Published:Updated:

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்?

வரலட்சுமி, ஜனனி ஐயர், வாணி போஜன், ப்ரியா ஆனந்த்,  ரித்விகா
பிரீமியம் ஸ்டோரி
வரலட்சுமி, ஜனனி ஐயர், வாணி போஜன், ப்ரியா ஆனந்த், ரித்விகா

ஒரு மணிநேரத்துக்கு ரெண்டு முறை கை கழுவுறேன்.

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்?

ஒரு மணிநேரத்துக்கு ரெண்டு முறை கை கழுவுறேன்.

Published:Updated:
வரலட்சுமி, ஜனனி ஐயர், வாணி போஜன், ப்ரியா ஆனந்த்,  ரித்விகா
பிரீமியம் ஸ்டோரி
வரலட்சுமி, ஜனனி ஐயர், வாணி போஜன், ப்ரியா ஆனந்த், ரித்விகா

‘சும்மா இருப்பதே சுகம்’ என்று உலகமே இப்போது தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறது. நம் கோலிவுட் பிரபலங்கள் இந்நாள்களை எப்படிக் கழிக்கிறார்கள்?

நடிகை ரித்விகா
நடிகை ரித்விகா

நடிகை ரித்விகா

“ஏற்கெனவே ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள்ள நூறு நாள்களுக்கு மேல டிவி, மொபைல் இல்லாமல் இருந்துட்டேன். அதனால, வீட்டுக்குள்ளயே இருக்கிறது எனக்குப் புதுசு கிடையாது. தினமும் மிஸ் பண்ணாம ஜிம் போயிடுவேன். இப்போ ஜிம் எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டதனால, வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன கிரவுண்ட்ல வொர்க் அவுட் பண்ணிட்டிருந்தோம். இப்போ அங்கயும் கூட்டம் சேர்க்கக் கூடாதுன்னு சொன்னதால வீட்டு மாடியில தினமும் என் வொர்க் அவுட் செஷன் போகுது. கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க, நம்மளை சுத்தமா வெச்சுக்கிறது ரொம்ப முக்கியம். அடிக்கடி கை கழுவச் சொல்றாங்கன்னு தண்ணீரைத் திறந்துவிட்டுக்கிட்டே கைகழுவக்கூடாது. அப்படிப் பண்ணுனா, அடுத்து வெயில் காலம் வரும்போது தண்ணீர்ப் பிரச்னை வந்திடும். கொரோனா வைரஸ் தாக்கத்துல இருந்து தப்பிக்கிறோம்னு தண்ணீரை வீணாக்கிட்டா, அதுவும் நாளைக்கு பெரிய ஆபத்தா வந்து நிற்கும். அதனால, நம்ம பாதுகாப்பா இருக்கிறதோடு இந்த விஷயத்துலயும் கவனமா இருக்கணும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

‘`எப்போவுமே பிஸியா ஓடிக்கிட்டே இருக்குற ஆள் நான். ஆனா, இப்போ வீட்டுலயே இருக்கேன். இது கொஞ்சம் போர் அடிச்சாலும் மக்களோட நலன்தான் முக்கியம். ஒரு மீட்டர் இடைவெளியில எல்லார்கூடவும் பேசுறதும் நல்லது. சில தப்பான செய்திகளைப் பரப்புற வாட்ஸப் குரூப்பை விட்டுத் தள்ளியிருக்குறது ரொம்ப நல்லது. வீட்டுல இருந்தாலும் ரொம்ப கவனமா இருக்கேன். நானே சமைக்கிறேன்.’’

பார்த்திபன்
பார்த்திபன்

பார்த்திபன்

‘`பொழுதுபோக்குக்காக எதுவும் பண்ணலை. ‘இரவின் நிழல்’ என்ற அடுத்த படத்துக்கான வேலைகளில் இருக்கேன். கதை விவாதம் போயிட்டிருக்கு. இந்த வேலைகளைச் செய்ய இந்த நேரம் பயனுள்ளதா இருக்கு. தவிர, என் பொண்ணு கீர்த்தனா, ‘அடிக்கடி வெளியே போக வேண்டாம்’னு சொல்லுவா... ஆனா, பிராக்டிக்கலா வீட்டுலயே இருக்க முடியல. மத்தவங்க கை கொடுக்குறப்போ டக்குனு வணக்கம் சொல்ல பழக்கம் வரல... நம்ம நல்லதுக்குத்தான் அரசாங்கம் சில விஷயங்கள் பண்ணச் சொல்றாங்க. ஆனா, முழுக்கப் பண்ண முடியல. ஒருநாளைக்குக் குறைஞ்சது இருபது முறை கையை கழுவுறேன். சானிட்டைஸர் வீட்டுல வாங்கியிருக்கேன். பார்த்தசாரதி கோயில்ல தீர்த்தம் தெளிக்குற மாதிரி வீட்டுக்கு வர்றவங்களுக்கு சானிட்டைஸர் தெளிச்சிட்டு வரேன்.”

அருண் விஜய்
அருண் விஜய்

அருண் விஜய்

“இப்படியொரு சூழல் வரும்னு யாரும் நினைக்கவேயில்லை. நாம எவ்ளோ பாதுகாப்பா இருக்கிறோமோ அதுதான் மத்தவங்களுக்கும் நாம கொடுக்கிற பாதுகாப்புனு நினைக்கிறேன். ஜிம் எல்லாம் மூடினது எனக்கு பாதிப்பில்லை. வீட்டிலேயே வொர்க் அவுட் பண்ணிட்டிருக்கேன். மத்தவங்களுக்கும் அதைத்தான் சொல்றேன். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்கி றதுக்கான வாய்ப்பா இதைப் பார்க்கலாம். எல்லோருடைய வீட்லயும் பெரியவங்க இருப்பாங்க. அவங்களை நாம நல்லா பார்த்துக்கணும். ரொம்பப் பாதுகாப்பா இருக்கணும்.”

விவேக்
விவேக்

விவேக்

‘`கொரோனா வைரஸ் பயம் வர்றப்பல்லாம் கையைக் கழுவிட்டு வர்றேன். பொதுவாவே இந்திய மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவு. குப்பைகள் இருக்குற இடத்துலயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பாங்க. சிலர் அங்கேயே வாழவும் செய்றாங்க. தூசுப்பட்ட மெதுவடையை டீக்கடையில நின்னுட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. மிகுந்த சுத்தத்துடன் இந்த நேரத்துல இருக்கணும். கொரோனாவுக்காக அச்சப்படவும் வேண்டாம். அதே நேரத்துல அலட்சியமும் தேவையில்லை. சோஷியல் மீடியாவில வர்ற வதந்திகளை நம்பத் தேவையில்லை. வலிமைதான் வாழ்வு. வீட்டுக்குள்ளேயே நிலவேம்பு, பப்பாளி ஜூஸ் குடிச்சிட்டு ஜாலியா இருங்க மக்களே. நான் இப்ப அதிக புத்தகங்கள் படிக்குறேன். இதுதவிர டைரக்‌ஷன் பண்றதுக்காக ஸ்க்ரிப்ட் எழுதிட்டு வர்றேன். பாதியிலயே நின்னுட்டு இருக்குற காமெடி ஸ்க்ரிப்ட்டுக்கும் உயிர் கொடுக்கத் தொடங்கி யிருக்கேன்.’’

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

அசோக் செல்வன்

‘`சில நாள்களுக்கு முன்னாடி வொர்க் அவுட் பண்ணும்போது கால் எலும்பு ட்விஸ்ட் ஆகிருச்சு. அதனால, வீட்டுல இருக்கேன். பத்து நாள் வரைக்கும் டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டாங்க. படமா பார்த்துக்கிட்டு இருக்கேன். நல்லா சாப்பிடுறேன். ரொம்ப நாள் கழிச்சு பயங்கர வெட்டியா இருக்கேன். இதுதான் இப்போதைக்கு வாழ்க்கையில நடந்துகிட்டு இருக்கு.”

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

“செல்ல நாய்க்குட்டிகூட நேரம் செலவழிச்சிட்டு வர்றேன். சமைக்குறது பிடிக்கும். வித்தியாசமான ரெசிபி மற்றும் பேக்கிங் பண்ணலாம்னு இருக்கேன். இண்டோர் கேம்ஸ் விளையாடுறேன். முக்கியமா, சானிட்டைஸர் ஸ்ப்ரே வீடு முழுக்கத் தெளிக்குறேன். ஒரு மணிநேரத்துக்கு ரெண்டு முறை கை கழுவுறேன்.’’

இயக்குநர் சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன்

“குடும்பத்தோடு சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு வந்துட்டேன். வீடு, தோட்டம் அவ்ளோதான். வெளியே எங்கேயும் போறதில்லை. நம்ம தோட்டம்; நம்ம மண். அது நம்மளைப் பார்த்துக்கும். வீட்ல யாரும் அசைவ சாப்பாடு சாப்பிடுறதில்லை. தங்கச்சி வீட்ல இருந்தும் எல்லோரும் வந்திருக்காங்க. ரொம்ப நாள் கழிச்சு எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்ல இருக்கோம். முழுக்க முழுக்க குடும்பத்துக் கான நாள்களா இது மாறிடுச்சு. கொரோனா பிரச்னை எல்லாம் முடிஞ்ச பிறகுதான் சென்னைக்கு வரணும்.”

இயக்குநர் ஏ.எல்.விஜய்
இயக்குநர் ஏ.எல்.விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜய்

“பெரிய பட்ஜெட்ல உருவாகுற ‘தலைவி’ படத்தோட ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டோம். என் ஆபீஸ்ல இருந்த எல்லாரையும் சொந்த ஊருக்குப் போகச் சொல்லிட்டேன். நான் வீட்டுலயேதான் இருக்கேன்.ஹேண்ட் சானிட்டைஸர் தொடர்ந்து பயன்படுத்திக் கிட்டு வர்றேன். வீட்டைச் சுத்தியும் சானிட்டைஸர் வெச்சி ருக்கோம். ‘தலைவி’ படத்தோட வேலைகளிலேயே கடந்த ஒன்றரை வருஷம் போயிருச்சு. அதனால, இப்போ கிடைச்சிருக்குற இந்த நேரத்துல நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்ல நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். தவிர என்னோட அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் மற்றும் சில ஆய்வுகளும் பண்றேன். ஓய்வுக்கான நேரமா இதை எடுத்துக்கல. நிம்மதியா இருக்கவும் முடியல. ‘தமிழ்நாட்டுல என்ன நடக்குது. மக்கள் எப்படியிருக்காங்க’ன்னு செய்திகள்ல பார்த்துட்டு வரேன். பொருளாதாரம் பெரிய அளவுல பாதிக்கப் பட்டிருக்கு. சந்தோஷமா இருக்க முடியல. இந்தச் சூழல் எப்போ சரியாகும்னு காத்துட்டிருக்கேன்.’’

நடிகை வாணி போஜன்
நடிகை வாணி போஜன்

நடிகை வாணி போஜன்

“வீட்ல ஜாலியா நெட்ஃபிளிக்ஸ் பார்த்துட்டு இருக்கிற நேரமில்லை இது. நம்ம ஊர்ல நிறைய பேருக்கு சுவாசப் பிரச்னை இருக்கு. அதனால எல்லோருக்கும் கொரோனா பத்தின புரிதலும் விழிப்புணர்வும் இருக்கணும். இது நமக்கான விடுமுறையில்லை; நமக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற தருணம். நாள் முழுக்க டிவில கொரோனா பத்தின நியூஸ்தான் பார்த்துட்டு இருக்கேன். வீட்ல வேலைக்கு வர்றவங்க, காய்கறி விற்குற அண்ணா, பக்கத்து வீட்டுக் குழந்தைகள்னு பார்க்குறவங்க எல்லோருக்கும் இதுபத்திச் சொல்லிப் புரிய வெச்சுட்டு இருக்கேன். ‘எல்லோருக்கும் ஏன் பீதியைக் கிளப்பிட்டு இருக்க’ன்னு அம்மா திட்டினாங்க. ‘அது பீதி இல்லம்மா விழிப்புணர்வு’னு சொல்லி என்னால முடிஞ்ச வரை எல்லோருக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்களும் சொல்லுங்க!”

நடிகை ப்ரியா ஆனந்த்
நடிகை ப்ரியா ஆனந்த்

நடிகை ப்ரியா ஆனந்த்

“இந்த வைரஸால உலக மக்கள் எல்லோரும் முடங்கியிருக்கிறதைப் பார்த்துட்டுதான் இருக்கோம். இது நகரங்களை ஒருநிலைக்குக் கொண்டு வந்திருக்கு. கோவிட் 19 வைரஸுடைய அளவைத் தெரிஞ்சுக்கவும் புரிஞ்சுக்கவும் நம்ம ஊருக்கு போதுமான நேரம் கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். தாத்தா - பாட்டியோடு இருக்கிற இந்தச் சூழலை நாம பாதுகாக்கணும். அவங்களுடைய பாதுகாப்பு க்காக நம்மளும் நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களும் சுத்தமா பாதுகாப்பா இருக்க விழிப்புணர்வு கொடுத்துக் கிட்டே இருக்கணும். மொபைல், இன்டர்நெட்னு நிறைய விஷயங்கள் மூலமா இதைப் பத்தித் தெரிஞ்சுக்கிற சூழல்ல இருக்கிறது நல்ல விஷயம். படங்கள், வேடிக்கையான வீடியோக்கள்னு நிறைய விஷயங்கள் இந்தச் சமயத்துல நமக்குப் பொழுதுபோக்கு அம்சங்களா இருக்கு. நான் இந்தச் சமயத்தைப் புத்தகங்கள் படிக்கப் பயன்படுத்திக்கிறேன். ரொம்ப பிஸியா ஓடிக்கிட்டு இருக்கிற சமயத்துல, இந்த மாதிரி ஒரு இடைநிறுத்தம் நம்ம ஒவ்வொருத்தருக்கும் தேவைன்னு நினைக்கிறேன்”

ஹரீஷ் கல்யாண்
ஹரீஷ் கல்யாண்

ஹரீஷ் கல்யாண்

“ஜிம்முக்கு போயே பழக்கப்பட்டுட்டேன். கொரோனா வைரஸ்னால ஜிம் க்ளோஸ் ஆகிருச்சு. அதனால வீட்டுலயே வொர்க் அவுட் பண்ணத் தொடங்கிட்டேன். சில நண்பர்களை வீட்டுல பார்க்குறேன். வீட்டுல இருக்குறவங்ககூட நேரம் செலவழிக்க இதுதான் சரியான நேரமும்கூட. வீட்ல கீ போர்டு வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். புத்தகம் படிக்குற பழக்கமில்லை. படிக்கலாம்னு யோசிக்குறேன். வீட்டுல இருந்தாலும் தொடர்ந்து கையைக் கழுவிக்கிட்டே இருக்கேன்.”

அருண்ராஜா காமராஜா
அருண்ராஜா காமராஜா

அருண்ராஜா காமராஜா

``எல்லாரும் இப்போதான் வீட்டுல இருக்காங்க. ஆனா, நான் ரொம்ப நாளாவே வீட்டுலதான் இருக்கேன். காரணம், அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். ‘வீட்டுல இருக்க புதுசா இருக்கு’ன்னு நண்பர்கள் சொல்றாங்க. ஆனா, எனக்கு ரொம்பப் பழசா இருக்கு. ஆனா, நல்ல விஷயத்துக்காகத் தான் அரசாங்கம் ‘வீட்டை விட்டுட்டு வெளியே வர வேண்டாம்’னு சொல்லிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். இதுதான் ரொம்ப அவசியம். நம்மனால முடிஞ்ச அளவுக்கு சுகாதார துறையில இருக்குறவங்களுக்கு உதவியா இருப்போம்.’’

நடிகை ஜனனி ஐயர்
நடிகை ஜனனி ஐயர்

நடிகை ஜனனி ஐயர்

“வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போறதில்லை. ரொம்ப சுத்தமா பாதுகாப்பா இருக்கோம். வீட்டையும் சுத்தமா வெச்சுக்கிறோம். நிறைய படங்கள் பார்க்கிறேன். அப்புறம், என் தங்கையோடு சேர்ந்து ஆன்லைன் ஸ்டோரை கவனிச்சுட்டு இருக்கேன், அவ்ளோதான்.”