Published:Updated:

"ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி.முத்துராமன் ஷேரிங்ஸ்

எம்.குணா

`உங்களுக்குக் கலைமாமணி பட்டம் கொடுக்கப்போகிறோம்' என்று அரசிடமிருந்து அழைப்பு வந்தபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி; இன்னொரு பக்கம் அதிர்ச்சி. பொதுவாக சினிமாவில் இருக்கும் சீனியர் கலைஞர்களுக்குத்தான் `கலைமாமணி' பட்டம் கொடுப்பார்கள். நான் அப்போதுதான் சில படங்களை இயக்கி டைரக்டராக வளர்ந்து வந்துகொண்டிருந்தேன்.

"ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி.முத்துராமன் ஷேரிங்ஸ்
"ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி.முத்துராமன் ஷேரிங்ஸ்

மிழ் சினிமாவின் இருதுருவங்களான ரஜினி - கமல் இருவரையும் வைத்து அதிக படங்களை இயக்கிய பெருமை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனையே சேரும். ரஜினி படத்தையும், கமல் படத்தையும் இயக்கி ஒரே நாளில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களும் வெள்ளிவிழா கண்ட அந்தக்கால நிகழ்வைப் பகிர்ந்துகொள்கிறார், எஸ்.பி.முத்துராமன்.

"ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி.முத்துராமன் ஷேரிங்ஸ்

சினிமாவில் கற்றுக்கொண்டது :   

ஏவி.மெய்யப்பச் செட்டியாரைப் பார்த்தேன், `சினிமாவில் அடிப்படையாகக் கற்றுக்கொள்ளவேண்டிய தொழில், எடிட்டிங்தான். அதை முதலில் கற்றுக்கொள்' என்று என்னைச் சேர்த்துக்கொண்டார். அப்போது ஏவி.எம்மில் பணியாற்றிய எடிட்டர்களிடம் ஐந்து வருடம் வேலைபார்த்து, எடிட்டிங் தொழிலை முழுமையாகக் கற்றுத் தெளிந்தேன். பிற்காலத்தில் நான் இயக்குநராக வேலைபார்த்தபோது கற்றுக்கொண்ட எடிட்டிங் முழுமையாகப் பயன்பட்டது தனிக்கதை. முதலில் எடிட்டிங் முடிந்தது அடுத்து அசிஸ்டென்ட் டைரக்டர். முதன்முதலாக கமல்ஹாசன் அறிமுகமான `களத்தூர் கண்ணம்மா' படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். எனக்கு சினிமாவைக் கற்றுக்கொடுத்தது, ஏவி.எம் ஸ்டூடியோ என்ற பல்கலைக்கழகம்; ஏவி.மெய்யப்பச் செட்டியார்தான் என் பல்கலைக்கழக வேந்தர். ஏவி.எம்.முருகன், ஏவி.எம்.பாலசுப்ரமணியம், ஏவி.எம்.சரவணன் ஆகியோர் துணை வேந்தர்கள். ஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களை இயக்கிய கிருஷ்ணன் - பஞ்சு, பிரகாஷ் ராவ், கிருஷ்ணன் நாயர், யோகானந்த், புட்டண்ணா, பீம்சிங் போன்ற டைரக்டர்கள் எல்லாம் எனக்குப் பேராசிரியர்கள். எல்லோரிடமும் உதவி டைரக்டராக வேலை பார்த்த என்னை ஒருநாள் ஏவி.எம்.சரவணன் சார் அழைத்து, `இதுவரைக்கும் நீங்க ஒவ்வொரு டைரக்டரிடம் வேலை பார்த்தீங்க. இனிமே ஒரே ஒரு டைரக்டரிடம் வேலை பாருங்க' என்று சொல்லி, இயக்குநர் ஏ.சி.திருலோசந்தரிடம் சேர்த்துவிட்டார். ஏவி.எம் தயாரித்த `வீரத்திருமகன்' முதல் அனைத்துப் படங்களிமும் உதவி டைரக்டராக வேலை பார்த்து, சினிமாவைக் கற்றுக்கொண்டேன்."

முதல் விருது :                                                            

`உங்களுக்குக் கலைமாமணி பட்டம் கொடுக்கப்போகிறோம்' என்று அரசிடமிருந்து அழைப்பு வந்தபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி; இன்னொரு பக்கம் அதிர்ச்சி. பொதுவாக சினிமாவில் இருக்கும் சீனியர் கலைஞர்களுக்குத்தான் `கலைமாமணி' பட்டம் கொடுப்பார்கள். நான் அப்போதுதான் சில படங்களை இயக்கி டைரக்டராக வளர்ந்து வந்துகொண்டிருந்தேன். அதற்குள் `கலைமாமணி' விருதா என்ற எண்ணம் தோன்றியது. இருந்தாலும், அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கைகளால் கலைமாமணி விருது பெற்றபோது சந்தோஷமாக இருந்தது. 

"ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி.முத்துராமன் ஷேரிங்ஸ்

ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள் ரிலீஸ் : 

கமல்ஹாசனுக்கு பிரமாதமாகப் பாடுகின்ற குரல் வளம் இருக்கிறது. தவிர, அவர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்ததால், அற்புதமாக நடனமாடும் ஆற்றலும் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் தோளில், மடியில் விளையாடியதாலோ என்னவோ, சண்டைப் பயிற்சியில் சகல வித்தையும் அவருக்குத் தெரியும். சிவாஜியின் செல்லம் என்பதால், முகத்தில் நவரசம் காட்டத் தெரியும். இப்படி, தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கமலுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கிய திரைப்படம்தான், `சகலகலா வல்லவன்'. இப்போதும்கூட ஆங்கிலப் புத்தாண்டு என்றாலே, இப்படத்தில் இடம்பெற்ற `ஹேப்பி நியூ இயர்..' பாடலைத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்போதைய சினிமாவின் குத்துப்பாட்டுக்கு முன்னோடி, இதே படத்தில் இடம்பெற்ற `நேத்து ராத்திரி யம்மா...' பாடல்தான். கமலும், சில்க் ஸ்மிதாவும் அந்தப் பாடலில் அடித்த லூட்டியை தமிழ்நாடே `உச்' கொட்டிப் பார்த்தது. ஒரு கிராமத்துக் கிணறு, தென்னைமரத் தோப்பு, கயிற்றுக் கட்டில் போட்டுக் கமலையும், அம்பிகாவையும் வைத்து `நிலா காயுது' என்ற கிளாமர் பாடலைப் படமாக்கினோம். இப்படி, முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் படமாக `சகலகலா வல்லவன்' உருவானது. 

இன்னொரு பக்கம் ரஜினி நடிக்கும் `எங்கேயோ கேட்ட குரல்' படப்பிடிப்பும் நடந்தது. திருமணமான ஒரு பெண் மனதில் சபலம் ஏற்பட்டால், அவள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, அவள் எப்படிப் பாதிக்கப்படுவாள், அவளது குடும்பத்தின் நிலை என்னவாகும்?! என்பதை உருக்கமாக விளக்கும் படம், `எங்கேயோ கேட்ட குரல்'. ரஜினி மனைவியாக வரும் அம்பிகா, கணவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் போய்விட்டார் என்பதற்காக, ஊரைவிட்டு தள்ளிவைத்துவிடுவார்கள். வெளியூருக்குச் சென்று அவமானப்பட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும்  அம்பிகா, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள குடிசையில் தங்கியிருப்பார். படத்தின் இறுதிக் காட்சியில் அம்பிகா தன்னைச் சந்திக்க வந்த அவரது அம்மாவிடம், `நான் உடலால ஒரு தப்பும் செய்யல; மனசால நினைச்சதே தப்புதான். ஒரு வாரத்துல நான் செத்துப்போயிடுவேன். அதுக்குள்ளே என் புருஷனைப் பார்க்கணும்' என்று கலக்கத்தோடு சொல்வார். ரஜினி அம்பிகாவைத் தேடி வருவார். அப்போது, `உங்க நிழலைத் தொட்டுக் கும்பிடக்கூட எனக்கு அருகதை இல்லை. நான் இறந்துட்டா, இறுதிச் சடங்குகளை ஒரு புருஷனா நீங்கதான் செய்யணும்' என்று கதறி அழுவார். அப்போது, 'நீ எப்போ செய்த தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டியோ, அப்பவே கடவுள் உன்னை மன்னிச்சுட்டார், நானும் மன்னிச்சுட்டேன். உன் விருப்பப்படி உனக்குச் செய்யவேண்டியதைச் செய்றேன்' என்று விரக்தியாகச் சொல்லிவிட்டுச் செல்வார். முழுக்க குடும்ப சென்டிமென்ட் படமாக இதை உருவாக்கினோம்.

"ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி.முத்துராமன் ஷேரிங்ஸ்

1982- ம் ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக ஒரேநாளில் `எங்கேயோ கேட்ட குரல்' படமும், `சகலகலா வல்லவன்' படமும்   வெளியானது. என் இயக்கத்தில் வெளிவந்த இந்த இரண்டு படங்களுமே மக்களிடையே வரவேற்பைப் பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது. அப்போது ஏவி.எம்.குமரன் சார், ``எங்கள் தயாரிப்பில் உருவான `எங்கேயோ கேட்ட குரல்' படத்திலும், `சகலகலா வல்லவன்' படத்திலும் உள்ள டைரக்டரின் டைட்டில் கார்டை எடுத்துவிட்டு, இரண்டு படங்களையும் திரையிட்டுக் காட்டினால், இரு படங்களையும் இயக்கியது ஒரே டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் என்பதையே யாருமே நம்பமாட்டார்கள். இரு படத்தையும் இருவேறு விதமாக இயக்கி எஸ்.பி.முத்துராமன் சாதனை படைத்துவிட்டார்" என்று சொன்னபோது, பெருமையாக இருந்தது. இதே கருத்தை அப்போது வெளிவந்த பத்திரிகைகள் சுட்டிக் காட்டியதையும், ரசிகர்கள் பாராட்டியதையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது.