம் 'நீங்க அந்த நாவலை படிச்சிருக்கீங்களா?'ன்னு கேட்டாங்க. படிக்கல. ஆனா, தெரிஞ்ச பிறகுதான் இந்தப் படத்துக்குள் வருவேன்னு சொல்லியிருந்தேன். என் பெரிய அக்கா ஹேமா, 'பொன்னியின் செல்வன்' படிச்சிருக்காங்க என்பதால மணி சாரை சந்திச்சதும், அடுத்து எங்க அக்கா வீட்டுக்குத்தான் போனேன். அந்தக் கதையை அவங்கக்கிட்ட முழுவதும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.

ஆனா, ஷூட்டிங்குல சாரோட விளக்கம், அஞ்சு நிமிஷம்தான் இருக்கும். டக்டக்ன்னு விளக்கிடுவார். 'சோழா... சோழா...' பாடலைதான் முதல்ல படமாக்கினோம். பிலிம்சிட்டியில ஒரு பெரிய அறையில்தான் பாடலுக்கான ரிகர்சலைப் பண்ணினோம். ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் எப்பவும் ஃப்ரெஷ்ஷா தெரியும். குரூப் டான்சர்ஸ் அவ்ளோ அழகா ரசிச்சு, பிராக்டீஸ் பண்ணினாங்க. 'சோழா சோழா' பாடல்ல மூணு நாள்கள் எடுக்க வேண்டிய டான்ஸை, ஒரே நாள்ல எடுத்துட்டோம். ரவிவர்மன் கேமரா, தோட்டாதரணி சார் கலை இயக்கம்ன்னு நல்ல டீம் அமைஞ்சதாலதான் இது சாத்தியம் ஆச்சு."

'சோழா... சோழா'ல விக்ரம் செமையா ஆடியிருப்பார் போல..?

"ஆமாங்க. பொதுவா பாடல் ஷூட் பண்றப்ப, துண்டு துண்டா ஆட வைப்போம். ஆனா, மணி சார் ஒர்க்கிங் ஸ்டைல் வேற. அப்படி ஆட வைக்கச் சொல்ல மாட்டார். ஸ்டேஜ் ஷோ மாதிரி தொடர்ச்சியா ஆட வச்சு ஷூட் பண்ணுவோம். அதிலும் விக்ரம் சார், எல்லோரோடவும் ஆடும் போது, அவரோட டிரெஸ், ஹேர் ஸ்டைல், அந்த லுக்... எல்லாமே மிரட்டலா இருக்கும். பாடல் நல்லா வரும் போது 'சூப்பர்ப்' சொன்னாலே... செட்ல அந்த எனர்ஜி அவ்ளோ பவரா இருக்கும். 'பொன்னியின் செல்வன்' படிச்சவங்களுக்கு வேற ஒரு விஷுவல் இருந்தாலும், படம் பார்க்கறப்ப மணி சார் விஷுவலாதான் இது தெரியும். உண்மையிலேயே நமக்கு ஒரு கொண்டாட்டமான படமா இருக்கும்."

'சோழா... சோழா...' பாடல் ஷூட்டிங்
'சோழா... சோழா...' பாடல் ஷூட்டிங்

என்ன சொல்றார் மணிரத்னம்?

"சார் செம எனர்ஜி. இந்தப் படம் ஆரம்பிக்கற சமயத்துல கொரோனா டைம். வேற யாராக இருந்தாலும் இந்தப் படத்தை அப்ப தொட்டிருக்க மாட்டாங்க. ஆனா, மணி சார் அவ்ளோ எனர்ஜியா உழைச்சார். 2020 பாங்காக்ல முதல்நாளே ஒரு லவ் சாங்க்லதான் ஷூட் ஆரம்பிச்சது. அப்ப, நானும் ஸ்பாட்ல இருந்தேன். அவரோட உதவியாளர் போல நானும் கத்துக்க ஆரம்பிச்சேன். சில நாள்கள் அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் ஷூட் போயிருக்கோம். இல்லன்னா, ஆறுமணிக்கு ரெகுலரா ஷூட் இருக்கும். இதுக்காகவே டான்சர்கள் மூணு மணிக்கே மேக்கப் போட ஆரம்பிச்சிடுவாங்க. மணி சாரும் ஷார்ப்பா ஸ்பாட்டுக்கு வந்துடுவார். ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார்ன்னு ஒவ்வொருத்தருமே 'நாம சாதிச்சிடணும்'னு நினைச்சு உழைச்சாங்க. விக்ரம் சாருக்கு 'சோழா' பாடல்னா, கார்த்தி சாருக்கு 'பொன்னி நதி' பாடல்... அதிலும் அவர் மணி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்ததால, 'பொன்னி நதி' பாடல் ஷூட் முடிஞ்சா, டக்குனு சாரோட உதவியாளராகவே மாறிடுவார். பொன்னியின் செல்வனோட ரெண்டு பார்ட்டும் சேர்ந்தே, அதிகபட்சம் 130 நாள்கள்ல எடுத்திருக்கோம். அதுக்கு காரணம், மணி சாரோட திட்டமிடல் மற்றும் அவர் உட்பட அத்தனை பேரின் உழைப்பும்தான்!".