நியூட்டனின் மூன்றாவது விதிப்படி எல்லா விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டு. உலகமயமாக்கலின் தொடக்கத்தில் பெரும் பணக்காரர்கள் மழைக்காலக் காளானாக அங்கங்கு முளைத்தனர். அவர்களுக்கானதாக அரசாங்கம் சுழலத்தொடங்கியது. சமூகத்தின் சீர் குலைய, அதிகாரம் பணவெறி கொண்ட ஓநாயாக மக்களின் மேல் பாயத்தொடங்கியது. இந்த வினைகளுக்கெல்லாம் யதார்த்தமாக, இயல்பாக சமூகத்திலிருந்து ஒரு எதிர்வினை கிளம்பியது. "கூலி அதிகமா கேட்ட ஒரு யூனியன் லீடர், சுட்டுக் கொன்னாங்க."
மணிரத்னம் - கமல் - இளையராஜா - பி.சி ஸ்ரீராம் இப்படி ஓர் உலகத்தரம் வாய்ந்த கூட்டணி தமிழில் இருந்ததற்கான தடயம் இந்தப்படம். இதன் தடத்தைத் தொடர்ந்து வந்த இன்றைய இயக்குநர்கள் பலர் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான பகத் பாசிலின் 'மாலிக்' படம்கூட பல வகைகளில் 'நாயகன்' படத்தை நினைவூட்டிச் சென்றது. "எவ்வளவு முயன்றும் 'நாயகன்' படத்தின் சாயலைத் தவிர்க்க முடியவில்லை" என ஒரு பேட்டியில் சொன்னார் பகத்.

வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி 'நாயகன்' கதை எழுதப்பட்டிருந்தது. டைட்டில் கார்டு வரும்போது மனதிற்குள் புகும் இளையராஜாவின் குரல் முதல், "நீங்க நல்லவரா கெட்டவரா?" எனக் கேட்கும் போதுவரும் மெல்லிதான பின்னணி இசைவரை ஆழ் மனதில் ஊஞ்சலாடிக்கொண்டே இருப்பார் ராஜா. ஒவ்வொரு பாடலும் ரேடியோக்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கமல்ஹாசன் ஓர் இளம் ஆக்ஷன், ரொமான்டிக் ஹீரோ தன்மையில் இருந்து விலகி டானாக நடிப்பில் வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருந்தார். ஒரு நாயகனுக்கான ஸ்டைலும் திமிரும் தீர்க்கமும் கலந்த பார்வை படம் முழுக்க அவரை ரசிக்க வைத்தது. இளைஞனான வேலுவும் வயதான வேலு நாயக்கரும் திரையில் உயிர் பெற்றிருந்தது கமலின் உடல்மொழியால்தான். இன்னும் ஒரு மில்லிமீட்டர் சிரித்துப் பேசியிருந்தால் அந்த கெட்டப் ஒரு சாக்லேட் பாய் கமலுடையது. கிளீன் ஷேவ் பண்ணிய பிரகாசமான முகத்தை கேங்ஸ்டராகக் காட்ட கமல் மெனக்கெட்டது ஏராளம்.

குற்றங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்துதானிருந்தன, இருக்கின்றன. ஒரு சில பாவமாக, மற்றவை பிராயச்சித்தமாக! வேலு நாயக்கர் செய்தது பிராயச்சித்தம். அவரின் அரசாங்கம் செய்த குற்றங்களுக்கான பிராயச்சித்தம்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசிறு வயது முதலே பசியும் கஷ்டங்களும் கண்டு வளர்ந்தவனின் பாவக்கணக்கு ஒரு கள்ளமற்ற சாராயக் கடத்தலில் தொடங்குகிறது. வேலு, வேலு பாய், வேலு நாயக்கர் என்னும் வளர்ச்சிக்கு துணைப் பாத்திரமான செல்வாவின் (ஜனகராஜ்) பங்களிப்பு இன்றியமையாதது. "இனி எல்லாம் இப்படித்தான்" என வேலு நாயக்கரை உருவாக்குவது அவர்தான். கடைசிவரை வேலு நாயக்கரின் மதிப்பை அறிந்து மரியாதை கொடுக்கும் அவர் வேலுவிலிருந்து 'நாயக்கரே' என, அழைக்கும் விதத்தைக்கூட மாற்றியிருப்பார்.
இளம் வேலு நாயக்கரின் வேகத்தையும் பொறுமையையும் ஒரே வசனத்தில் சொல்லியிருப்பார் கமல். "நான் அடிச்சா நீ செத்துருவ!" - கமல் திருப்பி அடிப்பதற்கான தேவை இருந்ததுதான். ஆனால் நாயகன் ஒரு பழிவாங்குபவனின் கதை அல்ல. ஒரு கோபக்காரனின், அல்லது, பதிலுக்கு பதில் அடிப்பவனின் கதையும் அல்ல என்பதில் மணிரத்னம் உறுதியாக இருந்தார்.

தூத்துக்குடியில இருந்து ஓடி வந்தியே ஏன்னு சில்லறையான உதாரணங்களுடன் கேட்ட நண்பனுக்கு, "நான் ஒரு ஆள கொன்னுட்டேன்" எனச் சாதாரணமாக அந்தச் சிறுவன் சொல்லும்போது எந்த விதமான மாஸ் பின்னணி இசையும் கேமராக் கோணங்களும் இருக்காது. மாறாக இளையராஜாவின் கனத்த குரல், ராகம் பாடும். அது பாழாய்ப்போன வேலுவின் பால்யத்திற்கான வருத்தத்தைத் தெரிவிப்பதாக அமைந்திருக்கும். படத்தின் இடைவேளைக் காட்சி ரெட்டி, வேலுவின் குடும்பத்தைக் கொல்ல தன் அடியாட்களிடம் கட்டளையிடுவதாக இருக்கும்.
இடைவேளை முடிந்த அடுத்த காட்சியில் படத்தின் நாயகி சரண்யாவின் கதாபாத்திரம் இறக்கிறது. அந்தப் பாத்திரத்தின் மரணம் இடைவேளைக் காட்சியாக இருந்திருந்தால் படம் இன்னும் மாஸாக உணரப்பட்டிருக்கும். ஆனால், அதன் பின்னர், அது ஒரு பழிவாங்கும் கதையாக உணரப்பட்டிருக்கும். அதன் உன்னத நோக்கம் சிதைந்து போயிருக்கும். மணிரத்னம் அதைத் தவிர்த்து, அப்போதும் தெளிவாகக் கதையை நகர்த்துவதில் மட்டும்தான் கருத்தாய் இருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"ஒரு ஆம்புலன்ஸ் என்ன விலை?"
"ஒண்ணு நாப்பதாயிரம் ரூபாய்க்கு மேல இருக்கும்."
"அஞ்சு வாங்குறோம். தாராவில நிறுத்துறோம். ஏழை ஆம்புலன்ஸ் பணக்காரனுக்கு ஓடாது."
நாம் திரையில் பார்த்தது வேலு நாயக்கரின் வாழ்க்கைதான். ஆனால் கதை அவரைப் பற்றியது இல்லை. வேலு நாயக்கரின் அப்பா கொல்லப்பட்ட காட்சி முதலே அந்தக் காலத்தில் முதலாளிகளுக்கு அடிமையாக இருந்த அதிகாரவர்க்கத்தின் கோரப்பற்கள் வெளிப்படத் தொடங்கின. அதையே நூலாகப் பிடித்துக் கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர்.

போலீஸ்காரர்கள், சேட் முதலாளி என எல்லாரும் நேரடியாக அடிவாங்குவார்கள். ஒரு தலைவனாக உருவாகிய வேலுவுக்கு தேவைகளும் அதிகரித்திருக்கும். அதனை உணர்த்துவதற்காகத்தான் ஆம்புலன்ஸ் காட்சி அமைந்திருக்கும்.
அரசாங்கம் ஒருபுறம் நேரடியாக நியாயமாக வரி விதித்து அந்த வருவாய்மூலம் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கும். மறுபுறம் முதலாளிகளிடம் கையூட்டும் வாங்கும். அதேபோல நாயக்கர் சட்ட விரோதமானவர்களுடன் இணைந்து பணம் சம்பதித்து அதிகாரத்துக்கு எதிராக இருந்து அவர்களால் ஒடுக்கப்படும் மக்களுக்கு உதவி செய்துவருவார்.

வேலு நாயக்கர் போலீஸ்காரர்களுக்கு எல்லாம் எதிரானவர் அல்ல, சில போலீசாருக்கு உதவியும் செய்திருப்பார். 8-10 வயது மகள், "அம்மா செத்ததுக்கு நீங்கதான் காரணம்னு சொல்றாங்க" எனும் போது மௌனமாய் இருப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரிந்திருக்காது. ஆனால், இளைஞியாக அவள் கேட்கும்போது "அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்" என ஆவேசமாகப் பதிலளிப்பார்.
வேலு நாயக்கர் அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் முறை சரியானது எனச் சொல்லிவிட முடியாது. இதை மணிரத்னமே சொல்லியிருப்பார். நீங்க நல்லவரா கெட்டவரா என்னும் கேள்விக்கு, முதிர்ந்த வேலு நாயக்கரால் "தெரியலயேப்பா" என்றுதான் பதில் சொல்லியிருக்க முடியும்.