Published:Updated:

ப்ளாங்கட் சேலஞ்ச் சமீரா; விர்ச்சுவல் சேலஞ்ச் ஆண்ட்ரியா! - சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது?

சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

ப்ளாங்கட் சேலஞ்ச் சமீரா; விர்ச்சுவல் சேலஞ்ச் ஆண்ட்ரியா! - சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது?

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

Published:Updated:
சோஷியல் மீடியா ரவுண்டப்!

சோஷியல் மீடியாவில் எது எப்போது வைரலாகும் என்பது கணிக்க முடியாதது. `ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’, `தி ரியல் மேன் சேலஞ்ச்’ என சீஸனுக்கு ஏற்றவாறு இந்த மாதிரியான சவால்களும் டிரெண்டிங் ஆகும். அப்படி சமீபத்தில் சோஷியல் மீடியாவில் ‘பில்லோ சேலஞ்ச்’ வைரலானது. பெரிய சைஸ் தலையணையை உடையாக அணிவதே இந்த சேலஞ்ச்.

பில்லோ சேலஞ்சைத் தொடர்ந்து தற்போது `ப்ளாங்கட் சேலஞ்ச்’ வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்சை வீட்டில் இருந்தபடியே சோலோ ஃபேஷன் ஷோவாக மாற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார் நடிகை சமீரா. அவரின் குழந்தைகளின் சேட்டைகளும், பேரண்டிங் வீடியோக்களும் நெட்டிசன்களின் ஆல் டைம் ஃபேவரைட். இந்நிலையில் சமீராவின் இந்த வீடியோவுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

உச்சிகுடுமி சேலஞ்ச்
உச்சிகுடுமி சேலஞ்ச்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோலிவுட்டிலிருந்து கன்னடத்துக்கு ரீமேக் ஆன படங்கள் குறித்தான ட்ரோல், சமீபத்தில் வைரலானது. அப்படித் தமிழில் எடுக்கப்பட்டு பிறகு கன்னடத்துக்கு ரீமேக்கான படங்களில் ஒன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த `கோவா’. வைபவ், ஜெய், பிரேம்ஜி மற்றும் பலர் நடிப்பில் 2010-ல் வெளியான இந்தப் படத்தை 2015-ல் கன்னடத்தில் அதே பெயரிலேயே ரீமேக் செய்தனர்.

தற்போது கன்னட சினிமா ட்ரோல் வைரலானதைத் தொடர்ந்து பிரேம்ஜி கோலிவுட்டில் தான் நடித்த`கோவா' பட போர்ஷனின் கன்னட வெர்ஷனைப் பகிர்ந்திருந்தார். இதற்கு கமென்டில் ரசிகர்கள் பலரும் தங்கள் ட்ரோல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

❤️#terrace

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

கொரோனாவால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் நிபந்தனைகளுடன் அரசு ஊரடங்கைத் தளர்த்தியது. அதில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு கடையிலிருந்து பொருள்கள் வாங்கி வெளிவருவது போல வீடியோ வெளிவந்திருந்தது. அதில் அவர் மதுபானங்கள் வாங்கி செல்கிறாரா என்ற கேப்ஷனோடு சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்தது.

அந்த வீடியோவை கோட் செய்து, `மருந்துக் கடைகளில் மதுபானங்கள் விற்பார்கள் என எனக்குத் தெரியாது’ என்ற கேப்ஷனோடு அந்த போட்டோவைப் பதிவிட்டிருந்தார்.

யாரென்று தெரிகிறதா?
யாரென்று தெரிகிறதா?

தமிழில் `மொழி’, `சத்தம் போடாதே’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பிரித்விராஜ். மலையாளத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனத் தற்போது பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘ட்ரைவிங் லைசென்ஸ்’, அய்யப்பனும் கோஷியும்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் இவரது அடுத்த படமான `அடுத்த ஜீவிதம்’ படத்துக்கான படப்பிடிப்பு ஜோர்டானில் நடைபெற்றது.

கொரோனாவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்தாகி போக்குவரத்தும் முடங்க, கடந்த இரு மாதங்களாகக் கேரளா திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கியிருக்கிறது படக்குழு. கடந்த ஏப்ரல் மாதம் பிரித்விராஜின் திருமண நாளுக்குக்கூட குடும்பத்தை மிஸ் செய்வதாகத் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் ப்ரித்வி. தற்போது அவரின் 5 வயது மகள் தினமும், ‘லாக்டெளன் முடிந்துவிட்டதா? அப்பா இன்னைக்கு வந்துருவாரா?’ எனக் கேட்பதாகவும், இருவரும் பிரித்வியைப் பார்க்கக் காத்திருப்பதாகவும் அவரின் மனைவி சுப்ரியா வருத்தத்துடன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

பாபி சிம்ஹா குடும்பத்துடன்
பாபி சிம்ஹா குடும்பத்துடன்

`விர்ச்சுவல் ஃபோட்டோஷூட்’ தற்போது பிரபலமாகி வருகிறது. லாக்டெளனால் எல்லோரும் குறும்படம், திருமணம், பார்ட்டி என விர்ச்சுவலாகக் கொண்டாடிக்கொண்டிருக்க, ‘விர்ச்சுவல் ஃபோட்டோஷூட்’டும் தற்போது இளைஞர்களிடையே லைக்ஸை அள்ளி வருகிறது.

சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, ஷ்ரேயா, நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், நடிகர் ஹரிஷ் கல்யாண் என இவர்கள் எல்லாம் தங்களுடைய விர்ச்சுவல் ஃபோட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். வீடியோ மூலமாகக் குறிப்புகள் கொடுத்தோ, வீடியோ மூலமாகவோ அப்படியே புகைப்படம் எடுப்பதுதான் இந்த `விர்ச்சுவல் ஃபோட்டோஷூட்’டின் அடிப்படை கான்செப்ட்.