Published:Updated:

7 சேனல் ஃப்ளாப்... சற்றும் மனம்தளராத 7 பேர்! - `Finally' கிருஷ்ணா ஷேரிங்ஸ்

அஸ்வினி.சி
7 சேனல் ஃப்ளாப்... சற்றும் மனம்தளராத 7 பேர்! - `Finally'  கிருஷ்ணா ஷேரிங்ஸ்
7 சேனல் ஃப்ளாப்... சற்றும் மனம்தளராத 7 பேர்! - `Finally' கிருஷ்ணா ஷேரிங்ஸ்

இது யூடியூபர்ஸின் காலம். ஒரு சின்சியரான டீம்... வித்தியாசமான கான்செப்ட்... இதுதான் யூடியூப்  சேனல்களின் தாரக மந்திரம். கூடவே விடா முயற்சி. சேனல் தொடங்கி முதல் வீடியோவிலேயே யாராலும் டிரெண்டாகிவிட முடியாது. தொடர்ச்சியாக புதுப்புது கான்செப்ட்டில் வீடியோ போட்டுக்கொண்டே இருந்தால், திடீரென ஒரு வீடியோ வைரல் ஆகும். யூடியூப் டிரெண்ட்ஸில் இடம்பெறும். ஆயிரத்தில் இருக்கும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஒரே நாளில் லட்சங்களாகும். ஆனால், இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் பொறுமையாக இருக்க வேண்டும். நிறைய யூடியூப் சேனல்கள் திடீரென டிரெண்டாகி சில மாதங்கள் தடமே தெரியாமல் காணாமல் போய்விடும். ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ், டிரெண்ட், வைரல் ஃபார்முலா என அனைத்தையும் மனதில் வைத்துப் படைப்புகளை உருவாக்கி, புகழை தக்கவைத்திருக்கும் யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றில் `Finally'-யும் ஒன்று. 

7 சேனல் ஃப்ளாப்... சற்றும் மனம்தளராத 7 பேர்! - `Finally'  கிருஷ்ணா ஷேரிங்ஸ்

அப்பாவித்தனமான ஒரு கேரக்டரை சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து செம ஃபன்னான ஒரு கான்செப்டை கொடுத்ததுதான் ஃபைனலியின் ரீச்சுக்கு முக்கிய காரணம். நட்பு, காதலுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சலசலப்புகளை காமெடி கலந்து ரசிகர்களுக்குத் தருகிறார்கள். ஃபைனலி பிஜிஎம், பரத்தின் ரிங் டோன் இவையெல்லாமே மக்களை அதிகம் ரசிக்க வைத்தது. அண்மையில் வெளியான Dating with machan வீடியோ வாட்ஸ் அப், ட்விட்டர் என செம வைரல். ஃபனலி வீடியோக்களில் அப்பாவித்தனமான பரத் கேரக்டரால் அதிகம் கடுப்பாவது கிருஷ்ணாதான். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்... ஃபைனலி என்னும் யூடியூப் சேனல் எப்படி உருவானது என்பதை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக விவரித்தார்.

7 சேனல் ஃப்ளாப்... சற்றும் மனம்தளராத 7 பேர்! - `Finally'  கிருஷ்ணா ஷேரிங்ஸ்

``என் சொந்த ஊர் தூத்துக்குடி. படிச்சது வளர்ந்தது எல்லாமே கோவையில்தான். எல்லா யூடியூபர்ஸ் மாதிரியும் நானும் இன்ஜினீயரிங் தான் படிச்சேன். படிச்சு முடிச்சதும் என் அண்ணனோட நண்பர் பரத்துக்கு போன்பண்ணி அவரோடு சேர்ந்து வீடியோஸ் பண்ணணும்னு கேட்டேன். அப்புறம் சென்னைக்கு வந்து தனியார் ஊடக நிறுவனத்துல சேர்ந்து வீடியோவும் பண்ணினோம். முதலில் `BE tv’-ன்னு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம். செம ஃப்ளாப். அப்புறம் Lollu factory, popcorn dappa இப்படி அடுத்தடுத்து 7 சேனல் ஆரம்பிச்சோம்ங்க. எல்லாமே ஃப்ளாப். யூடியூப் சேனல் ஆரபிக்குறோம்னு வேலையையும் விட்டுடோம். எங்க வீட்ல கொஞ்சம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க. எங்க டீம்ல எல்லாருக்கும் இதே நிலைதான். ஃப்யூச்சர்... கேரியர்னு எங்களுக்கே ஒரு சின்ன பதற்றம் வந்துடுச்சு. அப்புறம் ஃபைனலா ஒரு ட்ரை கொடுத்து பார்க்கலாம்னு முடிவு பண்ணி தொடங்கியதுதான் இந்த Finally யூடியூப் சேனல். கொஞ்ச நாள் இதுவும் சுமாராதான் போச்சு. அப்புறம் செம பிக் அப். இப்போ எங்க டீம்ல 7 பேர் இருக்கோம்.

7 சேனல் ஃப்ளாப்... சற்றும் மனம்தளராத 7 பேர்! - `Finally'  கிருஷ்ணா ஷேரிங்ஸ்

எங்க தேவைக்குப் போதுமான அளவு வருமானம் வருது. ரசிகர்களுக்கு போர் அடிக்காத மாதிரி புதுப்புது கான்செப்ட் யோசிக்கணும். எங்களுக்கு சோசியல் மெசேஜ் சொல்லணும்னு எந்த ஐடியாவும் இல்ல. ஒருவாட்டி அரசியல் சம்பந்தமா வீடியோ போட்டோம். ரசிகர்கள் கமென்ட்ல ``ஏன்யா நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க... உங்களுக்கு செட் ஆகலை’’ அப்படின்னு அட்வைஸ் பண்ணிணாங்க. அதனால் எப்பவுமே ஜாலியான வீடியோ பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்று கூலாகச் சொன்னவரிடம், சினிமா ஆசை இருக்கா என்று கேட்டோம். ``கண்டிப்பா இருக்கு. நடிப்பு மேல இருக்க ஆசைலதான் இந்த யூடியூப் சேனல் ஆரம்பிச்சது. வில்லன் ரோல் பண்ணணும்னு ஆசை. சில வாய்ப்புகள் தேடி வருது. பார்ப்போம்’’ என்றார் நிதானமாக. 
ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா! 

Vikatan