Published:Updated:

``காஸ்ட்டிங்கிற்கு பிரபலமோ அழகோ தேவையில்ல, இதைப் புரிஞ்சிக்கிட்டாலே போதும்!" - நித்யா ஶ்ரீராம்

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்

மிஷ்கின் சார்கிட்ட நான் பார்த்த விஷயங்களைச் சொல்லி, காஸ்ட்டிங் டிபார்ட்மென்ட் எடுத்துப் பண்றேன்னு சொன்னேன். `நல்ல முடிவு, தாராளமா பண்ணு'னு சொன்னார்.

சினிமாவில் கதைக்கேற்ற சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் `காஸ்ட்டிங் டைரக்டர்' என்பது வெளியில் அதிகம் அறியப்படாத துறை.

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்

அந்தத் துறை குறித்தும், அதில் உள்ள சவால்கள் குறித்தும் இயக்குநர் மிஷ்கினின் `அஞ்சாதே', `சைக்கோ' உள்ளிட்ட பல படங்களில் காஸ்ட்டிங் டைரக்டராகப் பணிபுரிந்த நித்யா ஶ்ரீராமிடம் பேசினோம்.

``உங்களைப் பத்தி சொல்லுங்க?"

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்

``எல்லாரையும் போலத்தான் படிச்சு முடிச்சிட்டு, நல்ல சம்பளத்துல ஒரு கார்ப்பரேட் கம்பெனில வேலை பார்த்துட்டிருந்தேன். திடீர்னு எனக்கு வி.ஜே பண்ற வாய்ப்பு வந்தது. தட்டுத்தடுமாறி, நிறைய கத்துக்கிட்டு, சில வருஷம் அந்த ஃபீல்டுல இருந்தேன். எனக்கு பெருசா சாதிக்கணும்னு எந்த ஒரு நோக்கமும் இல்ல. அதுக்குப் பிறகு, நண்பர் மூலமா மிஷ்கின் சாரை சந்திக்கிற வாய்ப்பு வந்தது. `டீம்ல எந்த டிபார்ட்மென்ட் உனக்கு பிடிச்சிருக்கோ, அதை நீ எடுத்துப் பண்ணு'னு சொன்னார். அப்பதான் நடிக்கணும்னு வாய்ப்புத் தேடி வர்ற பலபேர், முறையா அப்ரோச் பண்ணத் தெரியாம, எந்த மாதிரி ஏமாற்றப்படுறாங்கன்னு பார்த்தேன். மிஷ்கின் சார்கிட்ட நான் பார்த்த விஷயங்களைச் சொல்லி, காஸ்ட்டிங் டிபார்ட்மென்ட் எடுத்துப் பண்றேன்னு சொன்னேன். `நல்ல முடிவு, தாராளமா பண்ணு'னு சொன்னார். அப்படி ஆரம்பிச்ச பயணம்தான் இப்போ, `சைக்கோ' வரைக்கும் தொடருது."

``காஸ்ட்டிங் டைரக்டர் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்?"

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்

``சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு கதாபாத்திரத்துக்கு நடிகர்கள் தேவையா இருந்தா ஏஜென்ட், மீடியேட்டர்னு இவங்க மூலமாதான் ஆள்களைத் தேடுவாங்க. ஆனா, அது முறையான புராசஸா நடந்துட்டிருக்கான்னு கேட்டா கேள்விக்குறிதான். எல்லாத் தகுதியும் இருந்தும், சினிமாக்குள்ள நடிக்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு வாய்ப்புகள் சரியா கிடைக்கிறதில்லை. அவ்வளவு வேதனையோட பல வருஷங்கள் வாய்ப்பு வரும்னு காத்துட்டிருக்கிறவங்களும் இருக்காங்க. ஒரு படத்துக்குகதை எந்த அளவு முக்கியமோ, அதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களும் முக்கியம். அந்தக் கதாபாத்திரங்களுக்கு சரியான ஆள்களைத் தேர்வுசெய்றது அதைவிட முக்கியம். அப்படி இருக்கும்போது, சினிமால காஸ்ட்டிங் டைரக்டர் பொறுப்பு அதிகம் இருக்கிற வேலைன்னே சொல்லலாம்."

``கதைக்கான கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்யும்போது, எந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கவனத்துல வெச்சுப்பீங்க?"

``முதல்ல, ஒரு கதாபாத்திரத்துக்கான தேவை என்னன்னு தெளிவா தெரிஞ்சிப்பேன். அதுக்காக படத்தோட கதை முழுவதையும் படிச்சிடுவேன். அப்படி இருக்கும்போது, அந்த கேரக்டரோட சிறப்பம்சங்கள் கரெக்டா தெரியவரும். அதுக்கேத்த ஆட்களைப் பிடிச்சா போதும், மத்தபடி அவங்க பெரிய பிரபலமாவோ, அழகாவோ இருக்கணும்னு இல்ல. கதாபாத்திரத் தேவையைப் பூர்த்திசெஞ்சா போதும். அதுமட்டுமில்லாம, பெரிய இயக்குநர்கள்கூட வேலைபார்க்கிறதைவிட, புதுமுக இயக்குநர்கள்கிட்ட வேலை பார்க்கத்தான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். ஏன்னா, நமக்கான ஸ்பேஸ் அங்க நிறைய இருக்கும். அந்த மாதிரிதான் `அடங்கமறு' படத்தோட இயக்குநர் கார்த்திக் தங்கவேல்கூட வேலைபார்த்தேன். காஸ்ட்டிங் டிபார்ட்மென்ட் எப்படி இருக்கும், எப்படி இயங்குதுனு தெரிஞ்சிக்கிற ஆர்வம் அவர்ட்டயும் இருந்ததுனால அந்த டீம்கூட வொர்க் பண்றது ரொம்பவே ஜாலியா இருந்தது."

``கதாபாத்திரத் தேர்வுக்கான செயல்முறை எப்படி நடக்குது. இயக்குநர் மற்றும் அவர் குழுவோட சேர்ந்து எப்படி இயங்குறீங்க?"

மிஷ்கினுடன்
மிஷ்கினுடன்

``எனக்கு இயல்பிலேயே எந்த ஒரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கணுங்கிற ஆர்வம் இருக்கு. பொதுவா, ஒரு கதாபாத்திரத்துக்கான தேர்வின்போது, ஆர்ட்டிஸ்ட்டோட மைண்ட் ரீட் பண்ணணும்னு சொல்வாங்க. ஆனா, மிஷ்கின் சாரைப் பொறுத்தவரை அது தேவையில்லைனுதான் நினைப்பார். ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திரத்துக்கு ஆள் தேவைன்னா உண்மையா பிச்சைக்காரரைத்தான் கூட்டிட்டு வருவேன். இதுமாதிரி, கதாபாத்திரத் தேவைக்கேத்த மாதிரி நிறைய பொது இடங்களுக்குப் போவோம்."

``சினிமாவுல காஸ்ட்டிங் செயல்முறை எந்த மாதிரியான மாற்றங்களைச் சந்திச்சிருக்கு?"

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்
``உதயநிதிக்கும் எனக்கும் ஆரம்பத்துல மிஸ்மேட்ச் ஆச்சு; அது ஏன்னா..." - `சைக்கோ' கதை சொல்லும் மிஷ்கின்

``ஆரம்ப காலத்துல, கதாபாத்திரத்துக்கான ஆள்களைத் தேடுறது பெரிய புராசஸா இருந்தது. ஆனா, இப்ப இணையப் பயன்பாடு, சோஷியல் மீடியா வளர்ச்சினு அது எளிதாகிடுச்சு. ஆனாலும், அதையும் தாண்டி புதுசா வாய்ப்புத் தேடி வர்றவங்களுக்கு வழிகாட்டுற விதமா வெப்சைட் ஆரம்பிக்கிறது மாதிரியான முறைப்படுத்துற விஷயங்களும் இருக்கணும். அந்த வேலைகளுக்கான முதல் அடி, இனிவர்ற காலத்துல எடுத்து வைக்கணும். அதுக்கான வேலைகள் போய்ட்டிருக்கு. அதேமாதிரி, புதுசா வாய்ப்புத் தேடி வர்றவங்க, தங்களோட திறமைகளை மட்டுமே நம்பி இருக்கணும்."

``சினிமாவுல பெண்களுக்கான பாலியல் பிரச்னைகள் பத்தி?"

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்

``சினிமாவுல மட்டுமில்ல, எல்லா இடங்கள்லேயும் ஆண்- பெண் ரெண்டு பேருக்குமே பாலியல் ரீதியான பிரச்னைகள் இருந்துட்டுதான் இருக்கு. இந்த விஷயத்தைக் கையாள்ற விதம் ஒவ்வொருத்தருடைய மெச்சூரிட்டி லெவலைப் பொறுத்தது."

``நீங்க தேர்ந்தெடுத்ததுல உங்களுக்குப் பிடிச்ச கதாபாத்திரம்?"

துப்பறிவாளன்
துப்பறிவாளன்

`` `துப்பறிவாளன்' பிரசன்னாவும், `சைக்கோ' ராஜ்குமாரும் நான் தேர்ந்தெடுத்ததுலயே ரொம்பப் பிடிச்சது. குறிப்பா, பிரசன்னாவை அந்த மாதிரி டோன்ல யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அதேமாதிரிதான் ராஜ்குமாரும். ரொம்ப நாளா அவர் மிஷ்கின் சாரை ஃபாலோ பண்ணிட்டு வர்றார். இந்த ரெண்டு பேரை கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுத்தது, படம் பார்த்த போது பர்சனலா எனக்கு பிடிச்சிருந்தது."

`` `துப்பறிவாளன் 2'ல இருக்கீங்களா?"

நித்யா ஶ்ரீராம்
நித்யா ஶ்ரீராம்

`` 'துப்பறிவாளன்2' படம் ஆரம்பிக்கும்போதிலிருந்தே நான் இல்லை. அந்தப் படம் தொடர்பான பிரச்னைகள் எனக்கு சமீபத்துலதான் தெரியவந்தது."

அடுத்த கட்டுரைக்கு