Published:Updated:

அமிதாப் பச்சன் முதல் அலெக்ஸாண்டர் பாபு வரை..! - சோஷியல் மீடியாவின் `நண்பேண்டா' பிரபலங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் ஒரு புறம் மூடப்பட, மறுபுறம் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க சினிமா படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

சினிமா மற்றும் அதன் கலைஞர்களின் பிரதான நோக்கமே கலை மூலமாக மக்களை மகிழ்விப்பதுதான். அப்படியிருக்கையில் சினிமா வரலாற்றில் இதுவரை காணாத சம்பவங்களை எல்லாம் கொரோனா அரங்கேற்றியிருக்கிறது. தினமும் கொரோனா குறித்தான செய்திகளும் தகவல்களும் திசைக்கொன்றாக வந்தபடி இருக்கின்றன. மக்களின் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் ஒரு புறம் மூடப்பட, மறுபுறம் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க சினிமா படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

பல படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்த நிலையில், அவையனைத்தும் எப்போது வெளியிடப்படும் என முடிவு செய்யப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் வீட்டு வேலைகள், படங்கள் வெப் சீரிஸ் பார்ப்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது எனத் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கின்றனர்.

social media
social media

இந்நிலையில் பல பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வீட்டில் இருந்தபடியே களத்தில் இறங்கியுள்ளனர். வொர்க்கவுட் வீடியோக்கள், குடும்பத்துடனான வீடியோக்கள் என இந்த க்வாரன்டீன் நாள்களில் யார் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தான ரவுண்டப்!

சோஷியல் மீடியாவில் இந்த க்வாரன்டீன் நாள்களில் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வருகிறார் நடிகர் சூரி. குழந்தைகளிடம் டிவி ரிமோட் வாங்க படாதபாடுபடுவது, அவர்களைக் குளிப்பாட்டுவது, வீட்டில் சமையல் செய்வது, கல்யாண ஆல்பத்தைக் குழந்தைகளுக்குக் காட்டி கதைகள் சொல்வது, குழந்தைகளுடன் விளையாடுவது என சூரியும் அவரது குழந்தைகளும் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றும் அதகளம்.

View this post on Instagram

#corona #stayhome #staysafe #stayhealthy #lockdown

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

அதோடு சேர்த்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீட்டிலேயே இருங்கள்... இருக்கும் நேரத்தைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடுங்கள் என சூரி வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் வியூஸ் அள்ளுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமண வாழ்வில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் பிஸியாக இருக்கிறார் சமீரா ரெட்டி. இந்த க்வாரன்டீனில் அவரது மகனும், குட்டிப்பாப்பாவும் ஒரே வீட்டுக்குள் செய்யும் க்யூட் சேட்டைகளும் அவர்களைச் சமாளிக்கும் சமீராவும் நெட்டிசன்களின் ஆல்டைம் ஃபேவரைட்.

குழந்தைகளின் சேட்டைகளை மட்டும் பகிராமல், இந்த நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து ஆக்டிவிட்டிஸ் செய்வது, பேரன்டிங், இந்த லாக் டௌன் சூழலில் வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு வரும் மனச்சோர்வு ,அதனால் க்வாரன்டீனுக்கான வழிவகைகளைச் சரியான முறையில் பின்பற்றுங்கள் என மெசேஜ்களையும் பதிவிடுகிறார் சமீரா.

நடிகை தமன்னா, தனது சிறுவயதுப் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம், சிறுவயதில் தனக்கிருந்த டைரி எழுதும் பழக்கம் போன்ற சுவாரஸ்யமான வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். மேலும் இந்த 21 நாள்களில் உடல் நலத்தைப் பேண உணவுப்பழக்கவழக்கங்கள் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறியுள்ளார் தமன்னா.

உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்டவர்களான ராஷ்மிகா, ரகுல்ப்ரீத் சிங், எமி ஜாக்சன், ஷ்ருதி ஹாசன்,ஆண்ட்ரியா, விஷ்ணுவிஷால் போன்றோர் வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சிகள் செய்வது, ஆன்லைன் மூலம் தங்கள் பயிற்சிகளின் வழிகாட்டுதலின்படி செய்வது என இந்த க்வாரன்டீன் நாள்களில் தங்கள் ஃபிட்னெஸில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் அவர்கள் ஷேர் செய்யும் வீடியோக்களுக்கு ரசிகர்களிடமிருந்து தினமும் பாசிட்டிவ் நோட் அள்ளுகிறது.

கொரோனா, விலங்குகள் மூலமும் பரவி வருகிறது என்ற வதந்தி ஒருபக்கம் பரவ, இந்தச் செய்தியால் நாய்கள் கவனிக்கப்படாமல் இருப்பது குறித்தும் இந்தச் செய்தியின் அபத்தம் குறித்தும் தனது இன்ஸ்டா பேஜில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார் வரலட்சுமி.

ஃபேமிலி
ஃபேமிலி
குறும்படம்

இதுபோலவே, இந்திய சினிமாக்களின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், ரன்பீர், பிரியங்கா சோப்ரா, அலியாபட் எனப் பல முன்னணிக் கலைஞர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொலைந்துபோன அமிதாப்பின் கண்ணாடியைத் தேடுவது என ஒரு கான்செப்ட்டின் கீழ் அனைவரும் அவர்கள் வீடுகளில் இருந்தபடியே நடித்து ஒரு குறும்படமாக வெளியிட்டு அதன் மூலம் பாதிக்கப்படும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

இந்த ஸ்டைலிலேயே நடிகர்கள் முனீஷ்காந்த், காளிவெங்கட், பாலசரவணன், கருணாகரன் ஆகியோர் இணைந்து சமூக விலகலை வலியுறுத்தும் விதமாக தங்கள் ட்ரேட்மார்க் காமெடியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இவர்களைப் போலவே, பாடகர்கள் ஸ்வேதா மேனன், சைந்தவி, ஸ்வாகதா, சத்ய பிரகாஷ், நடிகர்கள் நகுல், பரத் ஆகியோர் எவர் க்ரீன் ஹிட் பாடல்களையும் தனிப்பாடல்களையும் பாடித் தங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

கிளாசிக் பாடல்கள், நகைச்சுவை எனத் தனது வித்தியாசமான ஸ்டேண்டப் காமெடி பர்ஃபாமன்ஸ் மூலம் தற்போதைய மில்லினியல் தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்திழுத்த அலெக்ஸாண்டர், இந்த க்வாரன்டீன் நாள்களில் ரசிகர்களைத் தனது ரகளையான பாட்டுகளின் மூலம் சோஷியல் மீடியாவில் கட்டிவைத்திருக்கிறார்.

இதுபோலவே, மற்ற பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் லைவ் வருவது, மீடியாக்கள் மூலம் லைவில் ரசிகர்களுடன் உரையாடுவது எனத் தங்களையும், தங்கள் ரசிகர்களையும் இந்த க்வாரன்டீன் நாள்களில் மகிழ்வித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு