Published:Updated:

விஜய் சேதுபதிக்குப் பிறகு ரஜினி... ரஜினிக்குப் பிறகு அல்லு அர்ஜுன்! #CinemaVikatan2020

rajini
Listicle
rajini

சினிமா பற்றிய 20 செய்திகள் துணுக்குகளாக இங்கே.


1
நடிகை ஜீவா

விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படம் மூலம் அறிமுகமான மூன்றாம் பாலின நடிகை ஜீவா, தற்போது ரஜினி-முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


2
( 'ஹவுஸ் ஓனர்' )

'ஹவுஸ் ஓனர்' போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகிற அதே தேதியில் 'சிந்துபாத்' வெளியாவதால் தன்னைப் போன்ற இயக்குநர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படலாம், அதனால், "'சிந்துபாத்'தின் ரிலீஸைத் தயவுசெய்து தள்ளிப்போடுங்கள்" என விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கொரில்லா

ஜீவா, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் 'கொரில்லா' திரைப்படம், ஜூலை 5-ம் தேதி திரைக்கு வருகிறது.


4
கபீர் துஹான்

'வேதாளம்', 'றெக்க' படங்களின் வில்லன் கபீர் துஹானுக்கும் பாடகி டாலி சித்துவுக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.


5
சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கிய 'ஜீனியஸ்' படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ரோஷன் நடிக்கும் அடுத்தப் படத்தை சுசீந்திரனே தயாரிக்கவிருக்கிறார்.


6
ராட்சசி

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்சசி’ படத்துக்கு 'யூ' சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு.


7
பாக்ஸர்

பிற ஸ்போர்ட்ஸ் படங்களைப் போல் இல்லாமல், அருண் விஜயின் 'பாக்ஸர்' படம், ஹீரோ தனது ஈகோவுடனேயே போட்டியிடும் ஒரு படமாக இருக்கும் என்கிறது படக்குழு.


8
நேர்கொண்ட பார்வை

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.


9
விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விஜய் 64 படத்துக்கு இசையமைக்க ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் தற்போது அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.


10
ஏ.ஆர்.முருகதாஸ்

'தர்பார்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக, நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து தமிழ்-தெலுங்கு என ஒரே சமயத்தில் தயாராகும் இரு மொழிப்படத்தை இயக்கவுள்ளார், முருகதாஸ்.


11
நாக சைதன்யா - சமந்தா

நாக சைதன்யா நடிக்கவிருக்கும் 'பங்காரராஜு' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அவருடைய மனைவியும் நடிகையுமான சமந்தா.


12
'ராக்ஷகடு'

'ராட்சசன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ராக்ஷகடு' படம் ஜூலை 18-ஆம் தேதி வெளியாகிறது.


13
சர்வானந்த்

'96' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்தார் நடிகர் சர்வானந்த. சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என்கிறார்கள்.


14
வெயில் மரங்கள்

மலையாளப் படமான 'வெயில் மரங்கள்' ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.


15
கோவிந்த் வசந்தா

நிவின் பாலி நடிக்கும் ‘படவேட்டு’ படத்துக்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா.


16
பதினெட்டாம் படி

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'பதினெட்டாம் படி' திரைப்படம் ஜூலை 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது.


17
பாகி

'பாகி' படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்க, தற்போது உடற்பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சி எடுத்துவருகிறார் டைகர் ஷெராஃப்.


18
அனுராக் காஷ்யப்

நவாஸுதீன் சித்திக் நடிக்கும் 'போலே சூடியான்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இயக்குநர் அனுராக் காஷ்யப்.


19
ஜேம்ஸ் வான்

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் உருவாகவுள்ள 'அக்வாமேன்' படத்தின் அடுத்த பாகமான 'தி ட்ரெஞ்ச்' ஒரு மான்ஸ்டர் ஹாரர் படமாக இருக்கும்.


20
Andrew Scott

ஜேம்ஸ் பாண்டாக நடிக்கத் தனக்கு துளியும் விருப்பமில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் நடிகர் ஆண்ட்ரூ ஸ்காட்.