Published:Updated:

அனிமல் லவ், மாடித்தோட்டம், இளையராஜாவுடன் டூயட்! - ‘கே.ஜி.எஃப்’ பாடகி அனன்யாவின் அசத்தல்

அனன்யா
பிரீமியம் ஸ்டோரி
அனன்யா

தோட்டப் பாராமரிப்புல எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டு மொட்டைமாடியில 50 தொட்டிகளோடு சின்னதா தோட்டம் அமைச்சிருக்கேன்.

அனிமல் லவ், மாடித்தோட்டம், இளையராஜாவுடன் டூயட்! - ‘கே.ஜி.எஃப்’ பாடகி அனன்யாவின் அசத்தல்

தோட்டப் பாராமரிப்புல எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டு மொட்டைமாடியில 50 தொட்டிகளோடு சின்னதா தோட்டம் அமைச்சிருக்கேன்.

Published:Updated:
அனன்யா
பிரீமியம் ஸ்டோரி
அனன்யா

‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகத்தில் ‘தீரா தீரா’ மற்றும் ‘கருவினில் எனை சுமந்து’ பாடல்களால் இந்தியா முழுக்க ஒலித்தது அனன்யா பட்டின் குரல். இரண்டாம் பாகத்தில் ‘வா வா என் அன்பே (மெஹபூபா)’ பாடலால் உருக வைத்தார். கன்னட சினிமாவின் சென்சேஷனல் சிங்கர் அனன்யாவுடன் ‘சாட்’ செய்தோம்.

சினிமா என்ட்ரி...

“மூணு வயசுலேருந்து மியூசிக் கத்துக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவுல பாட ஆரம்பிச்சதோடு, ஸ்டேஜ் டிராமாவுலயும் நடிச்சேன். பி.காம் முடிச்சதும், இதுதான் என் கரியர்னு சினிமாவுல நுழைஞ்சுட்டேன்.

வாழ்க்கை எப்படிப் போகுது?

என் பூர்வீகம் மைசூரு. யாரையும் எதிர் பார்க்காம சொந்தக்கால்ல நிற்கணும்னு ஆசைப்பட்டேன். என் பெற்றோர் தட்டிக் கொடுத்தாங்க. இப்போ பெங்களூருவுல தனியா வசிக்கிறேன். எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள்னா தனிப்பிரியம். அதுக்காகவே, இசைக்குழு ஒண்ணு நடத்துறேன். அந்த வேலை, பயிற்சி, சினிமா ரெக்கார்டிங்னு லைஃப் பிஸியாவும் ஹேப்பியாவும் போகுது.

அனன்யா
அனன்யா

‘கே.ஜி.எஃப்’ எவ்ளோ ஸ்பெஷல்?

மியூசிக் டைரக்டர் ரவி பாஸ்ருர், டிராக் பாடத்தான் முதல்ல என்னைக் கூப்பிட்டார். எதிர்பாராத வகையில, நாலு பாடல்களைப் பாடுற வாய்ப்பைக் கொடுத்தார். ‘கே.ஜி.எஃப்’ கன்னடப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்துல டப் செய்யப்படுற தகவலைச் சொல்லி, மத்த நாலு மொழிகள்லயும் பாடுறீங் களான்னு கேட்டாங்க. அந்த வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு மாதிரி அமையும்னு நான் நினைக் கலை. கன்னடத்துல நான் பாடின நாலு பாடல்கள், மத்த நாலு மொழிகள்லயும் பாடினதுனு மூணே நாள்கள்ல 20 பாடல் களைப் பாடினேன்.

அந்தப் பாடல்கள் பெரிசா பேசப்பட்டதால, ‘கே.ஜி.எஃப்’ ரெண்டாவது பாகத்துலயும் ரவி சார் என்னைப் பாட வெச்சார். மறுபடியும் ஜாக்பாட் அடிச்ச மாதிரி, மத்த நாலு மொழி கள்லயும் ‘மெஹபூபா’ பாடலைப் பாடினேன். ‘கருப்பன்’லேருந்து ‘நெஞ்சுக்கு நீதி’வரைக்கும் தமிழ்ல பல படங்கள்ல பாடியிருக்கேன். ஆனா, கோலிவுட் டு பாலிவுட்வரைக்கும் ‘கே.ஜி.எஃப்’தான் என்னை அடையாளப்படுத்தி யிருக்கு.

லேட்டஸ்ட் குட் நியூஸ்...

இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோரின் மியூசிக்ல பாடுறது என் பெரிய கனவு. அதுல முதல் ஆசை, சில மாதங்களுக்கு முன்பு நடந்துச்சு. வெற்றிமாறன் சார் இயக்கும் ‘விடுதலை’ படத்துல பாட இளையராஜா சார்கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. ராஜா சார் எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த போது, வியப்பு, பயம், சந்தோஷம்னு பலவித மான உணர்வுகள் ஏற்படவே, கண்கலங்கிட் டேன். ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் டூயட் பாடப் போறோம்’னு அவர் சொன்னதும் எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. பயத்தை வெளிக்காட்டிக்காம ராஜா சாருடன் சேர்ந்து பாடி னேன். மறுநாள் சோலோ சாங் ஒண்ணும் பாடினேன். தவிர, ‘சேனா புரா’ங்கிற கன்னடப் படத்துல மியூசிக் டைரக்டரா வேலை செய்யுறதோடு, ஹீரோயினாவும் நடிக்கிறேன்.

பொழுதுபோக்கு...

தோட்டப் பாராமரிப்புல எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டு மொட்டைமாடியில 50 தொட்டிகளோடு சின்னதா தோட்டம் அமைச்சிருக்கேன். கிச்சன் கழிவுகளை உரமா பயன்படுத்து றேன். சமையலுக்கான ஃபிரஷ் ஷான காய்கறிகளை மாடித்தோட்டத்துல பறிச்சுப் பேன்.

குரல்வளப் பராமரிப்பு...

ஐஸ் வாட்டரும் ஜூஸும் குடிக்க மாட்டேன். வெந்நீர் தான் குடிப்பேன். எப்பயாச்சும் தான் ஸ்வீட் சாப்பிடுவேன். நான் பக்கா சைவம். பச்சைக் காய்கறிகள், பழங்களைத்தான் அதிகமா எடுத்துப்பேன். எண்ணெய் உணவுகளைத் தவிர்த்துடுவேன்.

முணுமுணுக்கிற பாடல்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார்தான் என் ஆல்டைம் ஃபேவரைட் சிங்கர். அவர்கூட சேர்ந்து டூயட் பாடணும்ங்கிற ஆசை நிறைவேறாமலேயே போயிடுச்சு. ஆனா, அவரைச் சந்திச்சுப் பேசியிருக்கேன். அவர் பாடல்களைக் கேட்காம என் பொழுதுகள் முழுமை யடையாது. தமிழ்ல பி.சுசீலா அம்மா பாடின ‘கண்ணுக்கு மை அழகு’ பாடலை அடிக்கடி முணுமுணுப்பேன்.

அனன்யா
அனன்யா

ஃபேஷன் ஆர்வம்...

எனக்கான டிரஸ் எல்லாத்தையும் நானேதான் டிசைன் பண்ணுவேன். எம்ப்ராய்டரிங் வேலையும் தெரியும். சினிமாவுல ஃபேஷன் டிசைனரா வேலை செய்யவும் எனக்கு விருப்பம் உண்டு. ஒரு தொழில் கைவிட்டாலும் இன்னொரு தொழில் காப்பாத்திடும்னு நம்புறேன்.

எதிர்காலத் திட்டம்...

வீரா, சிம்மினு ரெண்டு நாய்களை வளர்த்தேன். அதுல வீரா இறந்துட்டான். அவன் பெயரை என் கையில பச்சை குத்தியிருக்கேன். சிம்மி மட்டும் வீட்டுல எனக்குத் துணையா இருக்கு. இந்தியாவிலேருக்கிற வன விலங்கு சரணாலயங்களுக் கெல்லாம் ட்ரிப் போகணும்; பராமரிப்பு மையம் தொடங்கி, ஆதரவற்ற, உடல்நிலை சரியில்லாத பிராணிகளை வளர்க்கணும். மிருகக்காட்சி சாலையில ஆரோக்கியமான விலங்கு களைக் கூண்டுக்குள்ள அடைச்சுவெச்சு காட்சிப் பொருளாக்கிறது எனக்குச் சுத்தமா பிடிக்காது.

சினிமாவுல கத்துகிட்ட பாடம்...

ஆரம்பத்துல சரியான வாய்ப்புகள் கிடைக்காம அலைக்கழிக்கப்பட்டிருக் கேன். நான் பாடின சில பாடல்களுக்குச் சம்பளம் தராம ஏமாத்தியிருக்காங்க. சில படங்கள்ல டைட்டில் கார்டுல என் பெயரைச் சேர்க்காம இருந்திருக்காங்க. இப்பவும் சிக்கல்கள் தொடர்ந்தாலும், முன்பை விட நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. நமக்கான குரல் ஒலிக்கிற வரைக்கும் பொறுமையா இருந்துதான் ஆகணும். ஒருத்தரோட இடத்தை நிரப்ப பலர் உருவாகிட்டே இருக்காங்க. எனவே, சலிப்படையாம ஓடிக்கிட்டே இருக்கணும். இதையெல்லாம் நல்லாவே உணர்ந்திருக்கேன்.”