Published:Updated:

சினிமா விகடன்: TAKE 1 - ஆடுகளம் நரேன்

ஆடுகளம் நரேன்
பிரீமியம் ஸ்டோரி
ஆடுகளம் நரேன்

தூய தமிழில் வசனம் பேசி நடிக்கமுடியுமான்னு பயமா இருந்தது. ஒருவழியா பேசி முடிச்சுட்டேன். எல்லோரும் பாராட்டினாங்க.

சினிமா விகடன்: TAKE 1 - ஆடுகளம் நரேன்

தூய தமிழில் வசனம் பேசி நடிக்கமுடியுமான்னு பயமா இருந்தது. ஒருவழியா பேசி முடிச்சுட்டேன். எல்லோரும் பாராட்டினாங்க.

Published:Updated:
ஆடுகளம் நரேன்
பிரீமியம் ஸ்டோரி
ஆடுகளம் நரேன்

‘`நான் அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கும்போது ஒரு புராஜெக்ட் பண்ணினேன். அது ஒரு குறும்படம். அதுதான் நான் நடிச்ச முதல் படம். முதல்நாள் நடிச்சதெல்லாம் மறுநாள் பிலிம்ல பார்க்கும்போது கரப்ட் ஆகிடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு அதே ஷார்ட் பிலிமை மறுபடியும் ஆரம்பிச்சோம். அதுல என்கூட ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகர் நடிச்சார். எங்க ரெண்டு பேருக்குமான ஷாட்தான் முதல்ல எடுத்தோம். அந்தக் குறும்படம் விருதெல்லாம் வாங்கி, தூர்தர்ஷன்ல ஒளிபரப்பாச்சு. படிச்சு முடிச்சவுடன் ‘ஓம் சரவணபவ’ன்னு ஒரு படத்துல கமிட்டானேன். அதுல எனக்கு சிவன் வேஷம். அந்த வேஷத்துல என்னைப் பார்க்கும்போது எனக்கே சிரிப்பு வந்திடுச்சு. என்.கே.விஷன்ஸ் விஸ்வநாதன் சார்தான் இயக்குநர். தூய தமிழில் வசனம் பேசி நடிக்கமுடியுமான்னு பயமா இருந்தது. ஒருவழியா பேசி முடிச்சுட்டேன். எல்லோரும் பாராட்டினாங்க.

சினிமா விகடன்: TAKE 1 - ஆடுகளம் நரேன்

இந்தப் படத்துக்கான ரீ ரெக்காடிங் பண்ணும்போது எம்.எஸ்.விஸ்வநாதன் சார் என்னைக் கூப்பிட்டு, ‘பெரியா ஆளா வருவ’ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணுனது என் வாழ்க்கையில மறக்கவே முடியாது. இதுக்குப் பிறகுதான், பாலு மகேந்திரா சார் இயக்கத்துல ‘ராமன் அப்துல்லா’ படத்துல வில்லனின் அடியாளா வருவேன். இந்தப் படத்துக்கு நான் போகும்போது, என்னை முதல்ல போட்டோ எடுத்தார். அப்போ, ‘இப்படி மரம் மாதிரி நின்னா எப்படிங்க... ஏதாவது ரியாக்‌ஷன் கொடுங்க’ன்னு சொல்லி என்னை செலக்ட் பண்ணினார். முதல் நாள் ஷூட்டிங்ல என்னைப் பார்த்துட்டு, ‘மேக்கப் போட்டுட்டு வந்திடுங்க’ன்னு சொன்னார். பாலு மகேந்திரா சார் ஹீரோயினுக்கே மேக்கப் போடச் சொல்லமாட்டார்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, இவர் மேக்கப் போடச் சொல்றாரேன்னு நினைச்சுக்கிட்டே மேக்கப் மேன்கிட்ட போனேன். அவர் என் முகத்துல தண்ணியை ஸ்ப்ரே பண்ணி, ஒரு துணியில துடைச்சுவிட்டார். ‘என்னங்க இதான் மேக்கப்பா’ன்னு கேட்டேன். ‘நாங்க எதும் பண்ணலைன்னு சொல்லிடக் கூடாதுல்ல’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். அன்னிக்கு வில்லன்கூட கார்ல இருந்து இறங்குறது, ஓடுறதுன்னு எடுத்தாங்க. அப்புறம் அதே படத்துக்கு ஊட்டிக்குப் போனோம். அங்க வில்லன்களோட குடிச்சுட்டு வசனம் பேசுற மாதிரி ஒரு சீன். டயலாக் கொடுத்த மூணு பேர் சொதப்பினாங்க. என்னைப் பேசச் சொன்னாங்க. டயலாக் மட்டும் பேசாமல் கொஞ்சம் மேனரிசமெல்லாம் பண்ணினேன். அது பாலு மகேந்திரா சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘என்ன பண்ணிட்டிருக்கிங்க?’ன்னு கேட்டார். பிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஆக்டிங் படிச்சுட்டு இன்ஸ்பெக்டரா வேலை செஞ்சிட்டிருக்கேன். இப்போதான் சினிமா ட்ரை பண்ணிட்டிருக்கேன் சார்’னு சொன்னேன். ‘Very good. Keep in touch’னு சொல்லி வாழ்த்தினார்.”