Published:Updated:

“அஜித்துடன் மறுபடி சேர கடவுளிடம் வேண்டுறேன்!”

காதல் கோட்டை படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
காதல் கோட்டை படத்தில்...

மறுபடியும் டிஜிட்டலில் ‘காதல் கோட்டை’யை வெளியிட முயற்சி நடந்துக்கிட்டிருக்கு. என்னைக்கும் அந்தப் படம் மக்கள் மனதை விட்டு நீங்காது.

“அஜித்துடன் மறுபடி சேர கடவுளிடம் வேண்டுறேன்!”

மறுபடியும் டிஜிட்டலில் ‘காதல் கோட்டை’யை வெளியிட முயற்சி நடந்துக்கிட்டிருக்கு. என்னைக்கும் அந்தப் படம் மக்கள் மனதை விட்டு நீங்காது.

Published:Updated:
காதல் கோட்டை படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
காதல் கோட்டை படத்தில்...

சினிமாவுக்குன்னு ஒரு மொழி இருக்கு. தியேட்டர் அதிபரா, விநியோகஸ்தரா உள்ளேயே இருந்து பார்த்து அந்த விஷயம் கொஞ்சம் தெரியும். பல பக்கங்கள் எழுதிச் சொல்றதை ஒரே ஒரு காட்சி சொல்லிட்டுப் போயிடும். அப்படித்தான் இன்னிக்கும் ‘காதல் கோட்டை’ யாராலும் மறக்க முடியாத படமாக இருக்கு. எவ்வளவோ வெள்ளி விழா, வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கேன். ஆனால் ‘காதல் கோட்டை’ தயாரித்த சிவசக்தி பாண்டியன் என்பதில்தான் எனக்குப் பெருமை” மலர்ச்சியுடன் பேசுகிறார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். தமிழ் சினிமாவிற்கு இயக்குநருக்கான முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தவர். ‘காதல் கோட்டை’ தயாரித்து 25 ஆண்டுகள் ஆன கொண்டாட்டங்கள் தொடங்கி யிருக்கின்றன.

“மறுபடியும் டிஜிட்டலில் ‘காதல் கோட்டை’யை வெளியிட முயற்சி நடந்துக்கிட்டிருக்கு. என்னைக்கும் அந்தப் படம் மக்கள் மனதை விட்டு நீங்காது. ‘நலம், நலம் அறிய ஆவல்’ன்னு காலர் டியூனை என்னை மாதிரி வெச்சுக்கிட்டு இருக்கிறவங்களை எனக்குத் தெரியும். எவ்வளவு காதல் படங்கள் வந்திருக்கு. பார்க்காமலேயே காதல்ங்கிறது அப்பதான் முதலில் அறிமுகம் ஆச்சு. ‘வான்மதி’ நடிச்சுக்கிட்டிருக்கும்போதே அஜித்தை நல்லாத் தெரியும். நடிகர் என்பதையும் தாண்டி மனசாரப் பழகியவர். அவரால் நல்ல இடத்திற்கு வந்தவர்களும், உதவி பெற்றவர்களும் அதிகம். ‘காதல் கோட்டை’ தயாரிக்கும்போது மிக அழகான இளைஞன், நல்ல காதலுக்குத் தகுதியுள்ள குணம்னு அவருக்கு வைத்த கேரக்டருக்கு அவ்வளவு பொருந்தி இருந்தார்.

சிவசக்தி பாண்டியன்
சிவசக்தி பாண்டியன்

அதற்குப் பிறகும் படங்கள் தயாரித்தேன். வெற்றிகளும் பல தோல்விகளும் பார்த்திருக்கேன். இந்த இடமே ரொம்ப கஷ்டமான இடம். வெற்றி வரும்போது கிடைக்கிற மரியாதையும் அதிலேயே சரிவு வரும்போது வருகிற மரியாதையும் வித்தியாசப்படும். மூன்று வெற்றிப் படம் கொடுக்கிறதும் சரி, ஒரு தோல்விப் படம் கொடுக்கிறதும் சரி... இரண்டும் ஒன்றுதான். நிலைமை இங்க அப்படித்தான் இருக்கு. தூக்கினால் அப்படியே தூக்கிட்டுப் போகும். அடி விழுந்தா தாங்க முடியாது. எல்லாப் படமும் ஓடுமான்னு தெரியாது. எந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்னு தெரியாது. தோல்வியை சமாளிச்சிருக்கேன். தயாரிக்கிறதும் வெளியிடுவதும்னு இருந்ததால் பணத்தை மாத்தி மாத்திப்போட்டுத் தப்பிச்சிருக்கேன்.

“அஜித்துடன் மறுபடி சேர கடவுளிடம் வேண்டுறேன்!”

தயாரிப்பாளர்களோடு அணுக்கமா இருக்கிற நடிகர்கள் இப்ப குறைஞ்சுட்டாங்க. சம்பளம் கொஞ்சம் குறைச்சுக்கங்க, அடுத்த படத்தில் சேர்த்துத் தரேன், டப்பிங் முடிஞ்சதும் செட்டில் பண்ணிடுறேன்னு முன்னாடி சொல்லிக்க முடியும். அவங்களும் கேட்டுக்குவாங்க. இப்ப சினிமா கார்ப்பரேட் பக்கம் போயிடுச்சு. அதில் பணத்தை சரியாக வாங்கி ஹீரோக்கள் பழக்கப்பட்டுட்டாங்க. அதுவும் சரிதான். இதனால் பாதிக்கப்பட்டது சின்னத் தயாரிப்பாளர்கள்தான். சினிமாவே கதின்னு நினைச்சு வந்தவங்க அவங்க. ஒரு படத்தைத் தயாரிக்கிறதைவிட வெளியிடுவதற்கான கஷ்டம் இப்ப கூடிப்போச்சு.

சினிமாவை சூதாட்டம்னு சொல்வாங்க. கொஞ்சம் அனுபவப்பட்டால் காசு பார்த்துடலாம்னு வர்றாங்க. அது தப்பு. இதுல நிறைய உழைப்பும், புத்திசாலித்தனமும் வேணும். நம்ம மக்களின் மனோபாவமே தனி. இரண்டு நாள் பிக்கப் ஆகாத ஒரு சினிமா, மூன்றாவது நாள் பிச்சுக்கிட்டு ஓடும். முதல் வாரம் ஜனங்கள் முண்டியடித்த படம், அடுத்த வாரம் ஈயாடும். படத்தோட தலைவிதியை நிர்ணயம் பண்றது கஷ்டம். எனக்கே இத்தனை வருஷத்துக்குப் பிறகுதான் ஓரளவு கைக்கு வந்திருக்கு.

“அஜித்துடன் மறுபடி சேர கடவுளிடம் வேண்டுறேன்!”

‘அஜித்தை வைத்துப் படம் எடுக்கலையா’ன்னு என்னை எங்கே பார்த்தாலும் கேட்கிறாங்க. அவர் மிக நாகரிகமான, மிக மென்மையான, மிக கம்பீரமான மனிதர். இதற்கு முன்னால் நண்பர்களுக்காக நிறைய விட்டுக் கொடுத்திருக்கார். அவர் இப்போ எவ்வளவோ உயரத்தில் இருக்கார். 100 கோடி வாங்குவதற்கான எல்லையை அவர் நெருங்கணும்னு நினைக்கிறேன். அவரே நிறைய கஷ்டமும் விரக்தியும் அடைந்துதான் இந்த நிலைக்கு வந்தார். அதனால்தான் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அவர் உண்டு அவர் நடிப்புண்டுன்னு இருக்கார்.

‘காதல் கோட்டை’யில் அகத்தியன்கிட்டே சொல்லி கமலியை சூர்யாவோடு சேர்த்து வெச்ச மாதிரி, என்னை அஜித்தோடு நான் கும்பிடுற கடவுள் சேர்த்து வைக்கணும். அதைச் செய்ய அஜித் மனசு வைக்கணும். நிறைய தடவை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கேன். ஆத்மார்த்தமாகப் பேசுவார். அவர்கூட படம் செய்யணும்னு சொல்லியிருக்கேன். நடக்கும்னு சொல்லியிருக்கார். எனக்குக் கடவுள் பக்தி உண்டு. எந்தக் கோயிலுக்குப் போனாலும் ‘அஜித்தோடு படம் பண்ண எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பா’ன்னு கடவுளை மனமுருகி வேண்டியிருக்கேன். சொல்லப் போனால் நான் நிறைய கண்டெடுத்திருக்கேன்; அதுக்கும் மேலே தொலைச்சிருக்கேன். இழந்ததுக்கும் இருக்கிறதுக்கும் நடுவுலதான் இப்போ நம்பிக்கையோடு காத்திருக்கேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism