Published:Updated:

என்ன செய்கிறார்கள் இவர்கள்?

மேகா ஆகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
மேகா ஆகாஷ்

ஹோம் ஸ்வீட் ஹோம்

என்ன செய்கிறார்கள் இவர்கள்?

ஹோம் ஸ்வீட் ஹோம்

Published:Updated:
மேகா ஆகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
மேகா ஆகாஷ்

கொரோனாவால் நிலவும் அசாதாரண சூழல் நம் எல்லோரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது. நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களின் சினிமா, ஷூட்டிங், ரெக்கார்டிங் என அனைத்தும் ரத்தாகியிருக்க, என்ன செய்கிறார்கள் இவர்கள்? இந்த இதழில் ஆங்காங்கே பார்க்கலாம்!

வர்ஷா பொல்லமா
வர்ஷா பொல்லமா

வர்ஷா பொல்லமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கூல் டைம்ல வாங்கின கிடாரை தூசி தட்டி எடுத்து, மறுபடியும் வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஷூட்டிங் டைம்ல அம்மாவோட சமையலை ரொம்ப மிஸ் பண்ணுவேன். இப்போ, கிச்சன்ல அம்மாவுக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

வித்யா பிரதீப்

மைக்ரோபயாலஜி முடிச்சிட்டு, `செல் கல்ச்சர் ரிசர்ச்' தொடர்பான வேலைகள்ல கடந்த ஐந்து வருஷமா தீவிர கவனம் செலுத்திட்டு வர்றேன் இடையில சீரியல், படங்கள்னு பிஸியாகிட்டேன். இந்த க்வாரன்டீன் நாள்கள்ல மறுபடியும் ரிசர்ச் பணிகளை ஆரம்பிச்சிருக்கேன். பெண்டிங் வைச்சிருக்கற பேப்பர் வொர்க்ஸ் எல்லாம் முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமா முடிக்கணும். வீட்ல அம்மா அப்பாகூட நேரம் செலவிட முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. அதெல்லாம் சரி பண்ற விதமா, அவங்ககூட சேர்ந்து வேலை செய்யறேன்.

பாடகி சைந்தவி
பாடகி சைந்தவி

பாடகி சைந்தவி

வீட்ல இருக்கிற இந்த நேரத்துல அம்மா அப்பாகூட சேர்ந்து வீடு சுத்தம் பண்றது, துணி துவைக்கிறது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் செஞ்சிட்டிருக்கேன்.

கல்யாணி பிரியதர்ஷன்

ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும், ஷெட்யூல் போட்டு வேலை செய்யறேன். நிறைய விஷயங்களை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.

கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்

ஷூட்டிங் இல்லாத இந்த நாள்கள் என்னை ரிலாக்ஸா வெச்சுக்க உதவுது. காலையிலே எட்டு மணிக்குதான் எழுந்துகிறேன். எழுந்த உடனே காபி குடிச்சிட்டு வொர்க் அவுட் பண்றேன். அப்படியே கொஞ்சம் தியானமும்.

ஸ்கிரிப்ட் படிக்கிறேன். தினமும் ஒரு படம் பார்த்துட்டு அதைப் பற்றி சோஷியல் மீடியால எழுதறேன். ஷூட்டிங் இருந்தா வெளியே கிடைக்கிற உணவை சாப்பிடுறப்ப ஒரு மாதிரியிருக்கும். இப்போ தினமும் வீட்டுல சமைச்சு சாப்பிடுறேன். சோஷியல் மீடியாவுல தேவையில்லாம நேரம் செலவழிக்கிறது கிடையாது. ஏன்னா, கொரோனா பற்றி தேவை யில்லாத வதந்திகள் நிறைய வருது!

ஐஸ்வர்யா மேனன்
ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனன்

எங்க வீட்டுக்கு புது வரவா ஒரு நாய்க்குட்டி வந்திருக்கு. ஆறு மாசம்தான் ஆகுது. `காபி'ன்னு பேர் வெச்சிருக்கேன். காபியோடதான் பெரும்பாலான நேரம் விளையாடிக்கிட்டு இருக்கேன். ஃபிட்னஸுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிற பொண்ணு நான். அதனால தினமும் வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன். தியானமும் செய்யறேன்.

சாயா சிங்
சாயா சிங்

சாயா சிங்

இப்ப நானும் கணவரும் வீட்ல இருக்கிற நேரம் அதிகமாகியிருக்கு. மொபலைப் பார்க்காம, நிறைய பேசறது, சேர்ந்து சமைக்கிறது, விளையாடறதுன்னு எங்களுக்கான நேரமா நல்லாவே போயிட்டிருக்கு!

ஹரிஜா
ஹரிஜா

ஹரிஜா

ஷூட்டிங் இல்லாததால, ஸ்க்ரிப்ட் எழுதறதுல கவனம் செலுத்திட்டு இருக்கேன். குடும்பத்தோட அதிக நேரம் செலவிடறது, நிறைய படங்கள் பார்க்கிறது, வொர்க் அவுட் பண்றதுன்னு நேரத்தைக் கழிக்க பிளான் பண்ணி ஃபாலோ பண்றேன்.

மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

ண்மையைச் சொல்லணும்னா வீட்ல இருக்கிறதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வேலை காரணமா எப்பவும் டிராவல்லேயே இருக்கிற எனக்கு, இந்த பிரேக் பிடிச்சிருக்கு. அதனால போர் அடிக்கலை. நினைக்கிறப்ப எல்லாம் ஸ்கெட்சிங், பெயின்டிங்ல இறங்கிடுறேன். அப்புறம் இருக்கவே இருக்கு நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்... படங்கள், ஷோஸ் பார்க்கிறேன். சமைக்க எனக்கு பிடிக்கும். ஆனாலும், `பேக்கிங்'தான் என் ஸ்பெஷாலிட்டி. வித்தியாசமான ப்ரவுன் கேக்ஸ் பண்ணிட்டு வரேன். இதையெல்லாம் தாண்டி, வீட்டைச் சுத்தப்படுத்துறதலதான் பெரும்பாலான நேரம் போகுது. சில புத்தகம் படிக்கிறேன். யோகா, தியானம் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்!

பிரியாமணி
பிரியாமணி

பிரியாமணி

ந்த நாள்களைக் குடும்பத்தோடு செலவிடக் கிடைச்ச பொக்கிஷ நாள்கள்னுதான் சொல்லுவேன். குடும்பமா சேர்ந்து படங்கள் பார்க்கிறோம். இதுவரை நாங்க மிஸ் பண்ணின டி.வி ஷோ, வெப்சீரிஸ்னு கலந்துகட்டி பார்த்துட்டு இருக்கோம். கூடவே வீடியோ கால்ல சொந்தங்கள், நண்பர்கள்னு பேசுறதுல நேரம் போறதே தெரியலை.

கயல் ஆனந்தி
கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி

ல்லா சமைப்பேன். அதனால இப்பல்லாம் வீட்ல என் சமையல்தான். சினிமா, படிப்புன்னு இதுவரைக்கும் ஓடிட்டு இருந்ததுனால விட்டு போன ஆர்ட் பெயின்ட்டிங் வேலையைக் கையில் எடுத்திருக்கேன்!

`சில்லுக்கருப்பட்டி’ நிவேதிதா
`சில்லுக்கருப்பட்டி’ நிவேதிதா

`சில்லுக்கருப்பட்டி’ நிவேதிதா

ன்ஸ்டாகிராம்ல நிறைய கேம்ஸ் இருக்கு.தையெல்லாம் ட்ரை பண்றது, நல்லா சாப்பிடுறது, தூங்கறது, புத்தகம் படிக்கிறதுன்னு என் நாள்களைக் கடத்திட்டு இருக்கேன்!

இவானா
இவானா

இவானா

கேரளாவுல கொரோனா தாக்கம் கொஞ்சம் அதிகமாதான் இருக்கு. ஒரு மாசமா வீட்டுலயே இருக்கேன். அடிக்கடி ஃபிரெண்ட்ஸ்கூட வீடியோ கால் பேசுறேன். `நைட் தூக்கம் வரலையா... போடு வீடியோ கால்' என்கிற நிலைமையில இருக்கேன். அம்மாகிட்ட சமையல் கத்துக்கிட்டு இருக்கேன். வீட்டை அடிக்கடி சுத்தப்படுத்துறேன். அடுத்து கிடாரை எடுக்கலாம்னு இருக்கேன். இனி இசை மழைதான்!