Published:Updated:

வாட்ஸ்அப் பார்ட்டியில் வடிவேலு... எங்கே, ஏன்?

வாட்ஸ் அப் குழு சந்திப்பில் வடிவேலு மனோபாலா
வாட்ஸ் அப் குழு சந்திப்பில் வடிவேலு மனோபாலா

காவல்துறையிலிருந்து உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. சென்னை மாநகராட்சி ஆணையரும் வந்து சென்றதாகச் சொல்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தமிழகக் காவல்துறையின் உயரதிகாரிகள் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றின் சார்பாக நேற்று முன் தினம் சென்னை அண்ணா சாலையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் சந்திப்பு நடந்தது.

இந்தச் சந்திப்பில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் முதலான சீனியர் இயக்குநர்கள், நடிகர்கள் சாந்தனு, வடிவேலு, மனோபாலா, சந்தானபாரதி, ஆனந்தராஜ், கங்கை அமரன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்துகொண்டது.

வாட்ஸ் அப் குழு
வாட்ஸ் அப் குழு

காவல்துறையிலிருந்து உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. சென்னை மாநகராட்சி ஆணையரும் வந்து சென்றதாகச் சொல்கிறார்கள்.

இந்த நிகழ்வு குறித்து மேற்கொண்டு விசாரித்த போது, "ரெண்டு மூணு வருஷமாகவே நடந்திட்டிருக்கிற கெட் டு கெதர்தான். ஒரு குரூப்ல இருந்தா எப்பவாவது நேர்ல சந்திக்க விரும்புவோமே, அப்படியான சந்திப்புக்கான ஏற்பாடுதான், வேறொண்ணுமில்லை" என்கிறார்கள்.

மாலை ஏழு மணிவாக்கில் தொடங்கிய இந்தச் சந்திப்பு ஆட்டம், பாட்டு, கேளிக்கை என நகர்ந்து நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்ததாம்.

அடுத்த கட்டுரைக்கு