Published:Updated:

``ராஜா சார்கூட வொர்க் பண்ணும்போது பயமா இருந்தது!" - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சிது

செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சிதுவிடம் அவரது பயணம் குறித்து பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீபத்தில், புகைப்படக்கலைஞர் கார்த்திக் சீனிவாசனின் `தி ராயல்ஸ்' காலண்டருக்காக அருண் விஜய், சிம்பு, விஷ்ணு விஷால், பரத், ஓவியா, மேகா ஆகாஷ், ப்ரியா ஆனந்த் எனப் பல பிரபலங்கள் `கிங் அண்டு குயின்' லுக்கில் மிரட்டி எடுத்த புகைப்படங்களும், அந்த காலண்டரும் கடந்த மாதம் வெளியாகி வைரலானது.

அந்த லுக்கிற்கான காஸ்டியூம், ஹேர் ஸ்டைல் போலவே பிரத்யேகமாகக் கவனிக்கப்பட்டது மேக்கப். அந்த காலண்டரில் பிரபலங்களுக்கான அவுட் லுக்கில் வேலை பார்த்த செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சிதுவிடம் அந்த அனுபவங்கள் குறித்தும், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக அவரது பயணம் குறித்தும் பேசினோம்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் சிது
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் சிது

``என்னோட சொந்த ஊர் ஆந்திரா. சினிமா பின்னணி இல்லாத குடும்பம். சினிமாவுல மேக்கப் துறையில வேலை பார்க்கணும்ங்கிற ஆர்வத்துல சென்னை கிளம்பி வந்துட்டேன். சினிமாக்குள்ள வந்து கிட்டத்தட்ட 25 வருஷம் ஆகுது. மேக்கப் யூனியன்ல சேர்ந்ததும் ரூல்ஸ்படி 2 வருஷம் சீரியல்ல அசிஸ்டென்ட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா வேலை பார்த்தேன்.

அதுக்கப்புறம் சினிமாவுல நிறைய படங்கள் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா பண்ணியிருந்தாலும் `ரன்' படம்தான் என் கரியரைத் தொடங்கின காலத்துல பெரிய படமா இருந்தது. பாவனா, அசின், பூர்ணா, ஶ்ரீதிவ்யா, நமீதான்னு பல ஹீரோயின்களுக்கும் பர்சனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா இருந்திருக்கேன்" என சினிமாவில் தனது ஆரம்பகாலப் பயணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தவர், புகைப்படக்கலைஞர் கார்த்திக் சீனிவாசனின் காலண்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கான மேக்கப் அனுபவங்களையும் பகிர்ந்தார்.

``சமீபத்துல நான் வொர்க் பண்ணதுலே மறக்க முடியாதது கார்த்திக் சீனிவாசன் சாரோட காலண்டர் வொர்க்தான். என்ன மேக்கப், எந்த மாதிரி பண்ணப் போறோம்னு எந்த ஐடியாவும் இல்லாமதான் போனேன். ஸ்பாட்டுக்குப் போனதும்தான் காஸ்டியூம், ஹேர் ஸ்டைல் எல்லாம் காட்டி இது எந்த மாதிரியான கான்செப்ட், அதுல நம்மகிட்ட இருந்து எந்த மாதிரியான மேக்கப்பை எதிர்ப்பாக்குறாங்கனு எல்லா விஷயங்களும் கார்த்திக் சார் சொன்னார். ஜீவா, பிரபு, விஷ்ணு விஷால், சிம்பு, போட்டோகிராஃபர் கார்த்திக்னு எல்லாருக்கும் என்னோட மேக்கப் பிடிச்சிருந்தது."

ஜீவாவுடன்
ஜீவாவுடன்

``ஜீவா சாருக்கு நான் பண்ண மேக்கப் ரொம்பவே பிடிச்சிடுச்சு. `நான் இதுவரை படங்களுக்கு பண்ணிக்கிட்ட மேக்கப்பைவிட இது பெஸ்ட்டா இருக்கு'னு சொன்னது மறக்க முடியாதது" எனச் சொல்லுபோதே குரலில் உற்சாகம் தெறிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆரம்பத்துல இந்தத் தொழில் கத்துக்கும்போது கஷ்டமா இருந்தது. மேக்கப் நுணுக்கங்கள் கத்துக்குறது, மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகிக்கறதுன்னு இப்போ பழகிடுச்சு.

கதைக்குத் தேவைங்கிறதைத் தவிர்த்து, சாதாரணமா சினிமாவுல ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குப் பண்ற மேக்கப், அந்தக் காலத்துல இருந்ததுக்கும் இப்போ இருக்கிற மேக்கப்புக்கும் பயங்கர வித்தியாசப்பட்டிருக்கு. அப்போலாம் ஹெவியா ஆர்டிஸ்ட்களுக்கு மேக்கப் போடுவோம். இப்போ ரொம்ப இயல்பான நேச்சுரல் லுக்லதான் கேட்குறாங்க."

இளையராஜாவுடன்
இளையராஜாவுடன்

``சினிமாவுல மட்டுமல்ல, நிறைய விளம்பரங்கள்லேயும் வேலை பார்த்திருக்கேன். ஒரு பிரபலமான நகைக்கடை விளம்பரத்துல இளையராஜா சார் நடிச்சிருப்பார். அந்தச் சமயத்துல, அவருக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நான்தான். அவர்கூட வொர்க் பண்ணும்போது எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா, இளையராஜா சார் அந்தச் சமயத்துல வொர்க் டென்ஷன்லாம் எதுவும் இல்லாம ரொம்பவே ஜாலியா இருந்தார்."

``சினிமா, விளம்பரம் இரண்டுடைய வொர்க்கிங் ஸ்டைலுக்கும் என்ன வித்தியாசம்?"

விளம்பர படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷாவுடன்
விளம்பர படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷாவுடன்

``விளம்பர ஷூட் மேக்கப்க்கும், சினிமா ஷூட் மேக்கப்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. விளம்பரத்துக்காக மேக்கப், காஸ்ட்யூம், ஹேர்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் ரொம்ப மெனக்கெடுவாங்க. கேமராமேன், ஆர்ட்டிஸ்ட், இயக்குநர்னு அங்க எல்லாருக்கும் மேக்கப் திருப்தியா இருக்கணும். ஆனா, சினிமாவுக்கு அப்படித் தேவையில்லை.

எந்தத் துறையில இருந்தாலும் சரி, அந்தத் துறையில நடக்குற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி நம்மளை அப்டேட் பண்ணிக்கிறது ரொம்பவே முக்கியமான விஷயம். அப்பதான் நமக்கான இடம் எப்பவுமே நிரந்தரமா இருக்கும். இது மேக்கப் ஆர்ட்டிஸ்டுகளுக்கு ரொம்பவே முக்கியம். நானும் அதை நோக்கிதான் ஓடிட்டிருக்கேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு