Published:Updated:

``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

ப்ரீத்தம்
News
ப்ரீத்தம்

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் `சைக்கோ' படத்தில், ரேச்சல் எனும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ப்ரீத்தம். இவரின் தனிப்பட்ட நடிப்பு எல்லோரையும் கவர்ந்திருந்தது. படம் குறித்து இவரிடம் பேசினோம்.

``கிட்டத்தட்ட 40 வருடங்களாக நாடகத் துறையில இருக்கேன். தமிழ்நாட்டுல இருக்கிற நிறைய குழுக்களோட நடிச்சிருக்கேன். கூத்துப் பட்டறை நாடங்கள்லேயும் நடிச்சிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது, நாடகங்கள்ல நடிக்கிறதும் இந்தக் கலையை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறதும்தான். தனிநபர் நாடகங்கள் நிறைய பண்ணியிருக்கேன். வயசு 60 ஆகிடுச்சு. என்னோட மொத்தக் குடும்பமும் நாடகத்துலதான் இருக்காங்க. தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்கேன். இப்போ, ஹைதராபாத் ராமநாராயணன் ஃபிலிம் ஸ்கூல்ல புரொஃபஸரா இருக்கேன். நானே ஸ்க்ரிப்ட் எழுதி நடிக்கிறதைவிட, மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறது ரொம்ப நல்லா இருக்கு."

``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``நிறைய நாடகங்கள்ல நடிச்சிருந்தாலும் படத்துல நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சதே இல்லை. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது மிஷ்கின் சார்தான். என் கணவரோட `சுவர்கள்' புத்தக வெளியீட்டு விழாவுக்கு மிஷ்கின் சார் வந்திருந்தார். என்னோட சின்னப் பொண்ணு சம்யுக்தாவுக்கு மிஷ்கின் நல்ல பழக்கம். அவங்க மூலமா மிஷ்கினைப் பார்த்து பேசினேன். `சைக்கோ' படத்தோட ஸ்க்ரிப்ட்டை அப்போதான் எழுதி முடிச்சிருந்தார். அவருக்கு, என்னை டீச்சர் ரேச்சல் ரோல்ல நடிக்கவைக்கலாம்னு தோணியிருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு போன் பண்ணி, `நீங்க நடிக்கிறதா இருந்தா அந்த கேரக்டருக்கு இன்னும் வலு சேர்க்கிறேன்'னு சொன்னார். `சரி, பண்றேன்'னு சொல்லிட்டு கதையைக் கேட்காம நேரா ஷூட்டிங் ஸ்பாட் போயிட்டேன்."

``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பாண்டிச்சேரியிலதான் ஷூட்டிங் நடந்தது. என்னோட போர்ஷனை 4 நாள்ல முடிச்சிட்டார். ஏற்கெனவே நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்ததால, கேமரா பயமெல்லாம் இல்லை. டயலாக் பேப்பரை மட்டும் கையில கொடுத்தார் மிஷ்கின். நமக்கு என்ன தோணுதோ அதை நடிக்கச் சொல்வார். நடிச்சது அவருக்கு ஓகேனு தோணுச்சுனா, டேக்கை ஓகே பண்ணிடுவார். டப்பிங் பேசும்போது கூடதான் இருந்தார். என்னோட மாடுலேஷன்ல பேசச் சொல்லிட்டார். அரைமணி நேரத்துல டப்பிங் முடிச்சிட்டேன்."

``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

``படத்துல அதிதி கூடவும், வில்லன் கூடவும்தான் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இருக்கும். பரபரப்பா ஷூட்டிங் போனதால அதிகமா யார்கூடவும் பேச வாய்ப்பு கிடைக்கலை. அதிதிக்குதான் தமிழ் சரியா பேச வரலை. அவங்களுக்கு மட்டும் கொஞ்சம் உதவியா இருந்தேன். ரொம்ப சின்னப் பொண்ணு அதிதி. படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகப்போகுது. இன்னும் நான் படம் பார்க்கலை. பரத்வாஜ் ரங்கன் போன் பண்ணி, `நல்லா நடிச்சிருக்கீங்க'ன்னு பாராட்டினார்."

``நாடகத் துறையில இருக்கிற என்னை மாதிரியான ஆளுங்களுக்கு ஏத்த மாதிரியான கேடர்கடர்களை இயக்குநர்கள் யாரும் எழுதுறது இல்லை. மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா மாதிரியான சிலர்தான் எங்களோட கேரக்டரை உருவாக்குறாங்க. அஜித், விஜய் படங்கள்ல எங்களோட கேரக்டர் சுத்தமா இருக்காது. அப்படியே இருந்தாலும் கூட்டத்துல ஒரு ஆளாதான் இருக்கும். ஸ்கோப் இல்லாத கேரக்டர்ல நான் நடிக்கவே மாட்டேன். லட்டு மாதிரியான கேரக்டர்கள் எங்க யாருக்கும் கிடைக்கிறது இல்லை. இப்போ எடுக்குற சினிமாக்கள்ல ஹீரோவைச் சுத்தியே கதை நகருது. அவங்களைத் தூக்கிப்பிடிக்கிற மாதிரியான வசனங்கள் நிறைய இருக்கும். இதுல எனக்கு பெரிய ஒப்புதல் கிடையாது. `சைக்கோ' படத்துல நடிச்சதை அதிர்ஷ்டமாதான் நினைக்கிறேன்.

``குறிப்பா, இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைச்சிருக்கார். படத்தோட டப்பிங் போதுதான் மிஷ்கின் இதைச் சொன்னார். எனக்கு சந்தோஷமா இருந்தது. இந்தப் படத்துக்காக என்னோட லுக்கை கொஞ்சம் மாத்தினார் மிஷ்கின். நீளமான முடி வெச்சிருந்தேன். ஒரு சின்ன விபத்துல கை எலும்பு உடைஞ்சிடுச்சு. அதனால தலையை வார முடியலன்னு முடியை வெட்டியிருந்தேன். இந்த லுக் மிஷ்கின்னுக்கும் பிடிச்சிருந்ததால படத்துலேயும் அப்படியே நடிக்கவெச்சிட்டார். சிகரெட் பிடிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. நிறைய பேர் என் நடிப்பு இயல்பா இருந்ததா சொன்னாங்க. எல்லாப் பெருமையும் அவருக்குதான் சேரும்'' என்றார் ப்ரீத்தம்.