Published:Updated:

கௌதம் மேனன் ஹீரோயின், சமந்தா தங்கச்சி, பொன்னியின் செல்வி!

ஸ்ரேயா சர்மா, ஸ்ரேயா சர்மா, அனைகா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரேயா சர்மா, ஸ்ரேயா சர்மா, அனைகா

அனைகா, சாரா அர்ஜூன், ஸ்ரேயா சர்மா

கௌதம் மேனன் ஹீரோயின், சமந்தா தங்கச்சி, பொன்னியின் செல்வி!

அனைகா, சாரா அர்ஜூன், ஸ்ரேயா சர்மா

Published:Updated:
ஸ்ரேயா சர்மா, ஸ்ரேயா சர்மா, அனைகா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரேயா சர்மா, ஸ்ரேயா சர்மா, அனைகா

குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள். அதற்குள் வளர்ந்து, ‘அடடே’ என்று போட்டோஷூட்டில் ஆச்சர்யப்படுத்துபவர்களிடம் பேசினேன்.

கௌதம் மேனன் ஹீரோயின், சமந்தா தங்கச்சி, பொன்னியின் செல்வி!

அனைகா

‘`கொரோனாத் தாக்கம் கேரளாவுல கொஞ்சம் அதிகம் தான். இப்போதான் எல்லாருமே நார்மல் மூடுக்குத் திரும்பிட்டு இருக்காங்க. இன்னும் பட ஷூட்டிங் எதுவும் ஸ்டார்ட் ஆகல. ப்ளஸ் ஒன் படிச்சிட்டி ருக்கேன். தினமும் ஆன்லைன் க்ளாஸ் போயிட்டிருக்கு. இதுதவிர, இந்த லாக்டெளன்ல பரத நாட்டியம். களரி, பாட்டில் பெயின்ட் இதெல்லாம் பண்ணிட்டிருக்கேன். தவிர, நிறைய இங்கிலீஷ் படங்கள் பார்த்துட்டிருக்கேன். இடைப்பட்ட நேரத்துல போட் டோஷூட் பண்ணினேன். ஒவ்வொரு போட்டோஷூட்டும் ஒவ்வொரு கான்செப்ட் வெச்சிட்டுப் பண்ணினோம். நேச்சர் லவ், பாரம்பர்யம், ஓணம்னு நிறைய வெரைட்டிஸ்ல கான்செப்ட் எடுத்துக்கிட்டோம். போட்டோஸ் பார்த்துட்டு நிறைய பேர் நயன்தாரா மேடம் மாதிரியிருக்கேன்னு கமென்ட்ஸ் பண்ணினாங்க. இதுக்காக ஸ்பெஷல் மேக்கப் எதுவும் பண்ணல. இயற்கையாகவே இப்படியொரு முக அமைப்பு இருக்குன்னு நினைக்குறேன். ஜி.வி.எம் அங்கிள் என்னை ஹீரோயினா லான்ச் பண்ணுவேன்னு சொல்லியிருந்தார். அதனால, இப்போதைக்கு படிப்புல மட்டும்தான் கவனம் செலுத்துறேன்.”

கௌதம் மேனன் ஹீரோயின், சமந்தா தங்கச்சி, பொன்னியின் செல்வி!

சாரா அர்ஜூன்

‘`மும்பையில வீட்டுல இருக்கேன். பத்தாவது படிச்சிட்டிருக்கேன். தினமும் ஆன்லைன் க்ளாஸ் போயிட்டிருக்கு. ரொம்ப நாளைக்குப் பிறகு வீட்டுல அம்மா, அப்பா, தம்பி, நான் எல்லாரும் ஒண்ணா இருக்கோம். எங்க குடும்பமே கலைக்குடும்பம். ஏன்னா, அப்பா ராஜ் அர்ஜுன் நிறைய இந்திப் படத்துல நடிச்சிருக்கார். தமிழில் ‘வாட்ச்மேன்’ படத்துல வில்லன் ரோல் பண்ணியிருப்பார். இப்போ, ‘தலைவி’ இந்தி ரீமேக்ல ஆர்.எம்.வீரப்பன் கேரக்டர் பண்ணுறார். என் தம்பிக்குப் பத்து வயசு ஆகுது. அவன் இப்போவே நிறைய ஷார்ட் பிலிம்ல நடிக்க ஆரம்பிச்சிட்டான். சினிமாவுல நடிச்சிருந்தாலும் படிப்புல எப்போவும் ஷார்ப்பா இருப்பேன். காலேஜ் முடிச்சிட்டுதான் சினிமாவுல ஹீரோயினா என்ட்ரி கொடுப்பேன். மணிரத்னம் சாரோட படங்களில் நடிக்கணும்ங்குறது எல்லாருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறியிருக்கு. ‘பொன்னியின் செல்வன்’ படத்துல முக்கியமான ரோல்ல நடிக்கிறேன். கோவிட் 19 பிரச்னை காரணமாக ஷூட்டிங் தொடங்காம இருக்கு. மணி சாரை நேர்ல பார்க்க வெயிட் பண்ணுறேன்.’’

கௌதம் மேனன் ஹீரோயின், சமந்தா தங்கச்சி, பொன்னியின் செல்வி!

ஸ்ரேயா சர்மா

“தமிழில் என்னோட முதல் படம் ‘சில்லுனு ஒரு காதல்.’ இந்தப் படம் வந்து 14 வருஷம் முடிச்சிருச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல ஜோதிகா மேம்கூட விளையாடிக்கிட்டே இருப்பேன். கடைசி நாளுல ஷூட்டிங் முடிஞ்சு போறப்போ எனக்கு பொம்மை பரிசளிச்சாங்க. இதுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தில நிறைய படங்கள் பண்ணினேன். தெலுங்குல சமந்தா மேடம் தங்கச்சி கேரக்டர்ல நிறைய படங்கள் பண்ணி யிருக்கேன். இப்போ, மும்பையில இருக்கேன். கோவிட் 19 காரணமா எங்கேயும் வெளியே போகாம வீட்டுலதான் இருக்கேன். கடந்த அஞ்சு மாசத்துக்கு மேல இப்படித்தான் போயிட் டிருக்கு. பி.எல் படிச்சிட்டி ருக்கேன். நிறைய மூவிஸ் பார்க்குறேன். தமிழில் பூமிகா, ஸ்ரேயா சரண் மேடம்கூடல்லாம் டச்ல இருக்கேன். எல்லாரும் என்னை `பாப்பா’னுதான் கூப்பிடுவாங்க. இப்போ, ஹீரோயினா என்ட்ரி கொடுக்க ரெடியா கிட்டேன். நல்ல சப்ஜெக்ட் கதைகளுக்காக வெயிட்டிங். நிறைய போட்டோ ஷூட்டும் நடந்து கிட்டிருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism