Published:Updated:

பத்மினியின் நடனத்தை ரசித்த சீன அதிபர்!- இது ஹிஸ்ட்ரி சுவாரஸ்யம்

சென்னையில் இயங்கிய மிகப்பெரிய ஸ்டூடியோவான ஜெமினி ஸ்டூடியோவை நேரு, பக்தவத்சலம் ஆகியோருடன் இணைந்து பார்வையிட்ட சீன அதிபர் சூ-என்-லாயை எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் வரவேற்று, ஸ்டூடியோவைச் சுற்றிக்காட்டினர்.

Narendhra Modi
Narendhra Modi
ஆனந்த விகடன்
ஆனந்த விகடன்

வருகிற 11-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார், சீன அதிபர் ஸீ ஜின்பிங். சென்னை மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் இருவரும் மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மாமல்லபுரம் பகுதியையே வண்ணமயமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த விகடன்
ஆனந்த விகடன்

1956-ஆம் ஆண்டு சீன அதிபர் சூ-என்-லாய் சென்னைக்கு வருகை தந்தபோது, அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். வரவேற்புக்குப் பிறகு அதிபருக்கு அளிக்கப்பட்ட விருந்தில், ராஜாஜி கலந்துகொண்டார். சென்னையில் இயங்கிய மிகப்பெரிய ஸ்டூடியோவான ஜெமினி ஸ்டூடியோவை நேரு, பக்தவத்சலம் ஆகியோருடன் இணைந்து பார்வையிட்ட சீன அதிபர் சூ-என்-லாயை எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் வரவேற்று, ஸ்டூடியோவைச் சுற்றிக்காட்டினர். அப்போது அங்கே நடந்துகொண்டிருந்த ஒரு படப்பிடிப்புக் காட்சியை ரசித்துப் பார்த்தார், சூ-என்-லாய். சீன அதிபரோடு ஸ்டூடியோவுக்கு வந்த விருந்தினர்கள் முன்னிலையில் நடிகை பத்மினியின் நடனமும் இடம்பெற்றிருக்கிறது.